MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மகளுக்கு வரதட்சணை கொடுமை! இருட்டு கடையை கேட்கும் கணவர் வீட்டார்! பரபரப்பு புகார்! நடந்தது என்ன?

மகளுக்கு வரதட்சணை கொடுமை! இருட்டு கடையை கேட்கும் கணவர் வீட்டார்! பரபரப்பு புகார்! நடந்தது என்ன?

திருநெல்வேலி பிரபல இருட்டுக்கடை அல்வா குடும்பத்தில் வரதட்சணை புகார். கடையை தனது பெயரில் எழுதித் தரக் கோரி மிரட்டுவதாக மகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கணவர் வீட்டார் இதை மறுத்துள்ளனர்.

2 Min read
Author : vinoth kumar
| Updated : Apr 17 2025, 11:38 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
iruttu kadai halwa

iruttu kadai halwa

திருநெல்வேலி இருட்டு கடை அல்வா

தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் புகழ்பெற்றது திருநெல்வேலி இருட்டு கடை அல்வா. கடந்த பிப்ரவரி மாதம் கள ஆய்வுக்காக நெல்லை சென்ற முதல்வர் ஸ்டாலின் இருட்டுக்கடைக்கு சென்று அல்வா வாங்கி சாப்பிட்டார். இப்படி புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா குடும்பத்தினர்  நெல்லை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். 

25
iruttu kadai halwa owner dowry complaint

iruttu kadai halwa owner dowry complaint

வரதட்​சணை புகார்

திருநெல்வேலி இருட்டுக்கடையை நடத்தி வருபவர் ஹரிசிங், கவிதா தம்​ப​தி​. இவரது மகள்  ஸ்ரீகனிஷ்கா. இவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் கோவையை சேர்ந்த பல்ராம் சிங் என்பவருடன் வெகு விமர்சியாக திருமணம் நடந்தது. இதுதொடர்பாக புகைப்படம், வீடியோ இணையத்தில் வைரலானது. இந்நிலையில்  பல்ராம் சிங் வரதட்​சணை​யாக இருட்​டுக்​கடையை கேட்பதாக ஸ்ரீகனிஷ்கா நெல்லை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
‘

35
Dowry Harassment

Dowry Harassment

கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு

இதனையடுத்து தனது தாயாருடன் செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்ரீகனிஷ்கா: என் கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறார். அவரிடம் என்னை கூட்டிச் சென்று அடிமையாக இருக்க சொல்லி டார்ச்சர் செய்தார். அப்படி செய்யவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு செய்துவிடுவேன் என்று மிரட்டினார்.  விவாகரத்து கேட்டு மிரட்டுவதாக கூறினார். 

45
dowry case Tamil Nadu

dowry case Tamil Nadu

இருட்டுக்கடையை வரதட்சணையாக கேட்கும் கணவர் குடும்பத்தினர்

கனிஷ்காவின் தாயார் கூறுகையில்: திரு​மண​மாகி ஒரு மாதம்​கூட ஆகாத நிலை​யில், என் மகளை வரதட்​சணை கேட்டு அவரது கணவர் கொடுமைப்​படுத்தி உள்ளனர். பல்​ராம்​சிங் வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது திருமணத்திற்கு பின்னர்தான் தெரியவந்தது. இதுகுறித்து வெளியே கூறி​னால் உன்னை கொலை செய்து விடு​வேன் என்று பல்​ராம்​சிங், எனது மகளை மிரட்​டி​யுள்​ளார். கடும் வேதனை​யில் இருந்த எனது மகள் கடந்த மாதம் கோவையி​லிருந்து நெல்லைக்கு வந்து​விட்​டார். மறு​நாளே எங்​கள் வீட்​டுக்கு வந்த பல்​ராம்​சிங் மற்​றும் அவரது குடும்​பத்​தினர் உங்​கள் மகளு​டன் வாழ வேண்​டும் என்​றால் இருட்​டுக்கடை அல்வா கடையை தனது பெயரில் எழுதி தர வேண்டும் என்று மிரட்டுகின்றனர்.  இந்​த பிரச்​சினை குறித்து தமிழக முதல்​வரின் தனிப் பிரிவுக்​கும் மனு அளித்​துள்​ளோம் என்றனர். 

55
Tirunelveli Iruttu Kadai

Tirunelveli Iruttu Kadai

பொய்யான புகார்கள்

இதனை கணவர் வீட்டார் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். இருட்​டுக்​கடையை நாங்​கள் கேட்​ப​தாக கூறு​வது ஆதா​ரமற்​றது. அதிக சொத்துக்களை வைத்துள்ள நாங்கள் ஏன் வரதட்​சணை கேட்​கப் போகிறோம். எங்​கள் சொத்​துகளை அபகரிக்​கும் நோக்​கில் பொய்யான புகார்களைக் கூறுகின்​றனர் என தெரிவித்துள்ளார். 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
காவல்
தமிழ்நாடு
குற்றம்
நெல்லை

Latest Videos
Recommended Stories
Recommended image1
10-ம் வகுப்பு பொதுத் தேர்வு.. அரசு தேர்வுத் துறைக்கு ஆசிரியர்கள் வைத்த முக்கிய கோரிக்கை!
Recommended image2
மார்ச் 4 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. அட! அடுத்த மாதம் இத்தனை நாட்கள் லீவா? மாணவர்கள் குஷி!
Recommended image3
முழு அரசியல்வாதியாக மாறிய விஜய்.. 'அந்த' வார்த்தையால் கண்கலங்கிய தளபதி.. இதை கவனிச்சீங்களா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved