MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Vinayagar Chaturthi Wishes in Tamil
Gowri Ganesha Festival Wishes in Tamil
Sevvai Peyarchi 2026
Guru Peyarchi 2027
Gajakesari Yoga
Venus Enters Swati Nakshatra
8th Pay Commission
Bigg Boss Tamil Season 10
Sun Mars Conjunction
8th Pay Commission DA Hike
Horoscope Predictions for All Zodiac Signs
8th Pay Commission News
India's Longest Non Stop Train
Instant Soft Idli Recipes
Samasaptaga Yoga
Ragi Food Recipes
  • Home
  • Tamil Nadu News
  • ஸ்டாலினுக்கு விழுந்த மரண அடி - திமுக கட்சியின் சரிவுக்கான காரணங்கள் என்ன தெரியுமா?

ஸ்டாலினுக்கு விழுந்த மரண அடி - திமுக கட்சியின் சரிவுக்கான காரணங்கள் என்ன தெரியுமா?

The Reasons Behind DMK Slump: 2026 சட்டமன்றத் தேர்தலில், திமுக கட்சி சரிவை சந்தித்துள்ள நிலையில், அதற்கான முக்கிய காரணங்கள் பற்றி பார்ப்போம்.

2 Min read
Author : Rsiva kumar
Published : May 04 2026, 05:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
திமுக சரிவின் பின்னணி:
Image Credit : X

திமுக சரிவின் பின்னணி:

தமிழக அரசியலில் நீண்ட கால வரலாற்றைக் கொண்ட கட்சிகளில் ஒன்று திமுக. 2021-ல் ஆட்சியைப் பிடித்து முதல்வராக ஏறிய திமுக தலைவர் முக ஸ்டாலின், 2026-ஆம் ஆண்டு தேர்தலிலும் பெரும்பான்மையோட ஆட்சியை திமுக பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த முறை யாரும் எதிர்பாராத விதத்தில், தவெக கட்சி பெரும்பான்மையான இடங்களில் முன்னிலையில் உள்ளது. திமுக கட்சி இதில் கோட்டை விட்டதா? சரிவின் பின்னணி குறித்து பார்ப்போம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
தமிழக வெற்றிக் கழகத்தின் எழுச்சி:
Image Credit : x

தமிழக வெற்றிக் கழகத்தின் எழுச்சி:

நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் 2026 தேர்தலில், ஒரு முக்கிய “X Factor” ஆக மாறியது. அரசியலில் பெரிதாக ஆர்வம் காட்டாத இளைஞர்கள் கூட தற்போது விஜய்யின் வருகையால் நேரடி அரசியல் ஈடுபட்டு, TVKக்கு ஆதரவு கொடுக்க துவங்கினர். இதனால் திமுகவின் பாரம்பரிய வாக்கு வங்கி சிதறி, பல தொகுதிகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள், திராவிடக் கட்சிகளுக்கு மாற்று ஆட்சியாக TVK-வை பார்க்கும் நிலையில், இதுவே திமுக கட்சியின் முக்கிய காரணமாக அமைந்தது.

37
ஆட்சிக்கு எதிரான அலை:
Image Credit : ANI

ஆட்சிக்கு எதிரான அலை:

ஆட்சியில் இருக்கும் எந்தவொரு கட்சியும் எதிர்கொள்ள வேண்டிய மிகப்பெரிய சவால் தான் “ஆட்சிக்கு எதிரான அலை”. திமுக அரசு நிர்வாகத்தின் போது நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள், குறிப்பாக நீட் தேர்வு ரத்து, பழைய ஓய்வூதியத் திட்டம் போன்றவைகள் மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் பால் விலை, மின் கட்டண உயர்வு மற்றும் சொத்து வரி போன்ற பொருளாதார சவால்கள் நடுத்தர மற்றும் ஏழை மக்களைக் அதிகம் பாதித்ததால், தேர்தல் நேரத்தில் வாக்குகள் மற்ற கட்சிக்கு போக காரணமாக அமைந்தது.

47
வாரிசு அரசியல் மற்றும் குடும்ப ஆதிக்கம்:
Image Credit : others

வாரிசு அரசியல் மற்றும் குடும்ப ஆதிக்கம்:

திமுக கட்சியின் மீது எதிர்க்கட்சிகள் பரப்பும் முக்கிய குற்றச்சாட்டு “வாரிசு அரசியல்”. உதயநிதி ஸ்டாலினின் அரசியல் வளர்ச்சி, அவருக்கு அளிக்கப்பட்ட துணை முதல்வர் பதவி போன்ற அம்சங்கள் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் இரண்டாம் கட்டத் தலைவர்களில் மறைமுக அதிருப்தியாக பார்க்கப்பட்டது. பொதுமக்களிடையே “குடும்ப ஆட்சி” என்ற பிம்பம் நடுநிலை வாக்காளர்களுக்கு சோர்வை ஏற்படுத்துகிறது, இதுவும் தேர்தல் முடிவுகளில் திமுகக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்.

57
சட்டம், ஒழுங்கு மற்றும் ஊழல் புகார்கள்:
Image Credit : others

சட்டம், ஒழுங்கு மற்றும் ஊழல் புகார்கள்:

அமைச்சர்கள் மற்றும் அதிகாரப்பூர்வ நபர்களின் மீதான ஊழல் புகார்கள், காவல் நடவடிக்கைகளில் குறைபாடுகள், கள்ளச்சாராய மரணங்கள் மற்றும் போதைப்பொருள் பிரச்சினைகள் போன்றவை, கட்சியின் நற்பெயரை கலங்கப்படுத்தியது. பெண்களின் பாதுகாப்பை பாதிக்கும் சம்பவங்கள் தொடர்பான எதிர்க்கட்சியின் பிரச்சாரம், திமுக கட்சியில் பெண்களுக்கு வரவிருந்த வாக்குகளை குறைத்துவிட்டது.

67
கூட்டணி நிலைமை பலவீனம்:
Image Credit : X/Twitter

கூட்டணி நிலைமை பலவீனம்:

2021 வெற்றிக்கு திமுக-மெகா கூட்டணி முக்கிய பங்காற்றியது. ஆனால் 2026 தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு இடையேயே பல கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது. கூட்டணி கட்சிகளுக்குள்ளேயே ஒற்றுமை இல்லாததே இதன் பலவீனமாக பார்க்கப்பட்டது.

77
அமைச்சர்களின் செயல்பாடு மற்றும் தொகுதி அதிருப்தி:
Image Credit : X/@arivalayam

அமைச்சர்களின் செயல்பாடு மற்றும் தொகுதி அதிருப்தி:

பல தொகுதிகளில் உள்ளூர் எதிர்ப்பு நிலவியது திமுகக்குப் பாதகமாக அமைந்தது. அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் பொதுமக்களை சந்திக்காமை, அடிப்படை பிரச்சினைகளை தீர்க்காமை, தொலைநோக்கில் கட்சியின் மதிப்பை பாதித்தது. இதுவும் திமுக கட்சியின் தோல்வி வாய்ப்பை அதிகப்படுத்தியது. குறிப்பாக திமுக தலைவர் முக ஸ்டாலினின் தோல்விக்கும் இதுபோன்ற விஷயங்கள் காரணமாக அமைந்தது என்பது அதிர்ச்சியின் உச்சம்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
மு. க. ஸ்டாலின்
திமுக
தேர்தல்
தேர்தல் முடிவு
டிவி.கே. விஜய்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
சென்னையில் 12,000 வலம்புரி சங்குகளால் உருவாக்கப்பட்ட 40 அடி விநாயகர் சிலை !
Recommended image2
Now Playing
திருச்சியில் இடி-மின்னலுடன் கொட்டித்தீர்த்த கனமழை: சுரங்கப்பாதையில் சிக்கிய அரசு பேருந்து!
Recommended image3
Now Playing
விநாயகர் சதுர்த்தி: திருச்சி தாயுமானசுவாமி திருக்கோயிலில் விமரிசையாக நடந்த சிறப்பு பூஜைகள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved