MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்துகள் முடக்கம்! அமலாக்கத் துறை அதிரடி!

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்துகள் முடக்கம்! அமலாக்கத் துறை அதிரடி!

திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது தொடரப்பட்ட வழக்கில்  அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

1 Min read
Author : vinoth kumar
Published : Jan 23 2025, 10:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Anitha Radhakrishnan

Anitha Radhakrishnan

திமுக அமைச்சரவையில் மீன் வளத்துறை மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சராக அனிதா ராதாகிருஷ்ணன் பதவி வகித்து வருகிறார். இவர் கடந்த 2009-ம் ஆண்டு அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். கடந்த 2002-2006ம் ஆண்டில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சராக அனிதா ராதாகிருஷ்ணன் இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது கடந்த 2006ம் ஆண்டு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.

24
Enforcement Directorate

Enforcement Directorate

ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் வழங்கி சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தில் 2009ம் ஆண்டு திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதனடிப்படையில் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. மேலும், அனிதா ராதாகிருஷ்ணன், அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துகளை 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமலாக்கத்துறை முடக்கியது. 

34
Chennai High Court

Chennai High Court

சொத்துகளை முடக்கியதற்கு எதிராகவும், அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரியும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அனிதா ராதாகிருஷ்ணனின் ரூ.1.26 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி அதிர்ச்சி கொடுத்துள்ளது. 

44
Minister Anitha Radhakrishnan

Minister Anitha Radhakrishnan

இதுதொடர்பாக அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்: கடந்த 2022-ம் ஆண்டு அனிதா ராதாகிருஷ்ணனின் 18 அசையா சொத்துகள் முடக்கப்பட்டது. இந்நிலையில், ஏற்கனவே அமலாக்கத் துறையால் முடக்கப்பட்ட சொத்துகளை, அனிதா ராதாகிருஷ்ணனும், அவரது குடும்ப உறுப்பினர்களும் அனுபவித்து வருவது தெரியவந்தது. அதன் மூலம் வந்த வருவாயை பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்து, மறைமுகமாக சுமார் ரூ.17.74 கோடி வருமானம் ஈட்டியிருப்பதும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், அவரது தூத்துக்குடி, மதுரை, சென்னையில் உள்ள ரூ.1.26 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது. 
ஆளுங்கட்சியை சேர்ந்த அமைச்சரின் சொத்துக்கள் முடக்கப்பட்ட சம்பவம் திமுக நிர்வாகிகள் மற்றும் முதல்வர் ஸ்டாலின் அதிர்ச்சி அடைந்துள்ளார். 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சென்னை உயர் நீதிமன்றம்
திமுக
அமலாக்க இயக்குனரகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
ஒரு அரசியல்வாதி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நல்லகண்ணு ஐயா தான் உதாரணம் ! பிரேமலதா பேட்டி
Recommended image2
ரூ.5,000 சம்பளம் உயர்வு! யாருக்கெல்லாம்? சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்
Recommended image3
பள்ளி மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி! மூன்று நாட்கள் தொடர் விடுமுறை! குஷியில் அரசு ஊழியர்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved