MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Liquor Sales: தமிழகத்தை மிஞ்சிய குடிமகன்கள் இருக்கும் மாநிலம் இதுவா! ஒரே நாளில் இத்தனை கோடி வருமானமா?

Liquor Sales: தமிழகத்தை மிஞ்சிய குடிமகன்கள் இருக்கும் மாநிலம் இதுவா! ஒரே நாளில் இத்தனை கோடி வருமானமா?

Liquor Sales: சிறப்பு நிகழ்வுகளில் மட்டுமல்லாமல், இறப்பு சடங்குகளிலும் மது பரிமாறப்படுவது தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. டாஸ்மாக் நிறுவனம் தமிழக அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித் தரும் துறையாக உள்ளது, குறிப்பாக பண்டிகை நாட்களில் மது விற்பனை உச்சத்தை எட்டுகிறது. 

3 Min read
vinoth kumar
Published : Sep 17 2024, 11:04 AM IST| Updated : Sep 17 2024, 11:36 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17


திருமணம் உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகளுக்கு மட்டும் மது விருந்து அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது நல்ல விஷயம் மட்டுமல்ல கேட்ட விஷயத்திற்கு அதாவது ஒருவர் இறந்தால் கூட மது விருந்து கொடுப்பது பேஷனாகிவிட்டது. எந்த ஒரு பார்ட்டி வைத்தாலும் மது இல்லாமல் இருப்பதே இல்லை. குறிப்பாக ஆண்களுக்கு நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் பெண்களும் இளம்பெண்களும் மது அருந்தி வருகின்றனர்.  இரவு நேர விடுதிகளில் ஆயிரக்கணக்கான பணம் கொடுத்து பப்பில் ஆண், பெண் ஆகியோர் மதுவிற்கு அடிமையாகி  என்ஜாய் செய்து வருகின்றனர். நள்ளிரவில் மூக்குமுட்ட குடித்துவிட்டு விபத்தை ஏற்படுத்துவதும், காவலரிடம் தகராறில் ஈடுபடுவது தொடர்பான வீடியோ அவ்வப்பபோது வைரலாகி வருகிறது. மதுவுக்கு அடியாகி உயிரிழக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருவதால் கைப்பெண்களின் எண்ணிக்கையும்  அதிகரித்த வண்ணம் உள்ளது. 

27

தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனத்தை அரசு எடுத்து நடத்தி வருகிறது. மொத்தம் 4000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் தமிழகத்தில் இயங்கி வருகின்றன. குறிப்பாக தமிழகத்தில் வருவாயை அதிகளவு ஈட்டித்தரும் துறையாக டாஸ்மாக் முன்னிலை வகிக்கிறது. மது நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு என தமிழக அரசு தரப்பில் விளம்பரம் செய்து வந்தாலும் அதை ஊக்கு விக்கும் முயற்சியிலேயே அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. 

இதையும் படிங்க: TN School Student: பள்ளி மாணவர்களுக்கு! இது விடுமுறை தொடர்பான அறிவிப்பு இல்ல! அதை விட முக்கியம்!

37

அதுவும் பண்டிகை காலங்கள் வந்து விட்டால் சொல்லவே வேண்டாம். டார்கெட் செய்து மது விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பல நூறு கோடியை தமிழக அரசுக்கு வருவாயை ஈட்டிக் கொடுப்பது மட்டுமல்லாமல் அரசு இயந்திரமே டாஸ்மாக் வருவமானத்தை நம்பிதான் இயங்குகிறது. தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்கள், விடுமுறை நாட்களில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை உச்சத்தை தோடும். சராசரியாக தினமும் நாளொன்றுக்கு சுமார் 50 கோடி ரூபாய் வரை வசூல் செய்யப்பட்டு வருகிறது. இதுவே விஷேச நாட்கள் என்றால் ஒரு நாள் வருமானம் 150 கோடியை தொடும் நிலைக்கு தள்ளப்படுகிறது.

47

கடந்த 2022-23ம் நிதியாண்டில் 44 ஆயிரத்து 121 கோடியே 13 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டது. இது பல மடங்கு அதிகரித்து, இந்த நடப்பு ஆண்டு ஆயிரத்து 734 கோடியே 54 லட்சம் ரூபாய் அளவுக்கு கூடுதலாக மது விற்கப்பட்டுள்ளதாக தமிழக அரசே தெரிவித்துள்ளது. மது விற்பனையை மேலும் அதிகரிக்க இளைஞர்களை கவர பல திட்டங்களையும் மதுவிலக்கு துறை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் உயர்ரக மது அருந்தும் வகையில் எலைட் கடைகளும் தமிழகத்தில் முக்கிய நகரங்களில் தொடங்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: Early Morning: அதிகாலை 2 மணிமுதல் 5 வரை விழிப்பு ஏற்பட்டால் என்ன அர்த்தம் தெரியுமா? வெளியான அதிர்ச்சி தகவல்!

57

இது மட்டுமில்லாமல் ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்களில் மதுபானங்களை டெலிவரி செய்யும் நடைமுறை இருக்கும் நிலையில் அதனை மற்ற மாநிலங்களிலும் விரிவுப்படுத்த திட்டமானது வகுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு, கர்நாடகா,  பஞ்சாப்,  கோவா, கேரளா போன்ற மாநிலங்கள் வீட்டிற்கே நேரடியாக மதுபானங்களை டெலிவரி செய்வதை அனுமதிக்கும் திட்டங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே தமிழகத்தில் மதுவால் இளைஞர்கள் சீரழிவதால் மது விலக்கை அமல்படுத்தப்பட வேண்டும் என ராமதாஸ், அன்புமணி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். 

67

இந்நிலையில் மது விற்பனையில் தமிழகத்தை மிஞ்சுவதற்கு ஆளே இல்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் மது விற்பனை கல்லா கட்டியுள்ளது. ஓணம் பண்டிகை நாளில் மட்டும் ரூ.124 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.4 கோடி அதிகமாகும். விற்பனை முதல் இடத்தில் கொல்லத்தில் உள்ள மதுக்கடையில் ரூ.1.15 கோடியும், கருணாகப்பள்ளி 2வது இடமும்,  3வது இடத்தை சாலக்குடியும் பிடித்துள்ளது. 

77

ஆனால் உத்ராடம் வரையிலான 9 நாட்களில் கடந்த ஆண்டை ஒப்பிடும் போது மது விற்பனை குறைந்தே உள்ளது. கடந்த ஆண்டு ரூ.715 கோடிக்கு மது விற்பனையானது. ஆனால் தற்போது ரூ.701 கோடிக்கு தான் விற்பனை நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டை விட ரூ.14 கோடி குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. வயநாடு நிலச்சரிவு உயிர்ப்பலி காரணமாக அரசு சார்பில் ஓணம் கொண்டாட்டம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கேரள மக்கள் ஓணம் பண்டிகையை குடியும் கும்பாளமாக கொண்டாடியுள்ளனர். 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
டாஸ்மாக்
டாஸ்மாக் கடை
கேரளா

Latest Videos
Recommended Stories
Recommended image1
அதிமுகவில் இணைக்கிறார் காங்கிரஸின் பிரவீன் சக்கரவர்த்தி..! தவெகவில் சேர கேட் போட்ட பிடிஆர் டேப் மேட்டர்..!
Recommended image2
100 நாள் வேலை திட்டத்தில் வெறும் 16 நாட்கள் மட்டுமே வேலை.. திமுக அரசை வறுத்தெடுக்கும் அன்புமணி..
Recommended image3
அறைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved