இனி 5 லட்சம் அல்ல 10 லட்சம் ரூபாய்.! அதிரடியாக உயர்த்தி அறிவிப்பை வெளியிட்ட மின்சார வாரியம்
புயல், கனமழை போன்ற காலங்களில் மின்கசிவு அல்லது மின்கம்பி அறுந்து விழுந்து விபத்துகள் ஏற்படும் போது உயிரிழப்பவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மின்சாரம் தாக்கி உயிர் பிழைத்தவர்களுக்கும் நிவாரணத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது.
tneb
நவீன காலம்- மின்சார தேவை
நவீன காலத்தில் மின்சார இல்லாமல் வாழ முடியாத நிலை உருவாகியுள்ளது. அந்த அளவிற்கு மின்சாரம் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. சமையல் சமைப்பது முதல் பைக், கார்கள், ரயில்கள் இயக்குவது வரை மின்சாரம் முக்கிய தேவையாக உள்ளது. முன்பெல்லாம் மின்சாரம் கட் ஆகினால் மக்கள் மீண்டும் மின்சாரம் வரும் வரை காத்திருப்பார்கள். ஆனால் தற்போதோ அடுத்த ஒரு சில நிமிடங்களில் மின்சார வாரியத்திற்கு போன் செய்வது மட்டுமல் எக்ஸ் தளத்திலும் புகார்களை பதிந்து வருகிறார்கள்.
tneb problem
மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
எனவே மின்சாரம் இல்லாத கிராமமே இல்லாத நிலை உருவாகிவிட்டது. அந்த அளவிற்கு மின்சாரம் கிராமங்கள் வரை சென்றுள்ளது. அதே நேரத்தில் மின்சாரத்தால் விபத்துகளும் நாள் தோறும் நடைபெற்று வருகிறது. மின்சாரம் தாக்கி உயிரழப்புகளும் தொடர்கிறது. மேலும் புயல் மழை காலங்களில் மின் வயர்கள் அறுந்து விழுந்து விபத்துகளும் ஏற்பட்டு அப்பாவி மக்கள் உயிரிழக்கிறார்கள். இதற்காக தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக நிவாரண உதவி வழங்கப்படுகிறது. தற்போது இந்த நிவராண உதவி தொகையை இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
tneb bill
மின்சாரம் தாக்கி பலி- நிவாரண உதவி அதிகரிப்பு
இது தொடர்பாக மின்சாரம் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், புயல்,கனமழை போன்ற காலங்களில் மின்கசிவு ஏற்பட்டும், மின் கம்பி அறுந்து விழுந்தும் அவ்வப் போது விபத்துகள் நிகழ்கின்றன. இதுபோன்ற பொது இடங்களில் ஏற்படும் மின் விபத்துகளில் சிக்கி உயிரிழப்பவர்களின் குடும்பத்தினர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை 5 லட்சம் ரூபாயில் இருந்து ரூ. 10 லட்சமாக மின்வாரியம் உயர்த்தியுள்ளது.
TNEB rain work
இரண்டு மடங்காக உயர்ந்த நிவாரணம்
மின்சாரம் தாக்கி உயிர் பிழைத்தவர்களுக்கு 2 கண்கள் அல்லது கை, கால்கள் இழந்திருந்தால் அவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் தலா ரூ. 2 லட்சத்திலிருந்து ரூ. 3 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு கண் அல்லது ஒரு கை, கால் இழந்தவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் தலா 1 லட்சம் ரூபாயில் இருந்து 1.50 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் மின் விபத்துகளால், உயிரிழந்த கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் தலா ரூ.25,000 நிவாரணத் தொகையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை