MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Visha Yoga Alert
House Construction Cost Ideas
OTT Release This Week
DA Hike
Today's Rasi Palan
FD Vs RD Rate Calculator
8th Pay Commission
Vakra Maha Yoga
Kitchen Sink Cleaning Tips
Train Lower Berth
8th Pay Commission Pension Revision Demands
Bigg Boss Tamil Season 10
  • Home
  • Tamil Nadu News
  • TN Rain Alert: குடை ரெடியா மக்களே! இன்று 5 மாவட்டங்களில் அண்டா அண்டாவா கொட்டப்போகும் கனமழை!

TN Rain Alert: குடை ரெடியா மக்களே! இன்று 5 மாவட்டங்களில் அண்டா அண்டாவா கொட்டப்போகும் கனமழை!

TN Rain Alert: தமிழகத்தில் இன்று (ஜூன் 20) சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை வெளுத்தெடுக்க போகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2 Min read
Author : Rayar A
Published : Jun 20 2026, 07:29 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தமிழகத்தில் கனமழை
Image Credit : AI

தமிழகத்தில் கனமழை

தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் ஒருபக்கம் மழையும், மறுபக்கம் வெயிலும் அடித்து வருகிறது. அதாவது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோல் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்கள், டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்கிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கப் போகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை
Image Credit : Asianet News

5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை

ஜூன் 20ஆம் தேதியான இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யு வாய்ப்புள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். 

நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Articles

Related image1
Rain Alert: 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. குடையை மறக்காதீங்க! வானிலை மையம் வார்னிங்
Related image2
TN Weather Update: வெயிலுக்கு பிரேக்.. அடிச்சு தும்சம் செய்யப்போகும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?
34
கோவை டூ கன்னியாகுமரி
Image Credit : Google

கோவை டூ கன்னியாகுமரி

ஜூன் 21ஆம் தேதியான நாளை திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். ஜூன் 22 ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதேபோல் ஜூன் 23ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

44
சென்னையில் மழை பெய்யுமா?
Image Credit : our own

சென்னையில் மழை பெய்யுமா?

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

இன்று மற்றும் நாளை தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

 ஜூன் 22ஆம் தேதி தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இந்த நாட்களில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
தமிழ்நாடு
வானிலை அறிக்கை
கனமழை
மழை செய்திகள்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Anbil Mahesh : ரூ.100 கோடி ஊழல் புகார் எதிரொலி... முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டில் திடீர் ரெய்டு
Recommended image2
Tomorrow Power Cut: நாளைக்கு பவர் கட்..உங்க ஊர் பெயர் இருக்கா? முழு லிஸ்ட்டையும் செக் பண்ணுங்க!
Recommended image3
Investment: லண்டனில் முதல்வர் விஜய்... ஆட்டோமொபைல், க்ரீன் எனர்ஜியில் குவியும் முதலீடுகள்!
Related Stories
Recommended image1
Rain Alert: 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. குடையை மறக்காதீங்க! வானிலை மையம் வார்னிங்
Recommended image2
TN Weather Update: வெயிலுக்கு பிரேக்.. அடிச்சு தும்சம் செய்யப்போகும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved