தவெக முக்கிய பிரமுகர் மாரடைப்பால் உயிரிழப்பு! அதிர்ச்சியில் விஜய்!
Tamilaga Vettri Kazhagam: தமிழக வெற்றிக் கழகத்தின் திருநெல்வேலி வடக்கு மாவட்டச் செயலாளர் சஜி மாரடைப்பால் உயிரிழந்தது விஜய்யை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Tirunelveli
திருநெல்வேலி வடக்கு மாவட்டச் செயலாளர் சஜி. இவர் கேரளா மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்தவர். ஆனால், இவர் பாளையங்கோட்டை அருகே உள்ள சாந்தி நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையிர் சஜி நெல்லை விஜய் மக்கள் இயக்கத்தினுடைய மாவட்ட தலைவராகவும், அதேபோல கேரளா மாநில விஜய் மக்கள் இயக்கத்தின் பொறுப்பாளராகவும் இருந்து வந்தார்.
tvk vijay
தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்ட பின்னர் நெல்லை வடக்கு மாவட்ட பொறுப்பாளராக இருந்து பின்னர் வடக்கு மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்டார். தொடர்ந்து அவர் நெல்லை உள்ளிட் பல்வேறு மாவட்டங்களில் கட்சி ரீதியான பணிகளை மேற்கொண்டிருந்தார். பல்வேறு கட்சியுடைய முக்கிய நிகழ்வுகளில் மற்றும் கடந்த 13ம் தேததி தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனையில் கலந்து கொண்டார். குறிப்பாக புஸ்ஸி ஆனந்திடம் நேரடியாக பேசக்கூடிய நபர்களில் நேரடியாக பேசக்கூடிய நபர்களில் இவரும் ஒருவராக இருந்து பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்தார்.
Saji TVK
நெல்லை வடக்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட பிறகு விஜய் இவருடன் பேசிய காட்சிகள் வைரலானது. சென்னையில் நேற்றைய தினம் கட்சி பணிகளை முடித்துவிட்டு அறையில் தங்கி இருந்த போதுத மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தற்போது அவர் உடல் சென்னையில் வைக்கப்பட்டுள்ளது. தவெக கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
heart attack
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் திருநெல்வேலி வடக்கு மாவட்டச் செயலாளர் சஜி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அக்கட்சியின் தலைவர் விஜய்யை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதுதொடர்பாக தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி குறிப்பில்: தமிழக வெற்றிக் கழகத்தின் திருநெல்வேலி வடக்கு மாவட்டச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்த அன்பிற்குரிய சகோதரர் திரு. சஜி (எ) B.அந்தோணி சேவியர் அவர்கள் காலமானது, மிகுந்த அதிர்ச்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது. என் மீதும் கழகத்தின் மீதும் அளவற்ற அன்பு கொண்டு கழகப் பணியாற்றி வந்தவர். அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.