- Home
- Tamil Nadu News
- மனைவிகள் யாரும் இல்லாமல் தனியாக பூஜை போட்ட மாதம்பட்டி..! டெல்லியில் புதிய டிபன் சென்டர் திறப்பு
மனைவிகள் யாரும் இல்லாமல் தனியாக பூஜை போட்ட மாதம்பட்டி..! டெல்லியில் புதிய டிபன் சென்டர் திறப்பு
மாதம்பட்டி ரங்கராஜ் மீது பல புகார்கள் இருந்தும் அவர் மீது நடவடிக்கைகள் பாயவில்லை. இதற்கு காரணம் வலுவான அரசியல் தொடர்புகள் என்று கூறப்படுகிறது. தமிழ்நாடு பவனில் அவர் உணவகம் தொடங்க இடம் கிடைத்த பின்னணியிலும் அரசியல் தொடர்புகள் இருக்கலாம் என்கிறார்கள்.

கர்ப்பமாக்கி சர்ச்சை
10க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றியதாக மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிஸில்டா பகீர் கிளப்ப மறுபுறம் தன் தவறுகள் எதையும் சட்டை செய்யவில்லை ‘மாதமாக்கும்’ ரங்கராஜ். பல பெண்ளுடன் தொடர்ப்பு இருப்பதை போலவே தனது சமையல் சாம்ராஜ்யத்தில் பல கிளைகளாக பரப்பி வருகிறார். பெண்கள் விவகாரங்களில் சிக்கி இணையவாசிகள் மத்தியில் செமத்தியாக அடி வாங்கி வரும், மாதம்பட்டி ரங்கராஜ் மீதான சர்ச்சைகள் நாளுக்கு நாள் பகீர் கிளப்பி வரும் நிலையில் டெல்லி தமிழ்நாடு பவனில் புதிய கிளையை திறந்துள்ளார் மாதம்பட்டி ரங்கராஜ்.
நடிகரும் சமையல் கலை நிபுணருமான இவர், பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டாவை காதலித்து திருமணம் செய்து, கர்ப்பமாக்கி விட்டு ஏமாற்றியதாக சர்ச்சை அடங்கவில்லை. மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவரது மனைவி ஸ்ருதி. கடந்த சில காலமாகவே மாதம்பட்டி ரங்கராஜ் தனது மனைவியிடம் இருந்து பிரிய போவதாக, ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவை காதலித்து, கர்ப்பமாக்கி ஏமாற்றிய பிறகு மாதம்பட்டி ரங்கராஜுக்கும் தனக்கும் திருமணம் ஆன புகைப்படத்தை சில வாரங்களுக்கு முன்பு ஜாய் கிரிஸில்டா வெளியிட்டார்.
‘மாதமாக்கும்’ ரங்கராஜ்
‘‘மாதம்பட்டி ரங்கராஜ் மனைவி நான். என்னை அவர் ஏமாற்றிவிட்டார். எம்.ஆர்.சி நகரில் உள்ள திரிவேதியம்மன் கோவிலில் திருமணம் நடந்தது. அவர் என்னோடு சேர்ந்து வாழ சிலர் தடுக்கின்றனர் என தெரிவித்தார் என புகார் அளித்து போராடி வருகிறார் சாய் கிஸில்டா.
இந்நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், மாதம்பட்டி ரங்கராஜ் 3 நடுவர்களுள் ஒருவராக இருந்தார். இந்த நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளரான சீரியல் நடிகையான ஷபானாவிடமும் தவறாக நடந்து கொள்ள முயன்றதால் அந்த நிகழ்ச்சியில் இருந்தும் துரத்தி அடிக்கப்பட்டார் மாதம்பட்டி ரங்கராஜ். ‘மாதமாக்கும்’ ரங்கராஜ் என அவரை சமூகதளவாசிகள் அடித்து துவைத்து வரும் நிலையில், இப்போது டெல்லியில் உள்ள தமிழ்நாடு பவனில் ஒரு புதிய கிளையை திறந்துள்ளார் மாதம்பட்டி ரங்கராஜ்.
தமிழக பவனில் கிளை
இந்த தகவலை தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், ‘‘கோயம்புத்தூரின் நம்பகத்தன்மை டெல்லியின் நேர்த்தியுடன் ஒத்துப்போகிறது. மதம்பட்டி டிஃபன் சென்டர் - தென்னிந்தியாவின் மனதைத் தொடும் சுவைகளை தலைநகருக்குக் கொண்டுவருகிறது. கோயம்புத்தூரில் இருந்து கன்னாட் இடத்திற்கு ஒரு சுவை பயணம்’’ எனக் கூறி வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள அந்த இடம் இந்த கட்டிடத்தை பார்த்தால் டெல்லி சாணக்கியபுரியில் உள்ள தமிழக அரசின் வருந்தினர் மாளிகையில் உள்ள தமிழக பவன் போல் தெரிகிறது. அங்கு அவர் லீசுக்கு எடுத்து இந்த உணவகத்தை ஆரம்பித்துள்ளார் என்று கூறப்படுகிறது.
பின்னணியில் அரசியல் தொடர்புகள்..?
மாதம்பட்டி தங்கவேலு ஹாஸ்பிடாலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் உணவு சேவைகளை வழங்குகிறது.திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள் வீட்டு விசேஷ நிகழ்ச்சிகளுக்கு கேட்டரிங் சேவைகளைச் செய்கிறது. மாதம்பட்டி தங்கவேலு ஹாஸ்பிடாலிட்டி, துபாய், கலிபோர்னியா மற்றும் அயர்லாந்தில் கிளைகளை திறக்க திட்டமிட்டுள்ளது. சான் பிரான்சிஸ்கோவில் மாதம்பட்டிஸ் கஃபே இயங்கி வருகிறது.
மாதம்பட்டி ரங்கராஜ் மீது பல புகார்கள் இருந்தும் அவர் மீது நடவடிக்கைகள் பாயவில்லை. இதற்கு காரணம் வலுவான அரசியல் தொடர்புகள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் டெல்லியில் தமிழ்நாடு பவனில் அவர் உணவகம் தொடங்க இடம் கிடைத்த பின்னணியிலும் அரசியல் தொடர்புகள் இருக்கலாம் என்கிறார்கள்.