vegetables : உச்சத்தில் இருந்த தக்காளி விலை குறைந்ததா? கோயம்பேட்டில் காய்கறி விலை நிலவரம் என்ன.?
காய்கறிகளின் வரத்தை பொறுத்து கோயம்பேடு சந்தையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களாக தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் வரத்து பெரும் அளவில் குறைந்துள்ளது. இதன் காரணமாக தக்காளி, அவரைக்காய், பீன்ஸ், முருங்கைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலையானது கடுமையாக உயர்ந்துள்ளது.
vegetable price hike
வெங்காயம் விலை என்ன.?
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 75 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீட்ரூட் 1 கிலோ 30 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், நெல்லிக்காய் ஒரு கிலோ 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
vegetables
அவரைக்காய் விலை என்ன.?
குடைமிளகாய் ஒரு கிலோ 65 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
vegetables
கத்திரிக்காய் விலை நிலவரம்
கேரட் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒன்று 30 முதல் 40 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒருகிலோ 20 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீன்ஸ் 120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வேலையே செய்யாத ஊழியருக்கு முழு சம்பளம் கொடுத்து சிக்கலில் மாட்டிக்கொண்ட நிறுவனம்!
முள்ளங்கி விலை என்ன.?
இஞ்சி ஒரு கிலோ 150 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கு விற்பனையாகிறது.