MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Tamil Nadu Weather Update: தமிழகத்தில் ஒரு வாரம் வெளுக்கப்போகும் கனமழை.. சென்னையிலும் வெயிலுக்கு ரெஸ்ட்!

Tamil Nadu Weather Update: தமிழகத்தில் ஒரு வாரம் வெளுக்கப்போகும் கனமழை.. சென்னையிலும் வெயிலுக்கு ரெஸ்ட்!

Tamil Nadu Weather Update: தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் 1 வாரத்துக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

3 Min read
Author : Rayar r
Published : May 09 2026, 07:13 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
Image Credit : x

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஒரு வாரத்துக்கு கனமழை கொட்டித் தீர்க்க உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது சுமார் 1.5 கிமீ உயரத்தில், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய கேரள கடல்பகுதிகளுக்கு அப்பால் உள்ள லட்சத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. 

சுமார் 5.கிமீ உயரம்வரை 8, மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்ச்சி நிலவுகிறதுஇதன் காரணமாக தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 11ஆம் தேதி வாக்கில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.

சுமார் 0.9 கிமீ உயரத்தில், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய கேரள கடல்பகுதிகளுக்கு அப்பால் உள்ள லட்சத்தீவு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்ச்சி முதல் மரத்வாடா வரை கடலோர கர்நாடகா, வட உள்கர்நாடகா மற்றும் மத்திய மகாராஷ்ட்ரா வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
டெல்டா மாவட்டங்கள்
Image Credit : Asianet News

டெல்டா மாவட்டங்கள்

இதன் காரணமாக மே 9ம் தேதியான இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையிலும் மழை

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.

Related Articles

Related image1
கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு வாரத்திற்கு ஓயாமல் மழை அடிச்சு ஊத்த போகுதாம்.. வானிலை மையம் முக்கிய அப்டேட்!
Related image2
மதுரை டூ நீலகிரி.. 15 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை.. வெயிலுக்கு ரெஸ்ட்!
34
நெல்லை, கன்னியாகுமரி
Image Credit : our own

நெல்லை, கன்னியாகுமரி

மே 10ம் தேதி தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.

11ம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.

வடமாவட்டங்களில் மழை

12ம் தேதி தமிழகம் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

13ம் தேதி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிபேட், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக் குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

44
சென்னை, செங்கல்பட்டு
Image Credit : Asianet News

சென்னை, செங்கல்பட்டு

14ம் தேதி திருவண்ணாமலை, விழுப்புரம், மயிலாடுதுறை, கடலூர் தஞ்சாவூர் மாவட்டங்கள், மற்றும் புதுவை பகுதிகளில் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன முதல் மிககன மழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருப்பத்துர், ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர, ராணிபேட், வேலூர் மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
வானிலை அறிக்கை
மழை செய்திகள்
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
தவெகவுக்கு விசிக ஆதரவு.. மெஜாரிட்டி கிடைச்சாச்சு.. முதல்வராகும் விஜய்..திருமா போட்ட கண்டிஷன் இதுதான்
Recommended image2
Now Playing
TVK : இழுத்தடிக்கும் திருமா... தவெக MLA-களுக்கு பறந்த முக்கிய உத்தரவு - என்ன செய்யப்போகிறார் விஜய்?
Recommended image3
ஆளுநருக்கு வழிக்கி கொண்டு தவெக எடுத்த அதிரடி முடிவு.. அப்படினா.. விஜய் முதல்வராகுவது உறுதி?
Related Stories
Recommended image1
கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு வாரத்திற்கு ஓயாமல் மழை அடிச்சு ஊத்த போகுதாம்.. வானிலை மையம் முக்கிய அப்டேட்!
Recommended image2
மதுரை டூ நீலகிரி.. 15 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை.. வெயிலுக்கு ரெஸ்ட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved