- Home
- Tamil Nadu News
- இவ்வளவு ஆபாசமாக பேசும் சீமான் ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருப்பது வெட்கக்கேடு! கொதிக்கும் ஜோதிமணி!
இவ்வளவு ஆபாசமாக பேசும் சீமான் ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருப்பது வெட்கக்கேடு! கொதிக்கும் ஜோதிமணி!
தருமபுரியில் சீமான் சர்ச்சை கருத்து தெரிவித்த நிலையில், விஜயலட்சுமி குற்றச்சாட்டுக்கு பதிலளித்தார். இதற்கு காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சீமானின் பேச்சு பெண்களை அவமதிக்கும் வகையில் இருப்பதாக அவர் சாடியுள்ளார்.

தருமபுரியில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானின் பேச்சு அறுவெறுக்கத்தக்க வகையில் ஆபாசமாகவும், கீழ்த்தரமாகவும் பேசுகிறார். இவரெல்லாம் ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருப்பது வெட்கக்கேடானது என ஜோதிமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
Seeman
தருமபுரியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்கள் சந்திப்பில்: அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் என்ன நடவடிக்கை காவல்துறை எடுத்துள்ளது? அண்ணா பல்கலைக்கழக வழக்கில் யார் அந்த சார் என்பதை கண்டுபிடித்துவிட்டீர்களா? ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காவல்துறை என்ன விசாரணை நடத்தி உள்ளது? என்னுடன் மோதி ஜெயிக்க முடியாததால் பாலியல் வழக்கை கையிலெடுக்கிறார்கள்.
Seeman Vs vijayalakshmi
என்னை சமாளிக்க முடியாமல் திமுக அரசு அந்த பெண்ணை அழைத்து வருகிறது. என்னமோ வயசுக்கு வந்து குச்சுல உட்காந்துட்டு இருக்குற புள்ளைய, தூக்கிட்டு போய் சோளக்காட்டுல வச்சி குண்டுகட்டா கற்பழிச்சு விட்டமாதிரி எல்லாரும் கதறிட்டு இருக்கீங்க. கல்லூரியில் படிக்கும் பிள்ளையை கடத்திச்சென்று கற்பழித்தது போல் சித்தரிப்பதா? புகார் மீது விசாரணை நடத்திய பின் தானே குற்றம் நடந்ததா என்பது தெரியும். நடிகையை அச்சுறுத்தி நான் 7 முறை கருக்கலைப்பு செய்தேனா? அது உண்மையென்றால் அதுவும் ஒரு சாதனையே. ஒராண்டில் ஏழு முறை கருக்கலைப்பு செய்த சாதனையாளரும் நான்தான் என பேசியிருந்தார். இவரது பேச்சுக்கு பல்வேறு தரப்பில் கண்டனங்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில் சீமானின் இந்தப் பேச்சிற்காக காவல்துறை அவர் மீது தனியாக வழக்குப் பதிவுசெய்ய வேண்டும் என
காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கூறியுள்ளார்.
Jothimani
இதுதொடர்பாக கரூர் மக்களவை தொகுதி காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: சீமான் பொதுவெளியில், எல்லை கடந்து வெளிப்படையாக அறுவெறுக்கத்தக்க வகையில் ஆபாசமாகவும், கீழ்த்தரமாகவும் பேசுகிறார். இவரெல்லாம் ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருப்பது வெட்கக்கேடானது. தமிழ்நாட்டிற்கே தலைகுனிவு. பாதிக்கப்பட்ட பெண்ணை அவமதிப்பது மட்டுமல்லாமல் பெண் இனத்தையே சீமான் அவமதிக்கிறார்.
seeman controversy Speech
அவரைப் பொறுத்தவரை பெண்ணை தூக்கிப்போய் பாலியல் வன்கொடுமை செய்யாமல் வேறு எவ்விதமான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டாலும் அது பிரச்சினையில்லை. எவ்வளவு வக்கிரமான மனநிலை. அந்தக் குற்றச்சாட்டைத் தான் விஜயலட்சுமி சீமான் மீது வைக்கிறார். ஒரு பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்டு அவரை ஏமாற்றுவதும் சட்டப்படி கடுமையான குற்றமே என்பதை சட்டம் சீமானுக்குப் புரிய வைக்கும்.
Congress MP Jothimani
இப்படி ஆபாசமாக பாலியல் வக்கிரத்தோடு, பெண்களை அவமதிக்கும் வகையில், பெண்களின் பாதுகாப்பிற்கும், கண்ணியத்திற்கும் அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் பேசுகிற ஒருவரை ஒரு சமூகமாக நாம் கடுமையாக எதிர்க்கவேண்டும். இப்படிப்பட்ட பாலியல் வக்கிரம் பிடித்தவர்களுக்கு,பெண்களை கேவலமாக நினைப்ப்பவர்களுக்கு பொதுவாழ்வில் எவ்வித இடமும் இருக்கக்கூடாது.
Seeman Vs Jothimani
சீமானின் இந்தப் பேச்சிற்காக காவல்துறை அவர் மீது தனியாக வழக்குப் பதிவுசெய்ய வேண்டும். நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சகோதர ,சகோதரிகள் இப்படிப்பட்ட கேவலமான பேச்சை,செயலை ஆதரிக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். தமிழ் தேசியம் என்பது பெண்களை ஆபாசமாகவும், பாலியல் வக்கிரத்தோடும் பேசுவதல்ல. பெண்களின் கண்ணியத்தை மதிக்கக்கூடியது. வீரத்தைப் போற்றக் கூடியது என்பதை நினைவில் கொள்ளுங்கள் என காட்டமாக தெரிவித்துள்ளார்.