திடீரென அதிகரித்த தக்காளி, வெங்காயம் விலை..! கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை நிலவரம் என்ன.?
தக்காளி, இஞ்சி,வெங்காயத்தின் வரத்து குறைவாக இருப்பதால் விற்பனை விலையில் அதிகரித்துள்ளது. இதே போல ஒரு சில காய்கறிகளின் விலையும் சென்னை கோயம்பேடு சந்தையில் அதிகரித்து விற்பனையாகிறது.
தக்காளி விலை என்ன.?
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் உருளைக்கிழங்கு ஒரு கிலோ 32 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 18 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பீன்ஸ் விலை என்ன.?
கொத்தவரை ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், காலிஃப்ளவர் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், கேரட் 30 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், அவரைக்காய் 75 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
முருங்கைக்காய் விலை
பாகற்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், வாழைப்பூ ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், முருங்கக்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், கத்தரிக்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பெரிய கத்தரிக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
முள்ளங்கி விலை
பீன்ஸ் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 240க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.