MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • விஜய் ஒரு கனவுல இருக்கார்; 4 சீட் கூட ஜெயிக்க முடியாது: பியூஷ் கோயல் கிண்டல்!

விஜய் ஒரு கனவுல இருக்கார்; 4 சீட் கூட ஜெயிக்க முடியாது: பியூஷ் கோயல் கிண்டல்!

Piyush Goyal Mocks Vijay TVK Election : நடிகர் விஜய் ஒரு கனவு உலகத்துல இருக்கிறார். ஆனால், அவரால் 4 சீட் கூட வாங்க முடியாது என்று மத்திய அமைச்சர் பியூஸ் கோஷல் கிண்டல் செய்துள்ளார்.

2 Min read
Author : Rsiva kumar
Published : Mar 31 2026, 10:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Piyush Goyal Mocks Vijay TVK Election
Image Credit : Asianet News

Piyush Goyal Mocks Vijay TVK Election

நடிகர் விஜய் ஒரு கனவு உலகத்துல இருக்கிறார். ஆனால், அவரால் 4 சீட் கூட வாங்க முடியாது என்று மத்திய அமைச்சர் பியூஸ் கோஷல் கிண்டல் செய்துள்ளார். ஆனா, 234 தொகுதியிலும் வேட்பாளர்களை அறிவித்து, தமிழ்நாட்டின் எதிர்காலத்துக்காக ஓட்டுப் போட்டுங்கள் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

25
விஜய் ஒரு கனவுல இருக்கார்; 4 சீட் கூட ஜெயிக்க முடியாது
Image Credit : Asianet News

விஜய் ஒரு கனவுல இருக்கார்; 4 சீட் கூட ஜெயிக்க முடியாது

தமிழக அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியிருக்கிறது. இதில், 234 தொகுதியிலும் தனித்து போட்டியிடும் தவெக கட்சி தலைவர் பெரம்பூர் மற்றும் திருச்சி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். இது தவிர செங்கோட்டையன் ஈரோடு கோபிசெட்டிபாளையம், புஸ்ஸி ஆனந்த் டி நகர், ஆதவ் அர்ஜூனா வில்லிவாக்கம் என்று 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். வேட்பாளர்களை அறிவித்த நிலையில் முதல்கட்டமாக விஜய் பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.

35
"4 சீட் கூட ஜெயிக்க முடியாது!" - கோயலின் கலாய்ப்பு
Image Credit : Asianet News

"4 சீட் கூட ஜெயிக்க முடியாது!" - கோயலின் கலாய்ப்பு

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், விஜய்யின் அரசியல் வருகையை ரொம்பவே 'லைட்' ஆக எடுத்துக்கொண்டார் போலிருக்கிறது. "விஜய் ஒரு கனவு உலகத்துல மிதக்கிறார். அவருக்கு தமிழ்நாட்டு கலாச்சாரமே தெரியாது. ரசிகர்கள் ஓட்டுப் போடுவாங்கன்னு நினைக்கிறது தப்பு. 4 சீட் ஜெயிக்கிறதே குதிரைக் கொம்புதான்!" என ஓப்பனாகவே கிண்டல் செய்துள்ளார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற ஜாம்பவான்கள் மக்கள் சேவை செய்த பிறகுதான் ஆட்சிக்கு வந்தார்கள் என்பதைச் சுட்டிக்காட்டிய கோயல், விஜய்க்கு 'வெயிட்' போதாது என சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.

45
தளபதியின் 'சைலண்ட்' பதிலடி: 234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள்!
Image Credit : Asianet News

தளபதியின் 'சைலண்ட்' பதிலடி: 234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள்!

விமர்சனங்களுக்கு ட்விட்டரிலோ, பேட்டியிலோ பதில் சொல்லாமல், நேரடியாகக் களத்தில் 'வேலை' காட்டியிருக்கிறார் விஜய். 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து, "நாங்க சும்மா வரல, ஜெயிக்க வந்திருக்கோம்" என நிரூபித்துள்ளார்.

சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சிராப்பள்ளி கிழக்கு என இரண்டு இடங்களில் 'சி. ஜோசப் விஜய்' என்ற பெயரில் களம் காண்கிறார். கரூர் மதியழகன், வில்லிவாக்கம் ஆதவ் அர்ஜுனா, கோபிசெட்டிபாளையம் செங்கோட்டையன் என அனுபவமும் இளமையும் கலந்த பட்டாளத்தை இறக்கியுள்ளார்.

55
'விசில்' சின்னமும்.. 20 லட்சம் கல்வி உதவியும்!
Image Credit : X

'விசில்' சின்னமும்.. 20 லட்சம் கல்வி உதவியும்!

நான் சும்மா வேட்பாளர்களை அறிவிக்கலை, மக்களோட பாதுகாவலர்களை அறிவிக்கிறேன். இவங்க யாரும் ஊழல்வாதிகள் இல்லை; சாதாரண பின்னணியில் இருந்து வந்தவங்க!" - இதுதான் விஜய்யின் தாரக மந்திரம்.

'விசில்' சின்னமும்.. 20 லட்சம் கல்வி உதவியும்!

"எனக்கு எதிரா நடந்த அநீதிகளுக்கு இந்தத் தேர்தல்ல பதில் சொல்லுங்க" என எமோஷனலாகப் பேசும் விஜய், 'போதையில்லாத தமிழ்நாடு' மற்றும் 'உயர் கல்விக்கு 20 லட்சம் ரூபாய் உதவி' என அதிரடி வாக்குறுதிகளையும் அள்ளி வீசியிருக்கிறார். தவெக-வின் 'விசில்' சின்னம் இந்தத் தேர்தலில் மற்ற கட்சிகளுக்கு விசிலடிக்க வைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா! பியூஷ் கோயல் சொல்வது போல ரசிகர்கள் ஓட்டாக மாறுவார்களா? அல்லது விஜய் சொல்வது போல 'மக்களின் பாதுகாவலர்கள்' ஜெயிப்பார்களா? 2026 மே மாதம் தான் அந்த 'கிளைமாக்ஸ்' தெரியும். ஆனால் ஒன்று மட்டும் உறுதி - தமிழக அரசியல் இனி 'போரடிக்காது'. என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
டிவி.கே. விஜய்
தளபதி விஜய்
தமிழ்நாடு சட்டமன்றம்
தேர்தல்
ஜனநாயகத்தில் பணம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
எல்லை மீறும் உதயநிதி.. எகிறி அடித்த எடப்பாடி..! அதிமுக காரன் நினைத்தால்... அதிரடி எச்சரிக்கை!
Recommended image2
திமுக ஆட்சி எப்போது போகும் என்று மக்கள் காத்திருக்கிறார்கள்… இபிஎஸ் ஆவேசம்
Recommended image3
அரசு சம்பளத்தில் சொந்த கிளினிக்..! அதிகாரிகளுக்கு அல்வா..! ஆதாரத்துடன் சிக்கிய முத்தனேந்தல் பி.எம்.ஓ மார்கண்டன்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved