லாஸ்ட் சான்ஸ்.! தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா.? சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகள் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் பல்வேறு சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. அந்த வகையில் கடைசிகட்டமாக சொந்த ஊருக்கு செல்ல விரும்பும் பயணிகளுக்காக முன்பதிவில்லா சிறப்பு விரைவு ரயில் இயக்கப்படுகிறது. அக்டோபர் 30, 31 மற்றும் நவம்பர் 3 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
crowed
வேலைக்காக வெளியூர் பயணம்
குடும்ப சூழ்நிலைக்காகவும், படித்த படிப்பிற்காகவும் வேலை தேடி லட்சக்கணக்கான மக்கள் வெளியூர்களுக்கு பயணம் செய்கின்றனர். குறிப்பாக சென்னை மற்றும் பெங்களூர் போன்ற இடங்களுக்கு செல்கின்றனர். அந்த வகையில் வந்தோரை வாழ வைக்கும் இடமாக சென்னை உள்ளது. நாள் தோறும் ஆயிரக்கணக்கானோர் சென்னையில் குடியேறி வருகின்றனர். அவர்களுக்கு வேலையும் கொடுத்து இருக்க இடமும் கொடுத்து வருகிறது.
அந்த வகையில் சொந்த ஊர், உறவினர்களை விட்டு வெளியூர்களுக்கு வருபவர்கள் வார விடுமுறை, தொடர் விடுமுறை, பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற பண்டிகை நாட்களில் மட்டுமே சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். அதுவும் விஷேச நாட்களில் உறவினர்களோடு கொண்டாட விரும்புவார்கள்,
Diwali Special Train
பண்டிகை கொண்டாட்டம்
அந்த வகையில் தீபாவளி பண்டிகை என்றால் கேட்கவா வேண்டும் சென்னையில் இருந்து மட்டும் பல லட்சம் மக்கள் புறப்பட தயாராகி வருகின்றனர். இதற்காக சிறப்பு ரயில், சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. தமிழக அரசு சார்பாக 14 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து 3 இடங்களில் பேருந்து இயக்கப்படுகிறது. இதே போல ரயில்களில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பாகவே அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டது. இதன் காரணமாக எப்போது சிறப்பு ரயில் விடுவார்கள் என பொதுமக்கள் காத்து கிடந்தனர். அந்த வகையில் நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையையொட்டி 6ஆயிரம் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
Train
சிறப்பு ரயிலில் கூட்டம்
சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள், வட மாவட்டங்கள் என பல இடங்களுக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டது. குறிப்பாக கன்னியாகுமரி, கோவை, மதுரை போன்ற இடங்களுக்கு ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த சிற்ப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கிய 10 நிமிடங்களிளையே முடிந்து விட்டது. எனவே மீண்டும் சிறப்பு ரயில் அறிவிக்கப்படுமா என மக்கள் காத்திருந்தனர். அவர்களுக்காவே தற்போது கடைசியாக சிறப்பு ரயில் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதுவும் முன்பதிவு இல்லாத ரயில் இயக்கப்படவுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
முன்பதிவு இல்லாத ரயில் சேவை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் தென்னக ரயில்வே, ஈரோடு - சென்னை சென்ட்ரல் இடையே முன்பதிவில்லா சிறப்பு விரைவு ரயிலை அக்டோபர் 30, 31 மற்றும் நவம்பர் 03 ஆகிய தேதிகளில் இயக்குகிறது. பயணிகள் இதனை பயன்படுத்திக்கொள்ளவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் சிறப்பு ரயிலானது ஈரோடுலிருந்து புறப்படுகிறது. சேலம், பொம்மிடி, மொரப்பூர், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர், பெரம்பூர் வழியாக சென்னை சென்ட்ரலை வந்து அடைகிறது. இந்த ரயிலில் 12 முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டியானது இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது