MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மாணவர்களுக்கு ரூ. 20ஆயிரம் மதிப்பிலான இலவச லேப்டாப்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான தகவல்

மாணவர்களுக்கு ரூ. 20ஆயிரம் மதிப்பிலான இலவச லேப்டாப்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான தகவல்

தமிழகத்தில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தின்  தொழில்நுட்ப விவரக்குறிப்புகள், மென்பொருள் ஆலோசனைகள் மற்றும் விநியோகத் திட்டம் தயாராகி உள்ளதாக தலைமைச் செயலாளர் தெரிவித்தார்.

2 Min read
Author : Ajmal Khan
Published : May 20 2025, 07:14 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்
Image Credit : our own

கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்

தமிழகத்தில் மாணவர்களுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கல்வி உதவித்தொகை, இலவச பேருந்து பயணம், காலை மற்றும் மதிய உணவு திட்டம், இலவச மிதிவண்டி என பல திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் நவீன தொழில்நுட்ப வளர்சிக்கு ஏற்ப கல்வி திட்டங்களும் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

 அந்த வகையில் தமிழகத்தில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு ரூ. 20 ஆயிரம் மதிப்பில் மடிக்கணினி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த திட்டத்தால் மாணவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். எனவே இந்த திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என எதிர்பார்த்து காத்துள்ளனர்.

24
மடிக்கணினி திட்டத்திற்கு அரசாணை வெளியீடு
Image Credit : our own

மடிக்கணினி திட்டத்திற்கு அரசாணை வெளியீடு

அந்த வகையில் இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் தொடர்பாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் பணி குறித்த உயர் நிலைக்குழுவின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அரசு உயர் நிலைக் குழுவினருடன் ஆய்வு மேற்கொண்டார். இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர் பேசுகையில், மடிக்கணினி வழங்கும் திட்டத்தை செயல்படுத்த உயர்கல்வித் துறையின் மூலம் 22.4.2025 அன்று அரசாணை வெளியிடப்பட்டது.

Related Articles

Related image1
College Student: குட் நியூஸ்! மாணவர்களுக்கு ரூ.10,000 நிதியுதவி! வெளியான சூப்பர் அறிவிப்பு!
Related image2
reliance jio laptop launch date: ரிலையன்ஸ் ஜியோ லேப்டாப் வருது! இவ்வளவுதான விலை?
34
மடிக்கணினியில் என்ன ஸ்பெஷல்.?
Image Credit : Getty

மடிக்கணினியில் என்ன ஸ்பெஷல்.?

மேலும், இத்திட்டத்தை செயல்படுத்த அரசு உயர் அலுவலர்கள், அண்ணா பல்கலைக்கழகம், ஐ.ஐ.டி மெட்ராஸ், ஒன்றிய அரசின் தேசிய தகவலியல் நிறுவனம் (NIC), தமிழ்நாடு மின் ஆளுமை முகமை (TNeGA), தமிழ்நாடு மின்னணு நிறுவனம் (ELCOT) உள்ளிட்டவற்றின் தொழில்நுட்ப வல்லுநர்கள் இடம் பெற்றுள்ள தொழில்நுட்ப தரநிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப தரநிலைக் குழுவினர் இதுவரை 7 கூட்டங்கள் நடத்தி இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட உள்ள மடிக்கணினியின் செயல்திறன், நினைவகத்தின் அளவு (STORAGE), (SOFTWARE), மின்கலத்தின் (பேட்டரி) திறன், வன்பொருட்கள் (HARDWARE) உள்ளிட்ட தொழில்நுட்பச் வரையறுக்கப்பட்டுள்ளன. சாதனங்களுக்கான விவரக்குறிப்புகள்

44
மடிக்கணினி வாங்க ஒப்பந்தபுள்ளி
Image Credit : Getty

மடிக்கணினி வாங்க ஒப்பந்தபுள்ளி

மேலும் மென்பொருள் தொடர்பாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் சார்பில் புகழ்பெற்ற மென்பொருள் நிறுவனங்களுடன் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. ஒப்பந்தப்புள்ளி மதிப்பீட்டுக் குழுவினர் ஒப்பந்தப் புள்ளி ஆவணத்தை தயார் செய்து சமர்பித்தவுடன் ஒப்பந்தபுள்ளி தொடர்பான செயல்பாடுகள் விரைந்து மேற்கொள்ளப்படும். மேலும் மடிக்கணினிகளை கல்லூரி மாணவர்களுக்கு வழங்கிடும் பணிகளை விரைந்து மேற்கொள்ள விநியோகத் திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது என்று தலைமைச் செயலாளர் அவர்கள் தெரிவித்தார்.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
கல்லூரி
தமிழ்நாடு அரசு
உதயநிதி ஸ்டாலின்
கல்வி

Latest Videos
Recommended Stories
Recommended image1
தமிழக அரசியலில் ட்விஸ்ட்.. புதிய கட்சி தொடங்கினார் சசிகலா.. எம்.ஜி.ஆர், ஜெ., படங்களுடன் கொடி!
Recommended image2
26 வயது அபிராமி இருந்த அந்த கோலம்! நேரில் பார்த்த கணவருக்கு நடந்த அதிர்ச்சி.! போலீஸ் விசாரணையில் பகீர்!
Recommended image3
21 தான் தர முடியும்.. இஷ்டம்னா இருங்க இல்லைனா.. கெத்து காட்டும் திமுக.. புலம்பும் கதர்சட்டைகள்!
Related Stories
Recommended image1
College Student: குட் நியூஸ்! மாணவர்களுக்கு ரூ.10,000 நிதியுதவி! வெளியான சூப்பர் அறிவிப்பு!
Recommended image2
reliance jio laptop launch date: ரிலையன்ஸ் ஜியோ லேப்டாப் வருது! இவ்வளவுதான விலை?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved