MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ஒரே வாரத்தில் பல லட்சம் சம்பாதிக்க சான்ஸ்.! பட்டாசு கடை வைக்க விண்ணப்பிப்பது எப்படி.? வெளியான அறிவிப்பு

ஒரே வாரத்தில் பல லட்சம் சம்பாதிக்க சான்ஸ்.! பட்டாசு கடை வைக்க விண்ணப்பிப்பது எப்படி.? வெளியான அறிவிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க அக்டோபர் 19ஆம் தேதிக்குள் https://www.tneseval.tn.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். உரிமம் பெறாமல் பட்டாசு விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

2 Min read
Author : Ajmal Khan
Published : Oct 04 2024, 08:06 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14


தீபாவளி வண்ண பட்டாசு

தீபாவளி என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது பட்டாசு தான், அந்த அளவிற்கு தீபாவளி தினத்தில் வண்ண வண்ண கலரில் பட்டாசு வெடித்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கொண்டாடுவார்கள். தமிழகத்தில் பட்டாசு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த ஆண்டு பல வகைகளில் பல விலைகளில் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டுள்ளது. ஐபோன் பட்டாசு, கோழி பட்டாசு என விதவிதமாக விற்பனைக்கு வந்துள்ளது. சிவகாசியில் பட்டாசு தயாரிக்கும் குடோனில் குறைந்த விலையில் பட்டாசுகள் வாங்கி ஆண்டுதோறும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சின்ன, சின்ன கடைகள் அமைத்து விற்பனை செய்யப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

தற்காலிக பட்டாசு கடை தொடங்குவது எப்படி.?

ஒரு பட்டாசின் விலையானது சிவகாசியை விட 50 முதல் 100 ரூபாய் வரை அதிகமாகவே சிறிய கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. சுமார் ஒரு வாரம் மட்டுமே நடைபெறும் இந்த பட்டாசு விற்பனை மூலம் குறைந்தது 10ஆயிரம் ரூபாய் முதல் பல லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்க முடியும். இதன் காரணமாகவே தெருவிற்கு தெரு பட்டாசு கடைகள் தொடங்கப்படும்.

இதனை கட்டுப்படுத்துவதற்காகவும், பட்டாசு கடை வைக்க அனுமதி வழங்குவது தொடர்பாகவும் தமிழக அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.  அதன் படி தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் 31ஆம் தேதி அன்று கொண்டாடப்பட உள்ள தீபாவளிப் பண்டிகையையொட்டி அனைத்து பகுதிகளில் தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க விரும்புவோர், விதி எண் 84-ல் தெரிவிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளின்படி இணையதளம் (online) வழியாக அக்டோபர் 19ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.  

34

ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி.?

தமிழகத்தில் அனைத்து மாவட்டத்திலுள்ள  இ சேவை மையங்களில்  https://www.tneseval.tn.gov.in என்ற இணையதளத்தில் வாயிலாக உரிய ஆவணங்களோடு பட்டாசு கடைக்கு அனுமதி கோரி விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே தற்காலிக பட்டாசு உரிமம் பெற பிற மாவட்டங்களில் உள்ளது போல் இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கும் வழிமுறை சென்னை காவல் துறையின் மண்டலங்களான கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு, ஆவடி மற்றும் தாம்பரம் மண்டலங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

எனவே பட்டாசு கடை அமைப்பதற்கு அனுமதி கோரிய விண்ணப்பங்களை அக்டோபர் 19ஆம் தேதிக்குள்  இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அதன் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என உறுதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

44
Online Crackers

Online Crackers

கடைசி தேதி எப்போது.?

பட்டாசு கடை வைக்க அனுமதிக்கான விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டதெனில், அல்லது தற்காலிக உரிம ஆணையையும், நிராகரிக்கப்பட்டதெனில், அதற்கான உரிமத்தை இணையதளம் வாயிலாகவே மனுதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் அனுமதியின்றி / உரிமம் பெறாமல் பட்டாசு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 இந்த நிலையில்  தற்காலிக பட்டாசுக்கடை அமைக்க உரிமம் கோரி விண்ணப்பம் அளிப்போர். பொதுமக்களுக்கு சிரமம் இல்லாத ஆட்சேபணையற்ற மற்றும் பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்து விண்ணப்பிக்குமாறும், விபத்தில்லாத மகிழ்ச்சியான தீபாவளிப் பண்டிகையை கொண்டாடிட ஒத்துழைப்பு தருமாறு தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது. 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு அரசு
 
2nd TEST • PAK vs SL 2026
PAKPAK
Tue, 17 Nov, 2026
SLSL
10:00 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
AUSAUS
Wed, 18 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
abandoned
NZNZ
-
INDIND
-
Match abandoned
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
434 & 284/8
SLSL
446
Match drawn
Schedule ›
15th T20 • WBBLT20
Result
SS-WSS-W
162/2
ST-WST-W
158
Sydney Sixers Women Won by 9 runs (D/L) method
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Aadhaar No Longer Mandatory: ஆதார் இல்லையா? கவலை வேண்டாம்! இனி இந்த 6 ஆவணங்கள் இருந்தாலே போதும்!
Recommended image2
Cyclone Akwan: 145 கி.மீ வேகத்தில் வீசும் சூறைக்காற்று; ஆந்திராவில் கரையை கடக்கிறது 'அக்வான்' புயல்; தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை?
Recommended image3
CM Vijay: ராகுல் பக்கத்தில் விஜய்.. பின்னால் போன டி.கே. சிவக்குமார்! சோனியா விழாவில் நடந்தது என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved