MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • நோ டிராஃபிக்.. நோ கிரவுட்.. கொடைக்கானலையே ஓரம் கட்டும் குளுமை.. மதுரை பக்கத்தில் ஒரு 'மினி' ஊட்டி!

நோ டிராஃபிக்.. நோ கிரவுட்.. கொடைக்கானலையே ஓரம் கட்டும் குளுமை.. மதுரை பக்கத்தில் ஒரு 'மினி' ஊட்டி!

ஊட்டி, கொடைக்கானல் போன்று டிராஃபிக் இல்லை என்பதால் சிறுமலையின் அழகையும், அதன் குளுமையையும் நீங்கள் முழுமையாக உணர முடியும். மேலும் டிரெக்கிங் செல்ல விரும்புபவர்களுக்கு இது மிகச்சிறந்த இடமாகும்.

2 Min read
Author : Rayar r
Published : Apr 26 2026, 03:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
 கைகொடுக்கும் மலைவாசஸ்தலங்கள்
Image Credit : AI

கைகொடுக்கும் மலைவாசஸ்தலங்கள்

தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடும் வெப்பத்தை தாங்க முடியாமல் மக்கள் பரிதவித்து வருகிறது. இப்போது கோடை விடுமுறை என்பதால் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மக்கள் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைவாசஸ்தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். ஊட்டி, கொடைகானலில் குளிர்ச்சி அதிகமாக இருந்தாலும் அங்குள்ள கூட்ட நெரிசல் மற்றும் டிராஃபிக் என பல்வேறு பிரச்சனைகள் உள்ளன.

24
'மினி ஊட்டி' சிறுமலை
Image Credit : x

'மினி ஊட்டி' சிறுமலை

ஆனால் மதுரைக்கு மிக அருகில் திண்டுக்கல் கைக்கு எட்டும் தூரத்தில் ஒரு சூப்பரான ஹில் ஸ்டேஷன் உள்ளது. அதுதான் 'மினி ஊட்டி' என்றழைக்கப்படும் சிறுமலை. நகர பரப்பபப்பில் இருந்து விடுபட்டு அமைதியையும், குளுமையையும் ஒருசேர கொடுக்கிறது சிறுமலை. சிறுமலைக்குச் செல்லும் பாதையில் மொத்தம் 18 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இதில் 5வது கொண்டை ஊசி வளைவை தாண்டும்போதே குளிர்ந்த காற்று உங்கள் மேனியை தீண்டும்.

காற்றில் கலக்கும் மூலிகை மணம்

அடந்த வனங்களுக்கு நடுவே பயணிப்பது பரவசமான மனநிலையை கொடுக்கும். மேலும் காடுகளில் வீசும் காற்றில் கலந்திருக்கும் மூலிகை மணம் உடலுக்கும் சுவாசத்திற்கும் பல்வேறு பலன்களை அள்ளித் தரும். நீங்கள் மலைப்பாதையில் பயணிக்கும்போதே காற்றின் குளிர்ச்சியை அனுபவித்து விட்டு, குரங்குகள், காட்டு மாடுகள், கடமான், கேளையாடு, முயல், கழுதை, காட்டு அணில் போன்ற வனவிலங்குகளை பார்த்து ரசிக்கலாம்.

Related Articles

Related image1
ஊட்டி, கொடைக்கானல விடுங்க... தமிழ்நாட்டில் உள்ள இந்த டாப் 10 ஹிடன் டூரிஸ்ட் ஸ்பாட் போங்க; சில்லுனு இருக்கும்!
Related image2
கோடை விடுமுறை வந்தாச்சு: பட்ஜெட் விலையில் கொடைக்கானல் டிரிப்! மிஸ் பண்ணக் கூடாத டாப் 5 மேஜிக் ஸ்பாட்கள்!
34
சிறுமலை ஏரி
Image Credit : google

சிறுமலை ஏரி

சிறுமலையில் நீங்கள் முதலில் பார்க்க வேண்டிய இடம் சிறுமலை ஏரி. மனிதனால் உருவாக்கப்பட்ட இந்த ஏரியில், குளிர்ந்த காற்றில் படகு சவாரி செய்வது மனதிற்குப் புத்துணர்ச்சி அளிக்கும். அகஸ்தியர்புரம் வியூ பாயிண்ட்டில் நின்று பார்க்கும் இடமெல்லாம் பரவி கிடைக்கும் பசுமைப் பள்ளத்தாக்கை கண்டு ரசிக்கலாம். போட்டோக்கள், வீடியோக்கள் எடுக்க சிறந்த இடம் இதுவாகும். மனதில் குளுமையுடன் பக்தி மணமும் தவழ வேண்டுமானால் அங்குள்ள சந்தன மரத்தால் செதுக்கப்பட்ட கிருஷ்ணர் வீற்றிருக்கும் சந்தான கிருஷ்ணர் கோயில் மற்றும் அமைதியின் உறைவிடமான அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் தரிசனம் செய்யலாம்.

சிறுமலை பழங்களை ருசிக்க தவறாதீர்கள்

ஊட்டி, கொடைக்கானல் போன்று டிராஃபிக் இல்லை என்பதால் சிறுமலையின் அழகையும், அதன் குளுமையையும் நீங்கள் முழுமையாக உணர முடியும். மேலும் டிரெக்கிங் செல்ல விரும்புபவர்களுக்கு இது மிகச்சிறந்த இடமாகும். சிறுமலை பழங்கள் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். நீங்கள் சிறுமலை செல்லும்போது மலை வாழைப்பழம் மற்றும் பலாப்பங்களை வாங்கி ருசிக்க தவறாதீர்கள்.

44
சிறுமலைக்கு எப்படி செல்வது?
Image Credit : google

சிறுமலைக்கு எப்படி செல்வது?

மலைகளின் குட்டி இளவரசியான சிறுமலை திண்டுக்கல்லில் இருந்து 25 கி.மீ. தொலைவிலும், மதுரையில் இருந்து சுமார் 90 கி.மீ. தொலைவிலும் உள்ளது. மதுரை மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் திண்டுக்கல் வந்து, அங்கிருந்து நத்தம் சாலையில் உள்ள மேம்பாலத்தைக் கடந்து, வலதுபுறம் திரும்பி சிறுமலைக்கு செல்லலாம். இருசக்கர வாகனம் அல்லது கார்களில் செல்லலாம். சிறுமலைக்கு அரசு பேருந்துகளும் உணடு. திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து சிறுமலைக்கு குறிப்பிட்ட நேரங்களில் அரசு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. ஆனால் நீங்கள் சொந்த வண்டியில் சென்றால் முழுமையாக ரசிக்க முடியும்.

சிறுமலையில் லாட்ஜ்கள் மற்றும் ரிசார்ட்டுகள் உள்ளன. மதுரை, திண்டுக்கல்லில் வசிப்பவர்கள் அதிகாலையில் புறப்பட்டால், சிறுமலையை சுற்றிப் பார்த்துவிட்டு அன்றைய இரவே திரும்பிவிடலாம். நமது பட்ஜெட்டுக்கு ஏற்ற ஹில் ஸ்டேஷன் என்பதால் சிறுமலைக்கு ஒருமுறை விசிட் அடிக்க தவறாதீர்கள்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
பயணம்
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
பாதுகாப்பு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை... டிவிகே வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா நேரில் ஆய்வு...
Recommended image2
Now Playing
வில்லிவாக்கம் TVK வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு! | Aadhav Arjuna | Loyola College
Recommended image3
ஏசி வாங்கி தராத காதல் கணவர்.! உயிரை மாய்துகொண்ட 25 வயது இளம்பெண்.! திருவள்ளூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.!
Related Stories
Recommended image1
ஊட்டி, கொடைக்கானல விடுங்க... தமிழ்நாட்டில் உள்ள இந்த டாப் 10 ஹிடன் டூரிஸ்ட் ஸ்பாட் போங்க; சில்லுனு இருக்கும்!
Recommended image2
கோடை விடுமுறை வந்தாச்சு: பட்ஜெட் விலையில் கொடைக்கானல் டிரிப்! மிஸ் பண்ணக் கூடாத டாப் 5 மேஜிக் ஸ்பாட்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved