Fengal Cyclone Relief: ஃபெஞ்சல் புயல்! முதல்வர் ஸ்டாலினை தொடர்ந்து திமுக எம்எல்ஏக்களும் அதிரடி!
Fengal Cyclone Relief: ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில், திமுக எம்எல்ஏக்கள் தங்கள் ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினர்.
Fengal Cyclone
தமிழ்நாட்டில் ஃபெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் பாதிக்கப்பட்ட விழுப்புரம். கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
Floods Affect
இதையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்களது சட்டமன்ற உறுப்பினருக்கான ஒரு மாத ஊதியத்தை ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு டிசம்பர் 5ம் தேதி அன்று தலைமைச் செயலகத்தில், அரசு தலைமைச் செயலாளர் முருகானந்தம் வழங்கினார்.
CM Stalin
மேலும், திமுக எல்எல்ஏக்கள் அனைவரும் தங்களது ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
DuraiMurugan
அதன்படி, துணை முதலமைச்சர், அமைச்சர் பெருமக்கள், சட்டப்பேரவை துணைத் தலைவர், அரசு தலைமைக் கொறடா, திமுக எல்எல்ஏக்கள் ஆகியோரின் ஒரு மாத ஊதியமான 1 கோடியே 30 இலட்சத்து 19 ஆயிரத்து 750 ரூபாய்க்கான வங்கி வரைவோலைகள்/காசோலைகளை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு, திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் இன்றையதினம் முதலமைச்சர் அவர்களிடம் வழங்கினார். இந்நிகழ்வின்போது, அரசு தலைமைக் கொறடா கா. ராமச்சந்திரன் உடனிருந்தார்.