MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • டார்க் பேண்டஸி சுவிஸ் ரோல் டூ ஃப்ரூட் கேக் வரை... குழந்தைகள் தினத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கேக்; வெளியான அரசாணை!

டார்க் பேண்டஸி சுவிஸ் ரோல் டூ ஃப்ரூட் கேக் வரை... குழந்தைகள் தினத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கேக்; வெளியான அரசாணை!

நவ.14ம் தேதி, தேசிய குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. அன்று, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு, 'கேக்' வழங்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

2 Min read
Author : Meenakshisundaram
Published : Oct 24 2026, 08:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 62 லட்சம் கேக் துண்டுகள் விநியோகம்
Image Credit : chatgpt

தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 62 லட்சம் கேக் துண்டுகள் விநியோகம்

நவ.14 அன்று குழந்தைகள் தினத்தைக் கொண்டாடும் வகையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்குக் கேக் வழங்கும் திட்டத்திற்கான அதிகாரப்பூர்வ அரசாணையைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மாநில அரசு குழந்தைகள் தினத்தை அனைவருடனும் இணைந்து ஒரு கூட்டு விழாவாக முன்னெடுப்பது இதுவே முதல் முறை என்று மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்கும் திட்டத்திற்காக முதற்கட்டமாக ரூ.9.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு டெண்டர் கோரப்பட்டிருந்தது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசாணையின்படி, ஸ்பாஞ்ச் ரக கேக் துண்டுகளை (Sponge-style slice cakes) வழங்குவதற்கு 4 முன்னணி நிறுவனங்களுக்கு ஏற்பு கடிதங்கள் (Letters of Acceptance - LoAs) வழங்கப்பட்டு பணி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவை, பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் (Britannia Industries), ஐடிசி லிமிடெட் (ITC Ltd), எலைட் நேச்சுரல் பிரைவேட் லிமிடெட் (Elite Natural Pvt Ltd), ட்ரீம் பேக் பிரைவேட் லிமிடெட் (Dream Bake Pvt Ltd) இந்த 4 நிறுவனங்களிடமிருந்து மொத்தம் 62 லட்சத்து 46 ஆயிரத்து 412 கேக் துண்டுகள் ரூ.7.54 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
பல்வேறு சுவைகளில் கேக் ரகங்கள்
Image Credit : x

பல்வேறு சுவைகளில் கேக் ரகங்கள்

பழங்கள் (Fruit), வெண்ணிலா (Vanilla) மற்றும் சாக்லேட் (Chocolate) உள்ளிட்ட பல்வேறு சுவைகளில் இந்த கேக்குகள் மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட உள்ளன. மேலும் மாணவர்களுக்குப் பிடித்தமான வகையில் வெரைட்டியைச் சேர்க்கும் விதமாக, சன்பீஸ்ட் டார்க் பேண்டஸி சுவிஸ் ரோல் சாக்லேட்டுகளும் (Sunfeast Dark Fantasy Swiss Roll Chocolates) இந்தத் தேர்வில் சேர்க்கப்பட்டுள்ளன.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள ஒவ்வொரு மாணவரும், ஆசிரியர்கள் மற்றும் பள்ளிப் பணியாளர்களுடன் இணைந்து குழந்தைகள் தினத்தை ஒரு கூட்டு விழாவாகக் கொண்டாடுவதை உறுதி செய்வதே இந்த முன்னெடுப்பின் நோக்கமாகும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், "அரசின் இந்த சிறிய முயற்சி குழந்தைகள் பள்ளியுடன் கொண்டுள்ள பிணைப்பை வலுப்படுத்தும் என்றும், அவர்களின் பள்ளி வருகையை (வருகைப் பதிவு) ஊக்குவிக்கும் என்றும் நம்புகிறோம்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

33
கூடுதல் விலைக்கு கேக் வாங்கப்படுகிறதா? உண்மை என்ன?
Image Credit : chatgpt

கூடுதல் விலைக்கு கேக் வாங்கப்படுகிறதா? உண்மை என்ன?

இந்நிலையில், பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ள கேக் சந்தை விலையை விட கூடுதல் விலைக்கு வாங்கப்படுவதாக சமூக வலைதளங்களில் காணொலிகளுடன் தகவல்கள் பரவி வந்தன. இதற்கு தமிழ்நாடு அரசின் தகவல் நம்பகத்தன்மை பிரிவு (Fact Check Unit) விளக்கம் அளித்து செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ள கேக் மார்க்கெட் விலையை விடக் கூடுதல் விலைக்கு வாங்கப்படுகிறது.

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள 45 கிராம் எடையுள்ள ஒரு பிரிட்டானியா கேக் ரூ.12.15-க்கு (Excluding GST) கொள்முதல் செய்யப்படவுள்ளது. சமூக வலைதள வீடியோவில் 33 கிராம் கேக் ரூ.15-க்கு மார்க்கெட் விலையில் விற்பனை செய்யப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், மார்க்கெட் விலையை விட கூடுதல் விலைக்கு கேக் கொள்முதல் செய்யப்படுவதாகப் பரப்பப்படும் தகவல் முற்றிலும் தவறானது மற்றும் உண்மைக்கு மாறானது என்று அதில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

About the Author

M
Meenakshisundaram
மீடியா துறையில் 5+ ஆண்டுகள் அனுபவம் கொண்ட மீனாட்சிசுந்தரம், தி இந்தியன் எக்ஸ்பிரஸ், சன் நியூஸ், தந்தி டிவி, பாலிமர் நியூஸ் உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்களில் திறம்பட பணியாற்றியவர். பிரேக்கிங் நியூஸ், ஆழமான ஆய்வுக் கட்டுரைகளில் தனித்துவ முத்திரை பதித்த இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சீனியர் சப்-எடிட்டராகப் பொறுப்பு வகிக்கிறார். அறிவியல், புதிய டெக்னாலஜி, வணிகம், அரசியல் மற்றும் குற்றப் பின்னணி சார்ந்த விவகாரங்களை எளிய நடையில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
தமிழ்நாடு அரசு
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Famous Madurai Food: ஜிகர்தண்டா முதல் மட்டன் சுக்கா வரை! மதுரையை ஒரு பிடி பிடிக்கும் 5 உணவுகள்!
Recommended image2
Rain Update: தமிழகத்தின் 33 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
Recommended image3
Now Playing
சட்டம் - ஒழுங்கு சீர்கேடு மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து திமுக எம்பி கனிமொழி ஆவேசம்!
Related Stories
Recommended image1
Now Playing
சட்டம் - ஒழுங்கு சீர்கேடு மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து திமுக எம்பி கனிமொழி ஆவேசம்!
Recommended image2
Rain Update: தமிழகத்தின் 33 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved