MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • TN Govt: ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை.. அனைத்து அரசு பேருந்துகளிலும் இலவசப் பயணமா? பட்ஜெட்டில் எதிர்பார்ப்பு

TN Govt: ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை.. அனைத்து அரசு பேருந்துகளிலும் இலவசப் பயணமா? பட்ஜெட்டில் எதிர்பார்ப்பு

TN Govt: தற்போது வழங்கப்படும் மகளிர் உரிமைத் தொகையை ரூ.1,000-இல் இருந்து ரூ.2,500 ஆக உயர்த்துவது மற்றும் அனைத்து அரசு பேருந்துகளிலும் பெண்களுக்கு கட்டணமில்லா பயண வசதியை விரிவுபடுத்துவது போன்ற அம்சங்கள் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.

2 Min read
Author : Raghupati R
Published : Jul 27 2026, 02:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
தமிழ்நாடு அரசு பட்ஜெட்
Image Credit : Asianet News

தமிழ்நாடு அரசு பட்ஜெட்

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் முழுமையான பட்ஜெட் என்பதால், தேர்தல் அறிவிக்கப்பட்ட முக்கிய நலத்திட்டங்கள் இதில் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. குறிப்பாக, மகளிர் உரிமைத் தொகை தற்போது ரூ.1,000-ல் இருந்து ரூ.2,500 ஆக உயர்த்துவது மற்றும் மாநிலம் முழுவதும் அனைத்து அரசு பேருந்துகளிலும் கட்டணமில்லா பயண வசதியை விரிவுபடுத்துவது போன்ற வாக்குறுதிகள் பெண்களுக்கு இந்த பட்ஜெட்டில் முக்கிய இடம் பெறலாம் என்று அரசியல் பேசப்பட்டு வருகிறது. இந்த அறிவிப்புகள் வெளியாகும் பட்சத்தில், அந்த அரசின் முக்கிய நலத்திட்டங்களில் ஒன்றாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
இலவச பேருந்து பயணம்
Image Credit : AI

இலவச பேருந்து பயணம்

இதற்கிடையில், பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்துவது தொடர்பாக போக்குவரத்துத் துறையில் பல கட்ட ஆலோசனைகள் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் திட்டத்தை அனைத்து அரசு பேருந்துகளுக்கும் விரிவுபடுத்துவது குறித்து அதிகாரிகள் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தத் திட்டம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் நகரப் பேருந்துகள் மட்டுமின்றி பிற வகை அரசு பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசப் பயண வசதி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

நெடுஞ்சாலை சைன்போர்டுகள் ஏன் பச்சை நிறத்தில் இருக்கிறது தெரியுமா? ஷாக் ஆயிடுவீங்க

Related Articles

Related image1
Jio vs Airtel: ஜியோ vs ஏர்டெல்! எந்த ரீசார்ஜ் பிளான் பெஸ்ட்? 999 ரூபாயா, 899 ரூபாயா?
Related image2
Driving Facts: நெடுஞ்சாலை சைன்போர்டுகள் ஏன் பச்சை நிறத்தில் இருக்கிறது தெரியுமா? ஷாக் ஆயிடுவீங்க
35
மகளிர் உரிமைத் தொகை
Image Credit : AI

மகளிர் உரிமைத் தொகை

தமிழகத்தில் தற்போது போக்குவரத்துத் துறையின் கீழ் 8 அரசு போக்குவரத்துக் கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் மாநிலம் முழுவதும் 21,527 அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தேர்தல் பிரச்சாரத்தின் போது பெண்களுக்கு அனைத்து அரசு பேருந்துகளிலும் கட்டணமில்லா பயண வசதி வழங்கப்படும் என்று முக்கிய வாக்குறுதி அளிக்கப்பட்டது. இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் நோக்கில் அரசு தீவிரமாக நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால், லட்சக்கணக்கான பெண்கள் நேரடியாகப் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

45
ரூ.2500 உரிமைத் தொகை
Image Credit : tndipr

ரூ.2500 உரிமைத் தொகை

இந்தத் திட்டத்தின் செயல்பாடு குறித்து சமீபத்தில் தலைமைச் செயலகத்தில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் போக்குவரத்துத் துறை மற்றும் நிதித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு திட்டத்தின் நிதிச் சுமை, செயல்படுத்தும் நடைமுறை மற்றும் நிர்வாக அம்சங்கள் குறித்து விரிவாக விவாதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, சாதாரண அரசு பேருந்துகள் மட்டுமின்றி எக்ஸ்பிரஸ், டீலக்ஸ் மற்றும் தொலைதூர அரசு பேருந்துகளிலும் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பல்வேறு கருத்துக்கள் பரிமாறப்பட்டதாக கூறப்படுகிறது.

ரூ.7.40 லட்சத்தில் புதிய பிரெஸ்ஸா.. விலை, வேரியன்ட், புதிய அம்சங்கள் முழு விவரம்!

55
பெண்கள் நலத்திட்டம்
Image Credit : Asianet News

பெண்கள் நலத்திட்டம்

இந்த ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து, ஒவ்வொரு அரசுப் போக்குவரத்துக் கழகமும் தங்களது கட்டுப்பாட்டில் இயங்கும் பேருந்துகளின் எண்ணிக்கை, தினசரி பயணிகளின் பயன்பாடு, கூடுதல் நிதித் தேவை மற்றும் திட்டத்தை செயல்படுத்த தேவையான நிர்வாக ஏற்பாடுகள் உள்ளிட்ட விவரங்களைத் தயாரித்து அரசிடம் சமர்ப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அறிக்கைகளின் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும். இருப்பினும், மகளிர் உரிமைத் தொகை உயர்வு மற்றும் அனைத்து அரசு பேருந்துகளிலும் இலவசப் பயணத் திட்டம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து அரசு தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை காத்திருக்க வேண்டியது அவசியமாகும்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு அரசு
டிவி.கே. விஜய்
மகளிர் உரிமைத் தொகை
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
Govt Scheme: மாதம் ரூ.7,500 உதவித்தொகை..! மாணவர்களுக்கு அள்ளிக்கொடுக்கும் தமிழக அரசு.! எப்படி பெறுவது?!
Recommended image2
காவேரி கூக்குரல் மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டத்தில் 1,500க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பு!
Recommended image3
TN Rain Alert: குடையை மறக்காதீங்க.. தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை கொட்டப்போகுது.. சென்னையும் லிஸ்டில் இருக்கு!
Related Stories
Recommended image1
Jio vs Airtel: ஜியோ vs ஏர்டெல்! எந்த ரீசார்ஜ் பிளான் பெஸ்ட்? 999 ரூபாயா, 899 ரூபாயா?
Recommended image2
Driving Facts: நெடுஞ்சாலை சைன்போர்டுகள் ஏன் பச்சை நிறத்தில் இருக்கிறது தெரியுமா? ஷாக் ஆயிடுவீங்க
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved