MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ஜெயலலிதாவுக்கே தண்ணிகாட்டிய தொகுதி... முதல்வராக்கிய மக்களே அவரை தோற்கடித்த வரலாறு தெரியுமா?

ஜெயலலிதாவுக்கே தண்ணிகாட்டிய தொகுதி... முதல்வராக்கிய மக்களே அவரை தோற்கடித்த வரலாறு தெரியுமா?

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை ஜெயிக்க வைத்து, பின்னாளில் தோற்கடித்த தொகுதி ஒன்று தமிழ்நாட்டில் இருக்கிறது. அந்த தொகுதியை பற்றி விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 23 2026, 04:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Interesting Facts About bargur Constituency
Image Credit : Getty

Interesting Facts About bargur Constituency

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போச்சம்பள்ளி, நாகரசம்பட்டி, அரசம்பட்டி, ஜெகதேவி போன்ற தொகுதிகளை உள்ளடக்கியது தான் பர்கூர் தொகுதி. மாம்பழம் மற்றும் தென்னை விவசாயம் தான் இந்த தொகுதி மக்களின் பிரதான வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. பர்கூர் ஜவுளி மார்க்கெட் முக்கிய வர்த்தக வேலைவாய்ப்பாகவும் இருக்கிறது. ஜெகதேவி பகுதிகளில் கிரானைட் தொழிற்சாலை, பர்கூர் சிப்கார்ட், போச்சம்பள்ளி சிப்கார்ட் ஆகியவை மக்களுக்கு தொழில்துறை வேலை வாய்ப்புகளை வழங்குகிறது.

24
அதிமுக கோட்டையாக திகழும் பர்கூர்
Image Credit : Asianet News

அதிமுக கோட்டையாக திகழும் பர்கூர்

பர்கூர் தொகுதியில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 135 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 20 ஆயிரத்து 197 பெண் வாக்காளர்களும், 17 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 2 லட்சத்து 37 ஆயிரத்து 349 வாக்காளர்கள் உள்ளனர். இந்த தொகுதியில் இதுவரை நடந்த தேர்தல்களில் அதிகபட்சமாக அதிமுக 9 முறை வெற்றி பெற்றிருக்கிறது. திமுக வெறும் 3 தேர்தல்களில் வெற்றிபெற்றிருக்கிறது. தமிழக தேர்தல் வரலாற்றில் மறக்கவே முடியாத தொகுதியாக பர்கூர் இருந்து வருகிறது.

Related Articles

Related image1
நள்ளிரவில் போயஸ் கார்டன் கதவுகளை தட்டிய போலீஸ்..! ஜெயலலிதா கைதும், அதிரடி திருப்பங்களும்..! நடந்தது இதுதான்.!
Related image2
Now Playing
ஒரே தேர்தலில் 4 தொகுதிகளில் போட்டியிட முயன்ற ஜெயலலிதா.. கடைசில என்ன ஆச்சு தெரியுமா..?
34
ஜெயலலிதாவை முதல்வராக்கிய தொகுதி
Image Credit : Getty

ஜெயலலிதாவை முதல்வராக்கிய தொகுதி

1991-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், காங்கேயம் மற்றும் பர்கூர் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு ஜெயித்த ஜெயலலிதா, முதலமைச்சராகவும் பொறுப்பேற்றார். அப்போது காங்கேயம் தொகுதியை விட்டுவிட்டு, பர்கூர் எம்.எல்.ஏ-வாக ஜெயலலிதா, தொடர்ந்தார். அதனால், வரலாற்றில், முதலமைச்சர் தொகுதி என்கிற அந்தஸ்தும் பர்கூருக்கு உண்டு. அதே தொகுதியில் 1996 தேர்தலில் ஜெயலலிதா தோல்வி அடைந்ததும் மறக்க முடியாத நிகழ்வாக பார்க்கப்பட்டது. அந்த தேர்தலில், திமுகவிடம் ஜெயலலிதா தோல்வியை தழுவினார்.

44
பர்கூர் தேர்தல் வரலாறு
Image Credit : Getty

பர்கூர் தேர்தல் வரலாறு

2006-ம் ஆண்டு பர்கூர் தொகுதியில் தம்பிதுரை போட்டியிட்டு வென்றார். ஆனால் அவர் நாடாளுமன்ற தேர்தலில் வென்று எம்பி ஆனதால், 2009-ம் ஆண்டு பர்கூர் தொகுதியில் இடைத்தேர்தல் வந்தது. அப்போது அதிமுக இடைத்தேர்தலை புறக்கணித்தது. ஆளும் கட்சியாக இருந்த திமுக, அந்த தொகுதியில் வெற்றி பெற்றது. மீண்டும் 2011 மற்றும் 2016 ஆகிய தேர்தல்களில் அதிமுக வெற்றியை வசமாக்கியது. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக வேட்பாளர் மதியழகன், 12 ஆயிரத்து 614 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இதனால் இந்த தேர்தலில் பர்கூர் யார் கைவசம் செல்லப்போகிறது என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026
நம்ப தொகுதில இப்படியா?
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
என்டிஏ கூட்டணி தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை, பியூஸ்கோயலை சந்தித்த விஜயதாரணி
Recommended image2
குடும்ப அரசியல்..? குருமன்ஸ் சாதி சான்றிதழ் சர்ச்சை..! அதிமுகவின் வியூகத்தை உடைப்பாரா திமுக தேவராஜ்..?
Recommended image3
பள்ளிகளுக்கு 45 நாட்கள் கோடை விடுமுறை.. மாணவர்கள், ஆசிரியர்கள் குஷி.. முழு விவரம் இதோ!
Related Stories
Recommended image1
நள்ளிரவில் போயஸ் கார்டன் கதவுகளை தட்டிய போலீஸ்..! ஜெயலலிதா கைதும், அதிரடி திருப்பங்களும்..! நடந்தது இதுதான்.!
Recommended image2
Now Playing
ஒரே தேர்தலில் 4 தொகுதிகளில் போட்டியிட முயன்ற ஜெயலலிதா.. கடைசில என்ன ஆச்சு தெரியுமா..?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved