MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ஒரு விரல் புரட்சி... தமிழ்நாட்டில் ரெக்கார்டு பிரேக்கிங் வாக்குப்பதிவு... 11 மணி நிலவரம் என்ன தெரியுமா?

ஒரு விரல் புரட்சி... தமிழ்நாட்டில் ரெக்கார்டு பிரேக்கிங் வாக்குப்பதிவு... 11 மணி நிலவரம் என்ன தெரியுமா?

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி, தமிழ்நாட்டில் 37.57% வாக்குகள் பதிவாகி இருக்கின்றன.

2 Min read
Author : Ganesh A
Published : Apr 23 2026, 12:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
TN Election 2026
Image Credit : instagram

TN Election 2026

தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்திய தேர்தல் ஆணையத்தின் தகவல்படி, வியாழக்கிழமை காலை 11 மணி நிலவரப்படி, தமிழ்நாட்டில் 37.57 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, திருப்பூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 42.45% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதைத் தொடர்ந்து நாமக்கல்லில் 41.41%, ஈரோட்டில் 41.00% வாக்குகள் பதிவாகியுள்ளன. சென்னை மாவட்டத்தில் 35.47%, கோயம்புத்தூரில் 38.62%, மதுரையில் 36.22% வாக்குகள் பதிவாகியுள்ளன. நீலகிரி மாவட்டத்தில் மிகக் குறைவாக 32.62% வாக்குகள் பதிவாகியுள்ளன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
அதிகபட்ச வாக்குப்பதிவு
Image Credit : Asianet News

அதிகபட்ச வாக்குப்பதிவு

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது காலை 11 மணி நிலவரப்படி 26.29 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது. இந்த முறை அதைவிட கூடுதலாக 11 சதவீதம் பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் 234 தொகுதிகளில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வியாழக்கிழமை தொடங்கியது. வாக்குப்பதிவு இன்று மாலை 6:00 மணிக்கு முடிவடைகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடைபெறும். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தவெக தலைவர் விஜய், திமுக அமைச்சர் கே.என். நேரு, நடிகர்கள் ரஜினிகாந்த், துருவ் விக்ரம் உள்ளிட்ட பல தலைவர்கள் இன்று காலை தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.

34
தமிழ்நாடு நிலவரம்
Image Credit : X

தமிழ்நாடு நிலவரம்

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5.73 கோடிக்கும் அதிகம் என்று மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். இதில் 2,93,04,905 பெண் வாக்காளர்கள், 2,80,30,658 ஆண் வாக்காளர்கள் மற்றும் 7,728 மூன்றாம் பாலினத்தவர் உள்ளனர். மேலும், 14,59,039 முதல் முறை வாக்காளர்களும், 68,501 ராணுவ வீரர்களும் வாக்களிக்க உள்ளனர். ஏற்கனவே 4,18,541 தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கைக்காக 62 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தத் தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் காங்கிரஸ், தேமுதிக, விசிக ஆகிய கட்சிகளும், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக, பாமக ஆகிய கட்சிகளும் மோதுகின்றன.

44
மேற்கு வங்க நிலவரம்
Image Credit : X

மேற்கு வங்க நிலவரம்

அதேபோல் மேற்கு வங்கத்தில், 294 சட்டமன்றத் தொகுதிகளுக்காக கட்சிகள் போட்டியிடுகின்றன. இந்திய தேர்தல் ஆணையத்தின்படி, முதல் கட்டத்தில் 152 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டத்தில் 142 தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கிறது. இந்த கட்டத்தில் மொத்தம் 1,478 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தற்போதைய முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தொடர்ந்து நான்காவது முறையாக ஆட்சியைப் பிடிக்க முயன்று வருகிறார். கடந்த தேர்தலில் 77 இடங்களை வென்ற பாஜக, இந்த முறை ஆட்சியைப் பிடிக்க தீவிர முயற்சி செய்து வருகிறது.

காலை 11 மணி நிலவரப்படி, மேற்கு வங்கத்தின் முதல் கட்ட தேர்தலில் 41.11 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. மேற்கு வங்கத்தில், பஸ்சிம் மெதினிபூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 44.68% வாக்குகள் பதிவாகியுள்ளன. ஜார்கிராமில் 43.71%, பாங்குராவில் 43.22% வாக்குகள் பதிவாகியுள்ளன. மால்டா மாவட்டத்தில் மிகக் குறைவாக 38.22% வாக்குகள் பதிவாகியுள்ளன.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Tamil Nadu Schools: இனி இந்த கட்டணத்தை வாங்க கூடாது.. முதல்வர் விஜய் ஆட்சியில் மாணவர்களுக்கு நிம்மதி
Recommended image2
School Holiday: மாணவர்களுக்கு இன்று ஜாலி நியூஸ்! கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
Recommended image3
Diwali Bonus 2026: அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு எவ்வளவு போனஸ்? யாருக்கெல்லாம் கிடைத்தது?
Related Stories
Recommended image1
Now Playing
தேர்தல் எதிரொலி....வெறிச்சோடிய ராமேஸ்வரம் ! - பக்தர்கள் வருகை இன்றி காணப்பட்ட முக்கிய இடங்கள்
Recommended image2
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணிநேரம் நீட்டிக்க வேண்டும்... விஜய் வைத்த கோரிக்கை; ஏற்குமா தேர்தல் ஆணையம்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved