MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை- ஆட்சியர் அறிவிப்பு

சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை- ஆட்சியர் அறிவிப்பு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

1 Min read
Author : Ajmal Khan
| Updated : Nov 12 2024, 07:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Tamil Nadu Rains

Tamil Nadu Rains

உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அதிரடியாக தொடங்கியதையடுத்து, பல இடங்களில் மழையானது கொட்டித்தீர்த்தது. இந்த நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி  காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியுள்ளது. இது தமிழக இலங்கை கடலோரப்பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
school holiday

school holiday

இரவில் கொட்டித்தீர்த்த மழை

இதன் காரணமாக  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது. 

33
School holiday

School holiday

சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை

இதனையடுத்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நேற்று இரவில் இருந்து இடி மின்னலோடு மழை பெய்து வருகிறது. மழையானது இன்று காலையும் தொடர்ந்தது. இதனால் பள்ளிகள், கல்லூரிகள் செயல்படுமா என கேள்வி எழுந்தது.

சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே முன்னதாக  வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை மாவட்டத்தில் இன்று (12.11.2024)அனைத்து  பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்  வழக்கம்போல் செயல்படும்  என தெரிவித்திருந்தார். தற்போது அந்த உத்தரவு மாற்றப்பட்டு சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
கனமழை
தமிழ்நாடு மழை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Magalir Urimai Thogai: இவர்களுக்கெல்லாம் மகளிர் உரிமைத்தொகை கட்? தமிழக அரசு அதிரடி பிளான்! அதிர்ச்சியில் பெண்கள்!
Recommended image2
Tamilnadu Power Cut: நாளை தமிழகம் முழுவதும் 8 மணி நேரம் மின்தடை! உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க மக்களே!
Recommended image3
TVK Vijay: 'ஸ்டாப் டிரக்ஸ்' முழக்கமும்! மறுபக்கம் மதுபான ஆலை அதிபர் என்ட்ரி? யார் இந்த சந்தீப் ஆனந்த்? விஜய் கட்சியில் வெடித்த சர்ச்சை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved