MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • TN Rain Alert: உஷார் மக்களே! அடுத்த 3 மணிநேரத்தில் இந்த 24 மாவட்டங்களில் பிச்சு உதற போகுதாம் மழை!

TN Rain Alert: உஷார் மக்களே! அடுத்த 3 மணிநேரத்தில் இந்த 24 மாவட்டங்களில் பிச்சு உதற போகுதாம் மழை!

TN Rain Alert: வட தமிழக கடலோர பகுதிகளில் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை உட்பட பல மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு. வங்கக்கடலில் வரும் 23ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு.

1 Min read
Author : vinoth kumar
Published : Oct 20 2024, 08:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

தென் மேற்கு பருவமழை முடிவடைந்து வட கிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால், தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட வட மாநிலங்களில் பெரும்பாலான இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. 

26

இந்நிலையில் வட தமிழக கடலோர பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிழவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 தினங்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். 

36

மேலும் வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், கரூர், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில், காரைக்கால் பகுதியில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

46
chennai rain

chennai rain

அதேபோல் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்திருந்தது. 

56

 இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில்  அதாவது இரவு 10 மணிவரை  சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது. 

66

இதனிடையே வங்கக்கடலில் வரும் 23ம் தேதி புயல் உருவாக உள்ளதாகவும் இந்த புயலுக்கு டானா என பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கனமழை
சென்னை வானிலை ஆய்வு மையம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
சூரியனுக்கு 'டாட்டா'.. தமிழகத்தை குளிர்விக்கப் போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள்? ஜில் அப்டேட்!
Recommended image2
Now Playing
அதிகாரிகளே மனசுல வச்சுக்கோங்க! ரெய்டு செஞ்சதை சொல்லுங்கப்பா மக்கள்கிட்ட! | Selva Perunthagai Speech
Recommended image3
Now Playing
Gold Rate Drop: தங்கம், வெள்ளி விலையில் திடீர் மாற்றம்! மார்க்கெட்டில் என்ன நடக்குது?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved