MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் மாணவர்கள்.! கல்வி கடன் தள்ளுபடி -தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் மாணவர்கள்.! கல்வி கடன் தள்ளுபடி -தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

கல்வி மாணவர்களின் வாழ்க்கைக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் உயர்கல்வி படிக்க கல்வி கடன் வழங்கப்படுகிறது. அந்த வகையில் கல்விக் கடன்களில் ரூ.48.95 கோடி நிலுவைத் தொகையை தமிழக அரசு அதைத் தள்ளுபடி செய்து அறிவித்துள்ளது. 

2 Min read
Author : Ajmal Khan
Published : Feb 04 2025, 07:10 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
கல்வி கடன் ரத்து   தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

கல்வி கடன் ரத்து - தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

கல்வி தான் மாணவர்களுக்கு முக்கிய படியாக உள்ளது. எனவே அனைவருக்கும் கல்வி வழங்க வேண்டும் என பல்வேறு விழிப்புணர்வு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. ஏழை எளிய மாணவர்கள் கல்வி கற்பதற்காக மத்திய மாநில அரசுகள் திட்டங்களை உருவாக்கி வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளிகளில் இலவச கல்வியானது வழங்கப்படுகிறது. மேலும் சீருடை, காலணி, இலவச பேருந்து பயணம் இது மட்டுமல்லாமல் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
மாணவர்களுக்கு கல்வி கடன்

மாணவர்களுக்கு கல்வி கடன்

மேலும் ஏழை எளிய மாணவர்கள் பயன் அடையும் வகையில் காலை மற்றும் மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. உயர்கல்வி படிக்க செல்லும் மாணவர்களுக்கு கல்வி கட்டணம் பல மடங்கு உள்ளதால் மாணவர்களால் உயர்கல்வியை தொடர முடியாத நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் கல்வி கட்டணம் கட்ட வங்கிகள் மூலம் கடன் உதவி செய்து வருகிறது. அதன் படி மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட அனைத்து படிப்புகளுக்கும் கல்வி கடன் வழங்கப்படுகிறது.

35
கல்வி கடனை கட்ட முடியாத நிலை

கல்வி கடனை கட்ட முடியாத நிலை

மாணவர்கள் படிப்பை முடித்த பின்னர் கல்வி கட்டணத்தை கட்டும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பல லட்சம் மாணவர்கள் உயர்கல்வி படிக்க கல்வி கடன் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனை பெரும்பாலான மாணவர்கள் உரிய முறையில் திருப்பி கட்டி விடுகின்றனர். ஒரு சில மாணவர்களால் கட்ட முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் கல்வி கடனை ரத்து செய்ய வேண்டும் என அவ்வப்போது கோரிக்கைகள் எழும். இந்த சூழ்நிலையில் மாணவர்கள் கடன் ரத்து தொடர்பாக தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

45
கல்வி கடன் வசூலிக்க முடியவில்லை

கல்வி கடன் வசூலிக்க முடியவில்லை

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணாக்கர்களுக்கு 1972-1973 முதல் 2002-2003 வரையிலான காலங்களில் மருத்துவம் மற்றும்  மருத்துவம் சார்ந்த படிப்புகள் உட்பட அனைத்து படிப்புகளுக்கும் கடன் உதவி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  2003-2004 முதல் 2009-2010 வரையிலான காலங்களில் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு வழங்கப்பட்ட கல்விக் கடன்களில் ரூ.48.95 கோடி நிலுவைத் தொகையினை மாணாக்கர்களிடமிருந்து வசூலிக்க இயலவில்லையென கூறப்பட்டுள்ளது.

55
கல்வி கடன் தள்ளுபடி

கல்வி கடன் தள்ளுபடி

மேலும்  வசூலிக்க சரியான பதிவேடுகள் மற்றும் விவரங்கள் ஏதும் அலுவலக ஆவணங்களில் இல்லாததாலும் மற்றும் வசூலிக்க வேண்டிய நபர்களை அடையாளம் காண இயலாததாலும், ரூ.48,95,00,000/-ஐ (ரூபாய் நாற்பத்தெட்டு கோடியே தொண்ணூற்று ஐந்து லட்சம் மட்டும்) சிறப்பினமாக கருதி முழுவதும் தள்ளுபடி (Write off proposal) செய்து அரசு ஆணையிடுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு அரசு
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Cyclone Murasu: முன்கூட்டியே கரையை கடக்கிறதா முரசு புயல்? எங்கே, எப்போது, எவ்வளவு வேகம்? முழு விவரம்
Recommended image2
SCHOOL, COLLEGE HOLIDAY: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.! அடுத்தடுத்து மழை கொட்டப்போகும் மாவட்டங்கள் எவை?
Recommended image3
Deepavali Diya Tips: காற்றில் அகல் விளக்கு அணையாமல் இருக்க சூப்பர் ட்ரிக்! இனி புயலே அடித்தாலும் விளக்கு அணையாது.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved