உச்சத்திலையே நீடிக்கும் முருங்கைக்காய், அவரைக்காய், வெண்டைக்காய் விலை- கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை என்ன.?
தைப்பூசம் உள்ளிட்ட தொடர் விஷேச நாட்கள் காரணமாக காய்கறிகளின் விலையானது சென்னை கோயம்பேடு சந்தையில் அதிகரித்துள்ளது. குறிப்பாக அவரைக்காய், கேரட், முருங்கைக்காய் விலை உச்சத்தில் உள்ளது.
தக்காளி விலை என்ன.?
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பீட்ரூட் 1 கிலோ 45க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 30க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
உச்சத்தில் அவரைக்காய் விலை
வாழைப்பூ ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 45க்கும், பாகற்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 65 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது
முருங்கைக்காய் விலை நிலவரம்
கேரட் ஒரு கிலோ 65 ரூபாய்க்கும், காலிபிளவர் 20 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 10 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 140 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
வெண்டைக்காய் விலை என்ன.?
மாங்காய் ஒரு கிலோ 150 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதையும் படியுங்கள்
வெளியேற்றப்பட்ட ஆம்னி பேருந்துகள்.. வெறிச்சோடிய கோயம்பேடு பேருந்து நிலையம்- பொதுமக்கள் அவதி