ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! 15% வரை ஊதிய உயர்வு- தமிழக அரசு அதிரடி அறிவிப்பு
தமிழக அரசு கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று 15% ஊதிய உயர்வு அளித்துள்ளது. வீட்டு வாடகைப்படி மற்றும் நகர ஈட்டுப்படியும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வு ஜூலை 2023 முதல் நடைமுறைக்கு வரும்.

ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! 15% வரை ஊதிய உயர்வு
தமிழக அரசுக்கும் மக்களுக்கும் பாலமாக இருந்து செயல்படுவது அரசு ஊழியர்கள் தான். அந்த வகையில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் மக்களுக்கான திட்டங்களை கடை நிலை வரை சென்று சேர்வதற்கு உறுதுணையாக உள்ளனர்.
அந்த வகையில் தமிழக அரசு சார்பாக ஊழியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையாக அகவிலைப்படி உள்ளிட்ட சலுகைகளை வழங்கி வருகிறது. மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு விடுமுறையும் வழங்குகிறது.
கோ ஆப்டெக்ஸ் ஊழியர்கள்
இந்த நிலையில் தனியார் நிறுவனங்களுக்கு போட்டி அளிக்கும் வகையில் தமிழக அரசின் கோ-ஆப்டெக்ஸ் இயங்கி வருகிறது. தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 89 ஆண்டுகளாக தமிழக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் ரகங்களை கொள்முதல் செய்து இந்தியா முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக விற்பனை செய்து
வருகிறது. அந்த வகையில் இந்திய அளவில் முன்னணி கைத்தறி நிறுவனமாகச் செயல்படுகிறது.
ஊதிய உயர்வு அறிவித்த தமிழக அரசு
தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் கோ ஆப்டெக்ஸின் 150 விற்பனை நிலையங்கள் செயல்படுகின்றன. இந்த கடைகளில் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். அரசாணைப்படி வீட்டு வாடகைப்படி மற்றும் நகர ஈட்டுப்படி உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கோ- ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.
வீட்டு வாடகைப்படியும் உயர்வு
அதன் படி, ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கு தேராயமாக 15 சதவீதம் வரை ஊதிய உயர்வு அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, அலுவலக உதவியாளர் முதல் தலைமை பொது மேலாளர் முதல் 10 நிலைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கான ஊதிய நிலையை மாற்றியமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், வீட்டு வாடகைப்படி மற்றும் நகர ஈட்டுப்படியை உயர்த்தியும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு 2023 ஜுலை மாதம் முதல் நடைமுறைக்கும் வரும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.