MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • அடுத்த 3 மணி நேரம் உஷார்! தமிழகத்தில் எட்டு மாவட்டங்களில் ஏடாகூடமாக மழை வெளுத்து வாங்கப்போகுதாம்

அடுத்த 3 மணி நேரம் உஷார்! தமிழகத்தில் எட்டு மாவட்டங்களில் ஏடாகூடமாக மழை வெளுத்து வாங்கப்போகுதாம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33°செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்

1 Min read
Author : vinoth kumar
| Updated : Nov 13 2025, 10:17 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
நவம்பர் மாதம் தொடங்கியதில் முதல் வெயில்
Image Credit : our own

நவம்பர் மாதம் தொடங்கியதில் முதல் வெயில்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 16ம் தேதி தொடங்கியதில் இருந்து கனமழை பெய்தது. பின்னர் நவம்பர் மாதம் தொடங்கியதில் காலை நேரத்தில் வெயிலும், இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் பனி பொழிவும் இருந்து வருகிறது. இந்நிலையில் இன்றை நாள் எப்படி இருக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

25
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி
Image Credit : Google

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 15 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Related Articles

Related image1
மாணவர்களே சூப்பர் சான்ஸ் மிஸ் பண்ணிடாதீங்க! நவம்பர் 24 வரை தான் டைம்! ரூ.50,000 ஊக்கத் தொகை வழங்கும் தமிழக அரசு!
Related image2
நள்ளிரவில் போன் போட்ட பூமணி! 65 வயதில் துள்ளிக்குதித்து போன சின்னப்பராஜ்! இறுதியில் நடந்த எதிர்பாராத ட்விஸ்ட்!
35
சென்னையில் வானிலை நிலவரம்
Image Credit : Google

சென்னையில் வானிலை நிலவரம்

அதேபோல் இன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33°செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.

45
கனமழை எச்சரிக்கை
Image Credit : our own

கனமழை எச்சரிக்கை

இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு அதாவது (காலை 10 மணிவரை) மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருநெல்வேலி, தூத்துக்குடி கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால் வேலைக்கு செல்வோர் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

55
டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர்
Image Credit : our own

டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர்

இதனிடையே டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் வெளியிட்டுள்ள பதிவில்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஆங்காங்கே விட்டு விட்டு மழை எதிர்ப்பார்க்கலாம். தென் கடலோர மாவட்டங்களான இராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இன்று பகல் முழுதும் விட்டு விட்டு மழை தொடரும். வரக்கூடிய மணி நேரத்தில் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் மழை எதிர்ப்பார்க்கலாம் என தெரிவித்துள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மழை செய்திகள்
தமிழ்நாடு மழை
கனமழை

Latest Videos
Recommended Stories
Recommended image1
கல்வியில் சிறந்த தமிழ்நாடு.. புதிய உயரங்களை அடைவதில் பெருமிதம் கொள்வோம்..! முதல்வர் பெருமிதம்
Recommended image2
வெயிலின் ஆட்டம் ஆரம்பிச்சுடுச்சு! இனிமே குடை இல்லாமல் வெளியே போவாதீங்க! மழை குறித்து எதிர்பாராத ட்விஸ்ட்
Recommended image3
குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள்.! விடுமுறை தொடர்பான சூப்பர் அறிவிப்பு வெளியானது!
Related Stories
Recommended image1
மாணவர்களே சூப்பர் சான்ஸ் மிஸ் பண்ணிடாதீங்க! நவம்பர் 24 வரை தான் டைம்! ரூ.50,000 ஊக்கத் தொகை வழங்கும் தமிழக அரசு!
Recommended image2
நள்ளிரவில் போன் போட்ட பூமணி! 65 வயதில் துள்ளிக்குதித்து போன சின்னப்பராஜ்! இறுதியில் நடந்த எதிர்பாராத ட்விஸ்ட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved