- Home
- Tamil Nadu News
- ரொம்ப கம்மியான கட்டணத்தில் தீபாவளிக்கு ஊருக்கு செல்ல சூப்பர் சான்ஸ்.! மதுரை, நெல்லைக்கு MEMU ரயில் அறிவிப்பு
ரொம்ப கம்மியான கட்டணத்தில் தீபாவளிக்கு ஊருக்கு செல்ல சூப்பர் சான்ஸ்.! மதுரை, நெல்லைக்கு MEMU ரயில் அறிவிப்பு
தீபாவளி பண்டிகையையொட்டி பயணிகள் நெரிசலை சமாளிக்க தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. இதில் தாம்பரம் - செங்கோட்டை வழித்தடத்தில் முன்பதிவு உள்ள ரயில்களும், சென்னை - மதுரை வழித்தடத்தில் முன்பதிவு இல்லாத MEMU ரயில்களும் இயக்கப்பட உள்ளன.

தீபாவளி பண்டிகைக்காக அக்டோபர் 18ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைக்கவுள்ளது. இதன் காரணமாக சொந்த ஊரில் தீபாவளி பண்டிகை கொண்டாட பொதுமக்கள் தயாராகி வருகிறார்கள். இதன் காரணமாக அனைத்து ரயில்களிலும் இடங்கள் நிரம்பியுள்ளன. தனியார் ஆம்னி பேருந்துகளில் பல மடங்கு கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தீபாவளிக்கு ரயில்வே நிர்வாகம் சார்பாக சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அதிலும் முன்பதிவு முடிவடைந்துள்ள நிலையில் கடைசி வாய்ப்பாக தீபாவளி திருநாளை முன்னிட்டு பயணிகள் நெரிசலை சமாளிக்க தெற்கு ரயில்வே பல சிறப்பு ரயில்களை இயக்குகிறது.
- தாம்பரம் – செங்கோட்டை – தாம்பரம் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்கள்
ரயில் எண் 06013 / 06014
06013 தாம்பரம்–செங்கோட்டை:
புறப்படும் நேரம்: 17.10.2025 (வெள்ளி) மாலை 7.30
வருகை: செங்கோட்டை 18.10.2025 (சனி) காலை 7.30
06014 செங்கோட்டை–தாம்பரம்:
புறப்படும் நேரம்: 20.10.2025 (திங்கள்) இரவு 8.45
வருகை: தாம்பரம் 21.10.2025 (செவ்வாய்) காலை 9.45
1 – ஏசி சேர் காரு, 11 – சேர் காரு, 4 – பொதுத் துறை, 2 – மாற்றுத் திறனாளி பெட்டிகள் இணைக்கப்படும் எனவும், சென்னை தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, மதுரை, ராஜபாளையம், தென்காசி, செங்கோட்டையை சென்று சேர்கிறது.
சென்னை எக்மோர் – மதுரை MEMU சிறப்பு (முன்பதிவு இல்லா) ரயில் எண் 06161
புறப்படும் நேரம்: 17.10.2025 (வெள்ளி) இரவு 11.45
வருகை: 18.10.2025 (சனி) காலை 10.15
பாதை: மயிலாடுதுறை – கும்பகோணம் – திருச்சி வழியாக
முக்கிய நிறுத்தங்கள்: தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல்
மதுரை – தாம்பரம் MEMU சிறப்பு (பகல் ரயில்) ரயில் எண் 06162
புறப்படும் நேரம்: 18.10.2025 (சனி) மதியம் 12.00
வருகை: அதே நாள் மாலை 7.15
முக்கிய நிறுத்தங்கள்: திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு
சென்னை எக்மோர் – மதுரை MEMU சிறப்பு ரயில் எண் 06045
புறப்படும் நேரம்: 18.10.2025 (சனி) இரவு 11.45
வருகை: 19.10.2025 (ஞாயிறு) காலை 11.30
முக்கிய நிறுத்தங்கள்: தாம்பரம், விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை
மதுரை – தாம்பரம் MEMU சிறப்பு (இரவு ரயில்) ரயில் எண் 06046
புறப்படும் நேரம்: 21.10.2025 (செவ்வாய்) இரவு 8.30
வருகை: 22.10.2025 (புதன்) காலை 4.30
முக்கிய நிறுத்தங்கள்: திண்டுக்கல், திருச்சி, வில்லுபுரம், செங்கல்பட்டு
தாம்பரம்–செங்கோட்டை–தாம்பரம் (06013/06014) ரயில்களுக்கு முன்பதிவு இன்று (16.10.2025) மாலை 4.00 மணிக்கு தொடங்கும். மீதமுள்ள MEMU ரயில்கள் அனைத்தும் முழுக்க முழுக்க முன்பதிவு இல்லா (Unreserved) ரயில்களாக இயக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.