MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மாணவர்கள், ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு.! 28 ஆம் தேதி பள்ளிகளில் கண்டிப்பாக இதை செய்யணும்- கல்வித்துறை அதிரடி

மாணவர்கள், ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு.! 28 ஆம் தேதி பள்ளிகளில் கண்டிப்பாக இதை செய்யணும்- கல்வித்துறை அதிரடி

மாணவர்களின் கல்வி மற்றும் ஒழுக்கத்தை மேம்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பள்ளி மேலாண்மைக் குழு கூட்டங்களில் போதைப் பொருட்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

1 Min read
Author : Ajmal Khan
Published : Aug 25 2025, 11:06 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
பள்ளிகளில் மாணவர்களின் ஒழுக்கம்
Image Credit : School education pro

பள்ளிகளில் மாணவர்களின் ஒழுக்கம்

கல்விக்காக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அதிலும் மாணவர்கள் கல்வி அறிவில் மட்டும் சிறந்து விளங்குவதோடு மட்டுமில்லாமல் நல் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்க பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. அந்த வகையில் மாணவர்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகளை ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்கப்பட்டு வருகிறது. 

பள்ளிகளில் வாழ்க்கை கல்வி, மேலும் மாணவர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்த, அவர்களை வெளியுலகம் அறியச் செய்யும் திட்டம். பள்ளி மாணவர்களை அரசு அருங்காட்சியகங்கள், வரலாற்ற இடங்கள் மற்றும் சமூக சேவை தளங்களுக்கு அழைத்துச் சென்று, சமூக பொறுப்பு மற்றும் ஒழுக்கத்தை கற்பிக்கப்பட்டு வருகிறது.

23
மாணவர்களிடேய போதைப்பழக்கம்
Image Credit : Google

மாணவர்களிடேய போதைப்பழக்கம்

இந்த சூழலில் தற்போது போதைப்பழக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பள்ளி மாணவர்களிடம் சர்வ சாதாரணமாக உள்ளது. மது போதையில் பள்ளிகளுக்கு வருவது. ஆசிரியர்களை தாக்குவது போன்ற தீய பழக்கங்களில் மாணவர்கள் சிக்கியுள்ளனர். இதனை தடுக்க பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

 அந்த வகையில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வரும் 28ஆம் தேதி பள்ளி மேலாண்மை குழு கூட்டங்களை நடத்தவும், அந்த கூட்டத்தில் போதைப் பொருளுக்கு எதிராக தீர்மானங்களை நிறைவேற்றவும் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது .

Related Articles

Related image1
கொத்தாக வரும் 3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு குஷியான அறிவிப்பு
Related image2
ஆசிரியர்கள் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது! இனி அவ்வளவுதான்! செக் வைத்த பள்ளிக்கல்வித்துறை!
33
பள்ளிகளில் போதைப்பொருட்களுக்கு எதிராக தீர்மானம்
Image Credit : Asianet News

பள்ளிகளில் போதைப்பொருட்களுக்கு எதிராக தீர்மானம்

இது தொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட இயக்குனர் ஆர்த்தி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், வருகிற ஆகஸ்ட் 28ஆம் தேதி பள்ளி மேலாண்மை குழு கூட்டங்களை கூட்ட வேண்டும் என்றும், அதில் பல்வேறு பொருள்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

இந்த கூட்டத்தில் குறிப்பாக, போதைப் பொருட்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும், பள்ளி மாணவர்களின் வாழ்க்கையை போதைப்பொருள் சீரழிக்கிறது என்றும் தெரிவித்துள்ள அவர், பள்ளியில் இருந்து 100 மீட்டர் தொலைவு வரை போதை பொருள், புகையிலை போன்ற பொருட்கள் விற்பனை இல்லாததை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது, அரசின் உத்தரவை மீறி போதைப்பொருட்கள் விற்பனை நடந்தால் காவல்துறைக்கு உடனடியாக புகார்களை அளிக்க வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
பள்ளிக் கல்வித் துறை
பள்ளி மாணவர்
கல்வி

Latest Videos
Recommended Stories
Recommended image1
தமிழக அரசியலில் ட்விஸ்ட்.. புதிய கட்சி தொடங்கினார் சசிகலா.. எம்.ஜி.ஆர், ஜெ., படங்களுடன் கொடி!
Recommended image2
26 வயது அபிராமி இருந்த அந்த கோலம்! நேரில் பார்த்த கணவருக்கு நடந்த அதிர்ச்சி.! போலீஸ் விசாரணையில் பகீர்!
Recommended image3
21 தான் தர முடியும்.. இஷ்டம்னா இருங்க இல்லைனா.. கெத்து காட்டும் திமுக.. புலம்பும் கதர்சட்டைகள்!
Related Stories
Recommended image1
கொத்தாக வரும் 3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு குஷியான அறிவிப்பு
Recommended image2
ஆசிரியர்கள் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது! இனி அவ்வளவுதான்! செக் வைத்த பள்ளிக்கல்வித்துறை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved