சென்னையில் எத்தனை நாள் மழை பெய்யும்.! குட் நியூஸ் சொன்ன தமிழ்நாடு வெதர்மேன்
வடகிழக்கு பருவமழையின் அடுத்த கட்டம் தொடங்கியுள்ளது. சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் இரவு முழுவதும் மழை பெய்து வருகிறது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இலங்கை தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து வருவதால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும்.
Tamilnadu rain
வடகிழக்கு பருவமழை தீவிரம்
வடகிழக்கு பருவமழையின் அடுத்த ஆட்டம் தொடங்கியுள்ளது. அந்த வகையில் சென்னை மட்டுமில்லாமல் டெல்டா மாவட்டங்களில் இரவு முழுவதும் மழை கொட்டி வருகிறது. இது தொடர்பாக வானிலை ஆய்வும மையம் கூறுகையில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது இலங்கை தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.
tamilnadu rain today
கொட்டித்தீர்த்த மழை- பள்ளிகளுக்கு விடுமுறை
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் இன்று அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. மேலும் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கோயம்புத்தூர், திருப்பூர், கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, ராமநாதபுரம், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது
chennai rain
சென்னைக்கு இன்றே கடைசி
இந்த நிலையில் தனியார் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள பதிவில், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள (KTCC ) இரவில் இருந்து நல்ல மழை பெய்கிறது, மேகக் கூட்டங்கள் தொடர்ந்து நகர்வதால் மேலும் கூடுதல் மழை பெய்ய வாய்ப்பு. ஒவ்வொரு மழைக்கும் இடையே இடைவேளை இருக்கும், இதனால் சென்னைக்கு பாதிப்பில்லாத மழையாக இருக்கும். இந்த தாழ்வு பகுதியில் இன்றை சென்னைக்கு கடைசி மழையாகும். எனவே மழையை அனுபவியுங்கள் என கூறியுள்ளார்.
tamilnadu rain alert
குடை எடுத்துட்டு போக மறந்துடாதீங்க
தற்போது அடுத்த மேக கூட்டங்கள் சென்னைக்குள் நகர்கிறது. சென்னை முழுவதும் காலை 8.30 மணிக்குள் நல்ல மழை பெய்யும். ஸ்கூல், ஆபீஸ் போகும் போது மழை பெய்யும். ரெயின் கோட்களுடன் தயாராக செல்லுங்கள் என கூறினார்.
டெல்டா மாவட்டங்களிலும் கன மழை பெய்கிறது. வளைகுடா மன்னார் வழியாக நெல்லை வழியாக கேரளா நோக்கி காற்றழுத்த தாழ்வு தற்போது நருகம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பருவமழை சரியில்லாத பகுதியான தூத்துக்குடி நெல்லை தென்காசி விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என கூறியுள்ளார்.