MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தமிழகத்தில் இத்தனை கோடி வாக்காளர்களா? அதிக, குறைவான மக்களைக் கொண்ட தொகுதி எது.?

தமிழகத்தில் இத்தனை கோடி வாக்காளர்களா? அதிக, குறைவான மக்களைக் கொண்ட தொகுதி எது.?

2025ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 6,36,12,950 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். சோழிங்கநல்லூர் தொகுதி அதிக வாக்காளர்களையும், கீழ்வேளூர் தொகுதி குறைந்த வாக்காளர்களையும் கொண்டுள்ளது.

2 Min read
Author : Ajmal Khan
| Updated : Jan 06 2025, 12:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
vote

vote

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

ஒவ்வொரு ஆண்டும் வாக்களார் பட்டியல் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 01.01.2025- தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு இறுதி வாக்காளர் பட்டியல் இன்று (06.01.2025) வெளியிடப்பட்டுள்ளது. இதன் படி  வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க,நீக்க,திருத்த,இடம் மாற்றம் செய்ய விண்ணப்பங்கள் 29.10.2024-ஆம் தேதியிலிருந்து 28.11.2024-ஆம் தேதிவரை பெறப்பட்டன.

மேற்கண்ட சிறப்பு சுருக்கமுறை திருத்த காலத்தின்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தலுக்காக 14.02.132 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவற்றில் 13.80.163 விண்ணப்பங்கள்(ஆண்கள் 6.18.383 பெண்கள் 7.61.483: மூன்றாம் பாலினத்தவர் 297) ஏற்கப்பட்டு பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

26

தமிழகத்தில் வாக்காளர்கள்.?

பெயர் நீக்கலுக்காக 5,16,940 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவற்றில் 4,97,800 வாக்காளர்களின் பெயர்கள் இடப்பெயர்ச்சி (3.72.872) இறப்பு(1.09,131)மற்றும் இரட்டைப் பதிவு (15.797)ஆகிய காரணங்களுக்காகநீக்கப்பட்டுள்ளன. மேலும், 2,15,244 வாக்காளர்களின் பதிவுகளில் (ஆண்கள் 1.13.399. பெண்கள் 1,01,750: மூன்றாம் பாலினத்தவர் 35) திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

சிறப்பு சுருக்க முறைத் திருத்தத்தின் ஒருங்கிணைக்கப்பட்டஇறுதி வாக்காளர் பட்டியலின்படி தமிழ்நாட்டில் 6,36,12950 வாக்காளர்கள் (ஆண் வாக்காளர்கள் 3,11,74,027: பெண் வாக்காளர்கள் 3,24,29,803 மற்றும் மூன்றாம் பாவினத்தவர் 9,120 பேர்) பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

36
vote

vote

அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதி எது.?

மேலும், ஒருங்கிணைக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்களைக் கொண்டுள்ளது.

 . இத்தொகுதியில் மொத்தம் 6,90,958 வாக்காளர்கள் உள்ளனர். (ஆண்கள் 3.45,184: பெண்கள் 3.45,645; மூன்றாம் பாலினத்தவர் 129).  தமிழ்நாட்டிலேயே குறைந்த அளவு வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக நாகப்பட்டிணம் மாவட்டத்திற்குட்பட்ட  கீழ்வேளூர்சட்டமன்றத் தொகுதி உள்ளது. இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 1.76.505ஆவர். (ஆண்கள் 86.456: பெண்கள் 90.045: மூன்றாம் பாலினத்தவர்4).

46

குறைவான வாக்காளர்களை கொண்ட தொகுதி.?

இதற்கு அடுத்தப்படியாக இரண்டாமிடத்தில் சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 18-துறைமுகம்சட்டமன்ற தொகுதி உள்ளது. இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 1,78,980-ஆவர் (ஆண்கள் 92,615 பெண்கள் 86,296: மூன்றாம் பாலினத்தவர் 69).

வாக்காளர் பட்டியலினை, தலைமைத் தேர்தல் அதிகாரியின் வலைதளமான https://elections.tn.gov.in என்ற வலைதளத்திலும் காணலாம். அதில் வாக்காளர்கள் தங்கள் பெயரைச் சரிபார்த்துக் கொள்ளலாம்.

56
open vote

open vote

பெயர்களை சேர்த்துக்கொள்ளலாம்

வாக்காளர் பட்டியல் தொடர் திருத்த நடைமுறை தற்போது செயல்பாட்டிலுள்ளது (06.01.2025) 01.01.2025 அன்று 18 வயது திரம்பிய தகுதியுள்ள நபர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் இருந்தால் விண்ணப்பிக்கலாம்

66
Voter List

Voter List

வாக்காளர் பட்டியல் நகல்கள்

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, இரண்டு அச்சிடப்பட்ட வாக்காளர் பட்டியல் நகல்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்குமாறு அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒருங்கிணைக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியாலின் மென் நகலினை (புகைப்படமின்றி) வாக்காளர் பதிவு அலுவலரிடமிருந்து ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு ரூ.100/-வீதம் கட்டணம் செலுத்தி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
முதல்வர் பதவியே கொடுத்தாலும் கூட்டணி இல்லை.. தனித்து தான் போட்டி..! களத்தை அதிரவிடும் தவெக
Recommended image2
ஓயாமல் அடிச்சு ஊத்தப்போகும் மழை.. என்ன காரணம்? தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன குளு குளு அப்டேட்
Recommended image3
Now Playing
சிலிண்டர் கிடைக்காததற்கு மோடி அய்யா - வா காரணம்? ஈரான் மற்றும் உலக நாடுகளை தான் கேட்க வேண்டும்...
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved