MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Diwali 2026 Special Trains: தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா? ஸ்பெஷல் ரயில்கள் ரெடி.! உடனே புக் பண்ணுங்க.!

Diwali 2026 Special Trains: தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா? ஸ்பெஷல் ரயில்கள் ரெடி.! உடனே புக் பண்ணுங்க.!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை-நாகர்கோவில் மற்றும் சென்னை-போத்தனூர் இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரயில் எண்கள், நேரம் மற்றும் முன்பதிவு விவரங்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்!

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Oct 28 2026, 04:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
தெற்கு ரயில்வே அறிவித்த சிறப்பு ரயில்கள்.!
Image Credit : Asianet News

தெற்கு ரயில்வே அறிவித்த சிறப்பு ரயில்கள்.!

தீபாவளி பண்டிகை காலத்தில் பயணிகள் சிரமமின்றி தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று வர ஏதுவாக, தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கும் கொங்கு மண்டலத்திற்கும் செல்லும் மக்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும். கடைசி நேரக் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் நோக்கிலும், பயணிகள் தங்களின் பயணத்தை எளிதாகத் திட்டமிடும் நோக்கிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
தாம்பரம் – நாகர்கோவில் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் விவரம்
Image Credit : Chatgpt

தாம்பரம் – நாகர்கோவில் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் விவரம்

தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக தாம்பரம் மற்றும் நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

  1. தாம்பரம் – நாகர்கோவில் (வண்டி எண்: 06153): 2026 நவம்பர் 6 அன்று இரவு 11.55 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் இந்த ரயில், மறுநாள் மாலை 3.30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
  2. நாகர்கோவில் – தாம்பரம் (வண்டி எண்: 06154): மறுமார்க்கமாக, 2026 நவம்பர் 9 அன்று இரவு 9:00 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 11.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

நிற்கும் ரயில் நிலையங்கள்: இந்தச் சிறப்பு ரயில் பயணிகளின் வசதிக்காக செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி மற்றும் வள்ளியூர் ஆகிய முக்கிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

35
சென்னை சென்ட்ரல் – போத்தனூர் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் விவரம்
Image Credit : Getty

சென்னை சென்ட்ரல் – போத்தனூர் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் விவரம்

மேற்கு மாவட்டங்கள் மற்றும் கோவை பகுதிக்குச் செல்லும் பயணிகளுக்காக சென்னை சென்ட்ரல் - போத்தனூர் இடையே சிறப்பு ரயில் வசதி செய்யப்பட்டுள்ளது.

  1. சென்னை சென்ட்ரல் – போத்தனூர் (வண்டி எண்: 06023): 2026 நவம்பர் 6 அன்று இரவு 11.55 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் இந்த ரயில், மறுநாள் காலை 9.15 மணிக்கு போத்தனூர் சென்றடையும்.
  2. போத்தனூர் – சென்னை சென்ட்ரல் (வண்டி எண்: 06024): மறுமார்க்கமாக, 2026 நவம்பர் 9 அன்று இரவு 11.30 மணிக்கு போத்தனூரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 9.35 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

நிற்கும் ரயில் நிலையங்கள்: இந்த ரயில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

45
முன்பதிவு மற்றும் முக்கிய ரயில் ரத்து அறிவிப்பு
Image Credit : Getty

முன்பதிவு மற்றும் முக்கிய ரயில் ரத்து அறிவிப்பு

முன்பதிவு தொடக்கம்: மேற்கண்ட சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு 2026 அக்டோபர் 29 காலை 8:00 மணிக்கு தொடங்குகிறது. கடைசி நேரப் பதற்றத்தைத் தவிர்க்க விரும்பும் பயணிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி உடனடியாக தங்களது பயணச் சீட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

55
மதுரை – தாம்பரம் ரயில் ரத்து
Image Credit : Getty

மதுரை – தாம்பரம் ரயில் ரத்து

அதேவேளையில், நிர்வாக மற்றும் செயல்பாட்டுக் காரணங்களால் ஒரு குறிப்பிட்ட சிறப்பு ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாகத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி, 2026 அக்டோபர் 30 அன்று இரவு 7:00 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட வேண்டிய வண்டி எண் 06136 (மதுரை – தாம்பரம் ஒருவழி சிறப்பு எக்ஸ்பிரஸ்) முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

தீபாவளிப் பயணத்தைத் திட்டமிடும் பயணிகள் இந்த அறிவிப்புகளைக் கவனத்தில் கொண்டு தங்களின் பயணச்சீட்டுகளை முன் கூட்டியே பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
தொடர்வண்டி விதிகள்
ரயில் பயணப் பெட்டி விதிகள்
ரயில் டிக்கெட் முன்பதிவு
தொடர்வண்டி பயணச்சீட்டு
பயிற்சிகள்
 
3rd TEST • SA vs AUS
Live
SASA
329
AUSAUS
(31.5 ov)111/2
Day 2 - Session 2
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Recommended Stories
Recommended image1
Thalai Deepavali : தலை தீபாவளி 2026.. புதுமணத் தம்பதிகளுக்கு சீர் கொடுப்பது முதல் விருந்து வரை.. மறைந்திருக்கும் பாரம்பரிய ரகசியங்கள்!
Recommended image2
Driverless Train: டிரைவரே இல்லாமல் சீறிப்பாயும் மெட்ரோ ரயில்கள்! சென்னையில் வரப்போகும் மெகா மாற்றம்!
Recommended image3
Now Playing
மக்கள் தொண்டே மகேசன் தொண்டு : சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவுரை !
Related Stories
Recommended image1
Vietjet 11 Flight Offer: ரூ.11-ல் விமான டிக்கெட்! மாலத்தீவுக்கு புதிய வழித்தடம் தொடங்கும் தேதி அறிவிப்பு
Recommended image2
Indian Railways: ரயில் டிக்கெட் ஆன்லைனில் எடுப்பதா, கவுன்டரில் வாங்குவதா? எதில் உறுதியாகும் வாய்ப்பு அதிகம்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved