MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மதுரை மாநாட்டுக்கு திமுக கடும் தொல்லை கொடுத்தது..! விஜய் கட்சி நிர்வாகி கூறிய திடுக் தகவல்கள்

மதுரை மாநாட்டுக்கு திமுக கடும் தொல்லை கொடுத்தது..! விஜய் கட்சி நிர்வாகி கூறிய திடுக் தகவல்கள்

மதுரையில் நடைபெற்ற தவெக மாநாட்டுக்கு திமுக தொல்லை கொடுத்ததாக தவெகவின் முக்கிய நிர்வாகி ஒருவர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். மாநாட்டு ஏற்பாடுகள், கூட்ட நெரிசல், அரசியல் பின்னணி குறித்து விவரங்கள் வெளியாகி பரபரப்பு நிலவி வருகிறது.

2 Min read
Raghupati R
Published : Aug 24 2025, 08:38 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
மதுரை தவெமாநாடு
Image Credit : Google

மதுரை தவெமாநாடு

மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநாடு, ஆரம்பத்திலிருந்து மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பியது. விக்கிரவாண்டியில் நடந்த முதல் மாநாட்டை வெற்றிகரமாக முடித்ததால், தமிழகத்தில் தென்பகுதியான மதுரையிலும் அதே பிரம்மாண்டத்தை காட்டுவார்களா என்ற கேள்வி எழுந்தது. அந்த கேள்விகளுக்கு தெளிவான பதிலை, லட்சக்கணக்கான மக்கள் திரளும் கூட்டம் வெளிப்படையாகச் சொன்னது.

27
தவெக விஜய்
Image Credit : Asianet News

தவெக விஜய்

மாநாட்டின் ஒழுங்கு, கூட்ட மேலாண்மை, பிரம்மாண்டம் என அனைத்திலும் தவெக, திமுக-அதிமுக போன்ற பெரிய கட்சிகளுக்கு இணையாக செயல்பட்டது. தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்து இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர், கட்சியின் அடித்தள கட்டமைப்பு வளர்ச்சி அடைந்திருப்பதற்கான சான்றாக அமைந்தது. விஜய்யின் பேச்சு வழக்கம்போல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த பாணியில் இருந்து, விசில், கைதட்டல்களால் நிறைந்தது.

Related Articles

Related image1
Now Playing
அடைக்கலம் தேடி அரசியலுக்கு வரவில்லை எல்லாத்துக்கும் தயாராக வந்திருக்கிறேன்..! - கர்ஜிக்கும் விஜய்
Related image2
சூடா சுண்டலு.. விஜய் அண்ணா தம்பிங்க ஃபுல்லா மெண்டலு..! உதயநிதியை மிரட்டிய தவெக வெறியர்!
37
தவெக மாநாடு
Image Credit : Asianet News

தவெக மாநாடு

திமுக, பாஜக கட்சிகளையே முக்கிய எதிரிகளாகக் குறிப்பிட்ட விஜய், இந்த முறை பிரதமர் மோடியின் பெயரையும், “அங்கிள் ஸ்டாலின்” என முதல்வரையும் நேரடியாக விமர்சித்தார். இதுவரை பேசாத அதிமுக மீது தாக்குதல் நடத்தி, சீமானுக்கும் மறைமுக சவால் விடுத்தார். அதேசமயம் எம்ஜிஆர், விஜயகாந்த் ஆகியோருக்கு மரியாதை செலுத்தி, அதிமுக, தேமுதிக தொண்டர்களையும் கவனிக்க வைத்தார். கூட்டணியில் தானே தலைமை, ஆனால் எங்கள் கட்சியுடன் கூட்டணியில் சேர்வோருக்கு அதிகாரப் பங்கும் கிடைக்கும் எனவும் வலியுறுத்தினார்.

47
விஜய் பேச்சு
Image Credit : Asianet News

விஜய் பேச்சு

மொத்தத்தில், கூட்டத்தின் பரபரப்பு, விஜய்யின் தீவிர பேச்சு, எதிரிகளுக்கான தெளிவான அடையாளம், கூட்டணி சிக்னல்கள் என அனைத்தும் தவெக மாநாட்டை வெற்றிகரமாக்கியது. ஆனால், இந்த கட்சி முழுவதும் விஜய்யின் ஒரே முகத்தில் தான் இயங்குகிறது. அனுபவம் மிக்க தலைமைப் பின்புலம் இல்லாதது இன்னும் குறையாகவே தெரிகிறது. எனினும், பொதுமக்கள் கவனத்தை ஈர்த்த இந்த மாநாடு, தவெக கட்சிக்கும், விஜய்க்கும் நிச்சயம் பெரிய பிளஸ் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

57
ராஜ்மோகன் பேட்டி
Image Credit : Google

ராஜ்மோகன் பேட்டி

இந்நிலையில் தவெகவின் கொள்கை பரப்பு செயலாளர் ராஜ்மோகன் அளித்துள்ள பேட்டியில், "மாநாடு பக்கம் போக திமுக அரசு பல தடைகள் போட்டாங்க என்று சிலர் பேசுறாங்க. அதுக்கு தான் உண்மையை நான் விளக்கணும் என்று நினைக்கிறேன். தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநாடு நடக்க 3 நாள் இருந்த சமயத்தில், ஏற்கனவே புக் செய்திருந்த 80 சதவீதம் வேன்கள், வாகனங்கள் எல்லாரும் நாங்கள் வரமாட்டோம் என்று கூறிவிட்டார்கள்.

67
தவெக நிர்வாகி பேச்சு
Image Credit : X

தவெக நிர்வாகி பேச்சு

கட்டுத்தொகையை திரும்பி கையில் தந்துவிட்டார்கள். மேலிடத்து உத்தரவால் மாநாட்டுக்கு தேவையான சேர்களை தர முடியாது என்று அவர்களும் கைவிரித்து விட்டார்கள். தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே குழிகளை வெட்டி, ஒருவழி சாலையாக மாற்றினார்கள். மாநாட்டுக்கு யாரும் வரக்கூடாது என்று ஒவ்வொரு மாவட்டத்திலும் வாய் மொழி உத்தரவிட்டு பல்வேறு டோல்களில் நிறுத்த போலீசாரிடம் நிபந்தனை விதிக்கப்பட்டது. எங்களுக்கு தெரிந்த காவல்துறை நண்பர்கள் சிலர் இதனை எங்களுக்கு கூறினர்.

77
தமிழக வெற்றிக் கழகம்
Image Credit : TVK

தமிழக வெற்றிக் கழகம்

பல பேர் அரசு பேருந்துகளிலும், ரயில்கள் மூலமாகவும், லிப்ட் கேட்டும் வந்தார்கள். அதில் நானும் ஒருவன். நீங்கள் நினைத்து பார்க்காத பல வகையில் இடைஞ்சல்களை கொடுத்தனர். அதையும் மீறி காவலர்கள், பெண் காவலர்கள், மருத்துவத்துறையை சேர்ந்தவர்கள் மற்றும் மாநாடு நன்றாக நடக்க வேண்டும் என்று நினைத்த பலரும் எங்களுக்கு உறுதுணையாக இருந்தனர்” என்று கூறியுள்ளார் ராஜ்மோகன்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
டிவி.கே. விஜய்
தமிழக வெற்றி கழகம்
தளபதி விஜய்
மதுரை
திமுக

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved