அமைச்சர் செந்தில் பாலாஜி டெல்லியில் யாரை சந்தித்தார்? வெளியான புகைப்படம்!
அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. டெல்லி சென்று வழக்கறிஞரை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

senthil balaji
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் முக்கிய பொறுப்புகளை வகித்து வருபவர் செந்தில் பாலாஜி. மின்சாரம் மற்றும் வருமானம் கொட்டக்கூடிய துறையான மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறையை செந்தில் பாலாஜி நிர்வகித்து வருகிறார். மதுபான துறையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக புதிய தமிழக கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் செந்தில் பாலாஜி துறை அமைச்சராக பொறுப்பு வகிக்கும் டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் மதுபான ஆலைகளில் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த மார்ச் 6 ,7, 8 ஆகிய தேதிகளில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது.
TASMAC Scam
இந்த சோதனையில் முடிவில் ரூ.1000 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை பரபரப்பு அறிக்கை வெளியிட்டு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அமைச்சர் செந்தில் பாலாஜி திட்டவட்டமாக மறுத்தார். ஆனாலும் பாஜகவினர் முறைகேட்டில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி டாஸ்மாக் அலுவலகம் முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் பங்கேற்க முயன்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழிசை. எச் ராஜா, வானதி சீனிவாசன் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: இரவோடு இரவாக டெல்லி சென்று வந்த கையோடு அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி முடிவு!
Minister Senthil Balaji
இந்நிலையில் தான் நேற்று முன்தினம் சட்டப்பேரவை முடிந்ததும் அமைச்சர் செந்தில் பாலாஜி டெல்லி சென்று மறுநாள் காலை சென்னை திரும்பியது மட்டுமல்லாமல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கலந்து கொண்டார். செந்தில் பாலாஜி டெல்லி சென்று வந்தது தொடர்பாக பல்வேறு விதமான செய்திகள் வெளியாகின. அதாவது டெல்லி மேலிடத்தை சமாதானம் செய்வதற்காக பாஜக முக்கிய பிரமுகரை சென்று சந்தித்து வந்ததாக தகவல் வெளியாகின. ஆனாலும் செந்தில் பாலாஜியின் டெல்லி பயணம் பற்றி அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் தகவலும் இல்லை.
இதையும் படிங்க: இன்னும் 15 நாட்கள் தான்! திமுக தொண்டர்களுக்கு பொதுச்செயலாளர் துரைமுருகன் முக்கிய உத்தரவு!
Mukul Rohatgi
இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி டெல்லி யாரை சந்தித்தார் என்பது தொடர்பான புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. அதாவது செந்தில் பாலாஜி நேற்று டெல்லி சென்று மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தஹியை சந்தித்து பேசியுள்ளார். டாஸ்மாக் ஊழல் வழக்கு சம்பந்தமாக அமலாக்கத்துறை வழக்குகளை எதிர்கொள்வது தொடர்பாக மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி ஆலோசனை நடத்தி இருக்கலாம் என கூறப்படுகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி இரவோடு இரவாக டெல்லி சென்று வந்த கையோடு சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடைக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.