- Home
- Tamil Nadu News
- திருவண்ணாமலை கிரிவலம் போறீங்களா? அப்போ உங்களுக்கு தான் இந்த செய்தி! ரயில்வே சொன்ன குட்நியூஸ்!
திருவண்ணாமலை கிரிவலம் போறீங்களா? அப்போ உங்களுக்கு தான் இந்த செய்தி! ரயில்வே சொன்ன குட்நியூஸ்!
திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் பக்தர்களுக்காக விழுப்புரம்-திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளன.

Special Trains To Tiruvannamalai
தமிழ்நாட்டின் ஆன்மிக நகரமான திருவண்ணாமலையில் உலகப் புகழ்பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல லட்ச்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். அதுவும் ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து அருணாச்சலேஸ்வரரை தரிசனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் ஆகஸ்ட் மாதத்துக்கான பவுர்ணமி கிரிவலம் 8ம் தேதி நடைபெறுகிறது.
திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்
பவுர்ணமி நாளில் வரும் ஆடி வெள்ளி மற்றும் திருவோணம் நட்சத்திரத்துடன் இணைந்து வருவதால் வழக்கத்தை விட திருவண்ணாமலைக்கு அதிக பக்தர்கள் வருகை புரிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், கிரிவலம் நாளன்று விழுப்புரம்-திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
விழுப்புரம்-திருவண்ணாமலை ரயில்
அதாவது 9ம் தேதி இயக்கப்படும் விழுப்புரம்-திருவண்ணாமலை இடையிலான சிறப்பு ரயில் (வண்டி எண்: 06130) விழுப்புரம் சந்திப்பில் இருந்து காலை 09:25 மணிக்கு புறப்பட்டு, திருவண்ணாமலையை காலை 11:10 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கமாக திருவண்னாமலையில் இருந்து மதியம் மதியம் 12.40 மணிக்கு புறப்பட்டு 2.15 மணிக்கு விழுப்புரம் வந்தடையும். இந்த ரயில் வெங்கடேசாபுரம், மாம்பழப்பட்டு, அய்யந்தூர், திருக்கோயிலூர், ஆதிச்சனூர், ஆண்டம்பாளையம், தண்டரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
சிறப்பு பேருந்துகளும் இயக்கம்
இது ஒரு முன்பதிவில்லாத மெமு சிறப்பு ரயில் ஆகும். எனவே, பயணத்திற்கு முன்னதாக ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்ட்டரில் டிக்கெட் வாங்கிக் கொள்ளலாம். மேலும் திருவண்ணாமலை கிரிவலத்தையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னையில் கிளாம்பாக்கம் (KCBT) மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
மதுரை, கோவையில் இருந்து பேருந்துகள்
இதேபோல் விழுப்புரம், சேலம், திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், காஞ்சிபுரம், வேலூர், ஓசூர் போன்ற தமிழ்நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்தும் திருவண்ணாமலைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பக்தர்கள் முன்கூட்டியே தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக இணையதளம் அல்லது செயலி வாயிலாக டிக்கெட்டுகளை புக் செய்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.