MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • கை நிறைய பணம் கொட்டும் சொந்த தொழில்.! 3 நாட்கள் சிறப்பு பயிற்சி- தமிழக அரசு அழைப்பு

கை நிறைய பணம் கொட்டும் சொந்த தொழில்.! 3 நாட்கள் சிறப்பு பயிற்சி- தமிழக அரசு அழைப்பு

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில் 3 நாட்கள் தினை வகைகள் கொண்டு பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சி அளிக்கிறது. பயிற்சியில், பல்வேறு வகையான குக்கீகள், ரொட்டி, கேக், பீட்சா போன்றவற்றை தயாரிப்பது குறித்து கற்றுத்தரப்படும்.

2 Min read
Author : Ajmal Khan
Published : Jan 21 2025, 01:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

தொழில் முனைவோர் பயிற்சி

தமிழக அரசு சார்பாக வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் படி தனியார் நிறுவனங்களோடு இணைந்து வேலைவாய்ப்பு வழங்கி வருகிறது. இது மட்டுமில்லாமல் சொந்த தொழில் செய்ய விரும்புபவர்களுக்காகவும் பயிற்சியை தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பேக்கரி தொழில் பயிற்சி, பினாயில், வாசனை திரவியம், சோப் ஆயில் தொடர்பான பயிற்சியையும் வழங்கப்படுகிறது.

26

தினை பேக்கரி பயிற்சி

இந்த நிலையில் தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில், 3 நாட்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் தினை வகைகள் கொண்டு பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சி வரும் 28.01.2025 முதல் 31.01.2025 தேதி வரை காலை 9.30 மணி முதல் மதியம் 6.00 மணி வரை நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் பேக்கரி பொருட்களின் ராகி நெய் குக்கீகள், சத்துமாவு குக்கீகள், கோதுமை தேங்காய் குக்கீகள்,

36

தினை வகைகள்

முத்து சோக்கோ தினை குக்கீகள் (கம்பு), கோடோ முந்திரி தினை குக்கீகள் (வரகு), சிறிய முந்திரி தினை குக்கீகள் (சாமை), சோளம் பிஸ்தா குக்கீகள் (சோலம்), பர்னார்ட் ஜீரா குக்கீகள் (குதிரைவாளி), மசாலா குக்கீகள், முழு கோதுமை ரொட்டி, பழ ரொட்டி, ராகி தினை ரொட்டி, பல தானிய ரொட்டி, ராகி சாக்கோ ரொட்டி,  

 

46

பேக்கரி வகுப்புகள்

ராகி பிரவுனி, குதிரைவாலி தினை பிரவுனி, கருப்புகோவ்னி தினை பிரவுனி, பல தினை வால்நட் பிரவுனி, டேட்ஸ் தினை பிரவுனி, கோதுமை பிளம் கேக், ராகி சாக்லேட் கேக், ஜோவர் கேரட் கேக் (Cholam cake), ஃபாக்ஸ்டெயில் மற்றும் டேட்ஸ் கேக் (தினை), வாழைப்பழம் வால்நட் கேக், தினை வெல்லம் வெண்ணெய் கேக், முழு கோதுமை பீட்சா, முழு கோதுமை பூண்டு ரொட்டி, ராகி கருப்பு காடு கேக், பட்டர்கிரீம் ஃப்ரோஸ்டிங்குடன் தினை வெண்ணிலா கேக் வகைகள் எப்படி தயாரிப்பது பற்றி இப்பயிற்சியில் விளக்குவார்கள்.

 

56

சந்தை பயிற்சி வகுப்புகள்

மேலும் தயாரிப்பு சந்தைப்படுத்துதலின் அம்சங்கள் பேக்கிங் லேபிளிங் மற்றும் அதற்காண விலை வழிமுறைகள் ஆகியன கற்றுத்தரப்படும். அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் விளக்கப்படும்.

இப்பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில்முனைவோர் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10வது வகுப்புடன் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியில் பங்குபெறும் பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதி உள்ளது தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். 

66

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள். தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இடிஐஐ அலுவலக சாலை ஈக்காட்டுத்தாங்கல், சென்னை 600032.8668102600 / 7010143022. முன்பதிவு அவசியம்:

அரசு சான்றிதழ் வழங்கப்படும்

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
மெட்ரோ ரயில்களில் நாளை இலவசமாக பயணிக்கலாம்.. சூப்பர் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே!
Recommended image2
ரொம்ப பந்தா பண்ணும் இபிஎஸ்.. மற்றொரு புறம் புலம்புகிறார்.. அமைச்சர் கீதா ஜீவன் விளாசல்
Recommended image3
Now Playing
நல்லகண்ணுக்கு பாரத் ரத்னா விருதை வழங்க வேண்டும் - தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved