MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ஏறிய வேகத்தில் சரசரவென சரிந்த காய்கறிகளின் விலை.! ஒரு கிலோ தக்காளி, வெங்காயம் இவ்வளவு தானா.?

ஏறிய வேகத்தில் சரசரவென சரிந்த காய்கறிகளின் விலை.! ஒரு கிலோ தக்காளி, வெங்காயம் இவ்வளவு தானா.?

சமையலுக்கு இன்றியமையாத தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை சமீப காலங்களில் உச்சத்தை தொட்ட நிலையில், தற்போது விலை சரிந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கூடை கூடையாக தக்காளி, வெங்காயத்தை வாங்கிச் செல்கின்றனர்.

2 Min read
Author : Ajmal Khan
Published : Jan 27 2025, 07:40 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
ஏறிய வேகத்தில் சரசரவென சரிந்த காய்கறிகளின் விலை.! ஒரு கிலோ தக்காளி, வெங்காயம் இவ்வளவு தானா.?

ஏறிய வேகத்தில் சரசரவென சரிந்த காய்கறிகளின் விலை.! ஒரு கிலோ தக்காளி, வெங்காயம் இவ்வளவு தானா.?

காய்கறிகள் விலை என்ன.?

சமையலும் காய்கறிகளையும் பிரிக்க முடியாத ஒன்று, அந்த வகையில் காய்கறிகள் தான் சமையலில் ருசியையும், மனத்தையும் கொடுக்கிறது. அதிலும் முக்கியமானது தக்காளி மற்றும் வெங்காயம், இந்த இரண்டும் இல்லையென்றால் சமையல் செய்வது சாத்தியம் இல்லாத காரியம், ரசம் வைப்பது முதல் பிரியாணி சமைப்பது வரை தக்காளி வெங்காயத்தின் தேவை அதிகளவில் உள்ளது.  எனவே மற்ற காய்கறிகளின் விலை உயர்ந்தால் கூட கவலைப்படாத இல்லத்தரசிகள் தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை உயர்ந்தால் திக்குமுக்காடி போவார்கள்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
tomato onion

tomato onion

ஏறி இறங்கும் தக்காளி வெங்காயம் விலை

அந்த வகையில் கடந்த சில மாதங்களாக எப்போதும் இல்லாத வகையில் தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலையானது உச்சத்தை தொட்டது. ஒரு கிலோ 100 முதல் 150 ரூபாய் வரை போட்டி போட்டு உயர்ந்தது. இதனால் மாத பட்ஜெட்டில் பெரிய அளவில் பற்றாக்குறை ஏற்படும் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து கிலோ கணக்கில் வாங்கி சென்ற மக்கள் அரை கிலோ ஒரு கிலோ என்ற அளவில் வாங்கும் நிலை உருவானது. இதனையடுத்து தக்காளி, வெங்காயத்தின் விலை எப்போது குறையும் என மக்கள் காத்து இருந்தனர். அதற்கு ஏற்றார் போல காரிப் பருவ காய்கறிகளின் வரத்து அதிகரித்ததால் தக்காளி, வெங்காயம் விலை சரிய தொடங்கியது.
 

36
tomato price today

tomato price today

காரிப் பருவ காய்கறிகள் வரத்து அதிகரிப்பு

இதனால் சந்தோஷத்தில் துள்ளி குதித்த இல்லத்தரசிகள் தக்காளி, வெங்காயத்தை கூடை, கூடையாக வாங்கி சென்றனர். அதன் படி ஒரு கிலோ தக்காளி 10 முதல் 15 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 30 முதல் 40ரூபாய்க்கும் விற்பனையாகிறது. மேலும் கடந்த வாரம் பொங்கல் பண்டிகை தினத்தில் உச்சத்தை தொட்ட பச்சை காய்கறிகளின் விலையும் சரிந்துள்ளது. கடந்த வாரம் வரை ஒரு கிலோ 80 முதல் 100 ரூபாய்க்கு விற்பனையான காய்கறிகள் தற்போது ஒரு கிலோ 25 முதல் 35 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 

46
vegetable price

vegetable price

கோயம்பேட்டில் காய்கறி விலை என்ன.?

அதன் படி சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பச்சை காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. பெரிய வெங்காயம் ஒரு கிலோ 20 முதல் 35 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 50 முதல் 80 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 15 முதல் 20 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

56
koyambedu vegetable price

koyambedu vegetable price

பச்சை காய்கறி விலை என்ன.?

பாகற்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 10 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒன்று 15 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

66
Vegetable price today

Vegetable price today

சரிந்தது காய்கறி விலை

பீன்ஸ் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 10 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Cyclone Murasu: முன்கூட்டியே கரையை கடக்கிறதா முரசு புயல்? எங்கே, எப்போது, எவ்வளவு வேகம்? முழு விவரம்
Recommended image2
SCHOOL, COLLEGE HOLIDAY: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.! அடுத்தடுத்து மழை கொட்டப்போகும் மாவட்டங்கள் எவை?
Recommended image3
Deepavali Diya Tips: காற்றில் அகல் விளக்கு அணையாமல் இருக்க சூப்பர் ட்ரிக்! இனி புயலே அடித்தாலும் விளக்கு அணையாது.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved