MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சிபிஎஸ்இ தேர்வு முடிவு.? இந்த தேதியில் தான் வெளியாகிறது- வெளியான முக்கிய தகவல்

சிபிஎஸ்இ தேர்வு முடிவு.? இந்த தேதியில் தான் வெளியாகிறது- வெளியான முக்கிய தகவல்

சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் 2025-26 கல்வியாண்டில் அறிமுகம். 10ஆம் வகுப்பு தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை நடைபெறும். தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி தொடர்பான தகவலும் வெளியாகியுள்ளது.

2 Min read
Author : Ajmal Khan
| Updated : Apr 02 2025, 11:29 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

CBSE exam result date : கல்வி தான் மாணவர்களை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும் முக்கிய ஆயுதம் ஆகும். அந்த வகையில் தற்போது உள்ள நவீன தொழில்நுட்பங்களுக்கு இணையாக மாணவர்களுக்கு கல்வியும் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதன் படி மத்திய அரசின் சிபிஎஸ்இ (CBSE) 2025-26 கல்வியாண்டிற்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளின் புதிய பாடத்திட்டத்தை மாற்றம் செய்யப்பட்டு வெளியிட்டுள்ளது.  அதன்படி 10ஆம் வகுப்பில் ஏற்கனவே உள்ள தேர்வு நடைமுறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைச் செய்துள்ளது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

சிபிஎஸ்இ பாட திட்டம் மாற்றம்

அந்த வகையில் இந்த ஆண்டு முதல், சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை, பிப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெறும். இது மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்களை பெறவும் தேர்ச்சி பெறவும் அதிக வாய்ப்புகளைத் தருகிறது. மேலும் பாட திட்டத்தின் படி மனப்பாடம் செய்வதைவிட, திறன் சார்ந்த கேள்விகள் மூலம் புரிந்து கொண்டு தேர்வு எழுதவும் வழி வகை செய்கிறது. 10வது மற்றும் 12வது புதிய பாடத்திட்டம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பைக் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைப் பார்க்கவும்.

https://docs.google.com/viewerng/viewer?url=https://cbseacademic.nic.in/web_material/Circulars/2025/14_Circular_2025.pdf

35

சிபிஎஸ்இ தேர்வுகள் எப்போது.?

இதனிடையே சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 10 வது மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுவானது முடிவடைந்துள்ளது. அதன் படி, பிப்ரவரி மாதம் 15ம் தேதி தொடங்கி மார்ச் மாதம் இறுதி வரை நடைபெற்றது.  2024-25 வாரியத் தேர்வுகளை சுமார் 42 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர்.  

இதன் படி  10 ஆம் வகுப்பு படிக்கும் 24.12 லட்சம்  மாணவர்கள் 84 பாடங்களில் தேர்வு எழுதியுள்ளனர், அதே நேரத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வுகளுக்கு 120 பாடங்களுக்கு 17.88 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். 

45

தேர்வு முடிவுகள் எப்போது.?

இந்த நிலையில் மாணவர்களுக்கு அடுத்த கட்டத்திற்கு செல்ல இந்த தேர்வு முடிவுகள் முக்கிய அங்கம் வகிக்கிறது. ஆனால் இதுவரை தேர்வு முடிவுகள் எந்த தேதியில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இருந்த போதும் குறிப்பிட்ட தேதியில் தான் ஒவ்வொரு ஆண்டும் தேர்வு முடிவு வெளியிட்டு வருகிறது. இதன் படி 2023ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் தேதியும், 2024ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் தேதியும் 10 வது மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவானது வெளியிடப்பட்டுள்ளது.

55

இதற்கு முந்தைய ஆண்டுகளில் கொரோனா பாதிப்பு காரணமாக தேர்வு முடிவுகள் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் வெளியிடப்பட்டது. எனவே இந்த ஆண்டிற்கான சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் மே மாதம் 10ஆம் தேதி முதல் 15ஆம் தேதிக்குள் வெளியாகும் என கல்வியாளர்கள் கூறுகின்றனர். 
 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
சி.பி.எஸ்.ஈ.
தேர்வு
தேர்வு
பள்ளிக் கல்வித் துறை
பள்ளி மாணவர்
விடுமுறை
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329
AUSAUS
(90.0 ov)330/4
Day 2
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Recommended Stories
Recommended image1
Now Playing
யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம், செயல்பாடுகளைப் பார்த்து விமர்சிப்போம் ! தமிழிசை பேட்டி
Recommended image2
Now Playing
கிண்டி அரசினர் ஐ.டி.ஐ-யில் புதிய மின்சார திறன் ஆய்வகங்கள் திறப்பு: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!
Recommended image3
Now Playing
சூரசம்ஹாரத்திற்கு 5 லட்சம் பக்தர்கள் வருகை எதிர்பார்ப்பு: ஏற்பாடுகளை ஆய்வு செய்த அமைச்சர் ஸ்ரீநாத்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved