MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • அரசு பேருந்தில் முன்பதிவு செய்தால் பயணிகளுக்கு 10000 ரூபாய் பரிசு! கோடை காலத்திற்காக சிறப்பு குலுக்கல்!

அரசு பேருந்தில் முன்பதிவு செய்தால் பயணிகளுக்கு 10000 ரூபாய் பரிசு! கோடை காலத்திற்காக சிறப்பு குலுக்கல்!

TNSTC பேருந்துகளில் ஆன்லைன் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்படுகின்றன. சிறப்பு குலுக்கலில் 75 பயணிகள் தேர்வு செய்யப்பட்டு இலவச பயண சலுகைகள் வழங்கப்படும்.

2 Min read
Author : vinoth kumar
| Updated : Mar 26 2025, 12:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகளில், ஆன்லைன் முன்பதிவு திட்டத்தின் மூலம் முன்பதிவு செய்யும் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி சிறப்பு குலுக்கல் முறையில் 75 பயணிகளை தேர்வு செய்து சிறப்பு பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
ஆன்லைன் மூலம் பயணச்சீட்டு முன்பதிவு

ஆன்லைன் மூலம் பயணச்சீட்டு முன்பதிவு

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் தொலைதூர பயணம் மேற்கொள்ளும் பயணிகள் பயணச்சீட்டுகளை எளிதாக முன்பதிவு செய்யும் வகையில், ஆன்லைன் மூலம் பயணச்சீட்டு முன்பதிவு முறை (OTRS) உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் பயணிகள் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் உட்பட 7 தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் மூலம் பயணம் செய்து பயன் பெறுகின்றனர்.

37
மாதாந்திர குலுக்கல் முறையில் பரிசு

மாதாந்திர குலுக்கல் முறையில் பரிசு

இந்த முன்பதிவு முறையானது தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் இணையதளம், https://www.tnstc.in, மற்றும் TNSTC Mobile App வழியாக செயல்படுகிறது. தற்போது, பயணிகள் 90 நாட்கள் முன்னரே முன்பதிவு செய்யும் வசதியுள்ளது. தினசரி சுமார் 20,000 இருக்கைகள் பயணிகளால் முன்பதிவு செய்யப்படுகின்றன. பொதுமக்களின் அமோக வரவேற்புடன் செயல்படுகின்ற இத்திட்டத்தினை மேலும் அதிக பயணிகள் பயன்பெறும் வகையில் பிரபலப்படுத்த 2024 ஜனவரி முதல், வார இறுதி நாட்கள், திருவிழாக்கள் மற்றும் சிறப்பு நாட்கள் தவிர்த்து இதர நாட்களில் பயணிக்க முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு மாதாந்திர ‘குலுக்கல் முறை’ மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

47
மாதாந்திர குலுக்கல் முறை

மாதாந்திர குலுக்கல் முறை

அதனைத் தொடர்ந்து, 2024 நவம்பர் மாதம் முதல் வாரத்தின் அனைத்து நாட்களிலும் பயணம் செய்ய முன்பதிவு செய்யும் அனைத்து பயணச்சீட்டுகளும் மாதாந்திர குலுக்கல் முறைக்கு தகுதி பெறும் வகையில், இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, ஒவ்வொரு மாதமும் 13 வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு தலா ரூ.10,000-மூம், மற்ற பத்து வெற்றியாளர்களுக்கு தலா ரூ.2,000-ம் வழங்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: தொடர்ந்து வரும் 4 நாள் விடுமுறை.! குஷியான அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை

57
இலவச பயண சலுகை

இலவச பயண சலுகை

மேலும், ஆன்லைன் முன்பதிவு திட்டத்தில் முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், கடந்த 2024 நவம்பர் 21 முதல் 2025 ஜனவரி 20ம் தேதி வரை பயணம் செய்த 3 முன்பதிவு பயணிகள், ‘சிறப்பு குலுக்கல்’ முறையில், தேர்வு செய்யப்பட்டு உயர் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்பட உள்ளன. பொதுமக்கள் முன்பதிவு வசதியினை மேலும் அதிக அளவில் பயன்படுத்தும் வகையில் இந்தாண்டு கோடை காலத்திற்காக ஒரு சிறப்பு குலுக்கல் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முன்புதிவு செய்து ஏப்ரல் 1ம் தேதி முதல் ஜூலை 15ம் தேதி வரை பயணம் செய்யும் 75 பயணிகள் சிறப்பு குலுக்கல் முறையில், தேர்வு செய்யப்பட்டு இலவச பயண சலுகை பின்வருமாறு வழங்கப்படும்.

67
முன்பதிவு வசதி

முன்பதிவு வசதி

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழப்பேருந்துகளில் முன்பதிவு வசதியுள்ள அனைத்து வகை பேருந்துகளிலும் முன்பதிவு செய்து ஒரு வருடத்திற்கு 20 முறை இலவச பயணம் (01/07/2025 முதல் 30/06/2026 வரை) 25 நபர்களுக்கு முதல் பரிசாகவும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழப்பேருந்துகளில் முன்பதிவு வசதியுள்ள அனைத்து வகை பேருந்துகளிலும் முன்பதிவு செய்து ஒரு வருடத்திற்கு 10 முறை இலவச பயணம் (01/07/2025 முதல் 30/06/2026 வரை) 25 நபர்களுக்கு இரண்டாம் பரிசாகவும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழப்பேருந்துகளில் முன்பதிவு வசதியுள்ள அனைத்து வகை பேருந்துகளிலும் முன்பதிவு செய்து ஒரு வருடத்திற்கு 5 முறை இலவச பயணம் (01/07/2025 முதல் 30/06/2026 வரை) 25 நபர்களுக்கு மூன்றாம் பரிசாகவும் வழங்கப்படவுள்ளது.

77
சிறப்பு பரிசுகள்

சிறப்பு பரிசுகள்

எனவே பொதுமக்கள், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகள் மூலம் பயணம் செய்ய முன்பதிவு செய்து, கடைசி நேர சிரமங்களை தவிர்த்து எளிதாக பயணம் செய்யவும், மேற்கண்ட சிறப்பு பரிசுகளை வெல்லவும் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அரசு பேருந்து
தமிழ்நாடு
தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு பேருந்து
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
மதுரையில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சரமாரி கேள்வி! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
Recommended image2
Now Playing
சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு... பெண்கள் பாதுகாப்பு எங்கே? தவெக அரசை கடுமையாக தாக்கிய எம்பி கனிமொழி!
Recommended image3
Now Playing
சென்னையில் திமுக எம்பி கனிமொழி தலைமையில் பிரம்மாண்ட போராட்டம்! தவெக அரசுக்கு எதிராக முழக்கம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved