- Home
- Tamil Nadu News
- Mettur Dam : டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதல்வர் விஜய்... மாஸ் வரவேற்பு கொடுத்த மக்கள்
Mettur Dam : டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதல்வர் விஜய்... மாஸ் வரவேற்பு கொடுத்த மக்கள்
CM Vijay Open Mettur Dam : டெல்டா மாவட்டங்களின் பாசனத் தேவைக்காக, முதல்வர் ச. ஜோசப் விஜய் இன்று சேலம் மாவட்டத்திற்குச் சென்று மேட்டூர் அணையைத் திறந்து வைத்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

CM Vijay Open Mettur Dam
டெல்டா மாவட்டங்களின் பாசன வசதிக்காக காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவதற்காக, முதல்வர் ச. ஜோசப் விஜய் இன்று சேலம் மாவட்டத்திற்கு சென்றார். அங்கு மேட்டூரில் உள்ள ஸ்டான்லி நீர்த்தேக்கத்தின் மதகுகளை அவர் திறந்து வைத்தார்.
இன்று காலை 11.40 மணிக்கு முதல்வர் அணையைத் திறந்து வைத்தார். அணையின் நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தைப் பொறுத்து, செப்டம்பர் 1 முதல் 45 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட முடிவு செய்யப்பட்டு உள்ளது.
குறுவை சாகுபடிக்காக நீர் திறப்பு
காவிரி டெல்டா பகுதியில் குறுவை சாகுபடிக்காக, வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு காவிரிப் படுகையில் போதிய மழை இல்லாததாலும், அணையின் நீர்மட்டம் குறைவாக இருந்ததாலும் அணை திறப்பு தள்ளிப்போனது. மே 10-ஆம் தேதி முதல்வராகப் பதவியேற்ற பிறகு, விஜய் மேட்டூர் அணையை திறந்து வைப்பது இதுவே முதல் முறை. காவிரி நதிநீரைப் பகிர்ந்துகொள்வதில் தமிழ்நாடுக்கும் கர்நாடகாவுக்கும் இடையே தொடர்ந்து தகராறு நீடித்துவரும் சூழலில், இந்த அணை திறப்பு நிகழ்வு நடந்துள்ளது.
தாமதம் ஏன்?
காவிரி நீர் பங்கீட்டில் கர்நாடகா விட்டுப்போன தண்ணீரைத் திறந்துவிட உத்தரவிடக் கோரி தமிழ்நாடு மனு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. ஆனால், தாங்கள் ஏற்கனவே குறிப்பிட்ட அளவை விட அதிக நீரைத் திறந்துவிடுவதாக கர்நாடகா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அடங்கிய அமர்வு, இது தொடர்பான அடுத்தகட்ட தகவல்களைப் பதிவு செய்யுமாறு இரு தரப்பினருக்கும் உத்தரவிட்டு, வழக்கை செப்டம்பர் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. தமிழ்நாடு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன், "காவிரி நீர் மேலாண்மை ஆணையம் சுட்டிக்காட்டிய பிறகும், கர்நாடகா தராமல் தேக்கி வைத்துள்ள நீரைத் திறந்துவிடவில்லை" என்று குற்றம் சாட்டினார்.
நீர்பங்கீடு பிரச்சனை
தமிழ்நாட்டில் கணிசமான விவசாய நிலங்கள் காவிரி நீரை நம்பியுள்ளன. எனவே, தேக்கி உள்ள நீரைத் திறந்துவிடுவதற்கான மாநிலத்தின் கோரிக்கையை மறுபரிசீலனை செய்யுமாறு அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் வைத்தியநாதன் வலியுறுத்தினார். கர்நாடகா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான், "நிர்ணயிக்கப்பட்ட 9,000 கன அடிக்கு எதிராக, ஆகஸ்ட் 30-ஆம் தேதி 9,888 கன அடி நீரை மாநிலம் திறந்துவிட்டுள்ளது ஆகஸ்ட் 12-ஆம் தேதியிலிருந்து கர்நாடகா நீர் திறப்பை 11,000-லிருந்து 12,000 கன அடியாக அதிகரித்துள்ளதை நீதிமன்ற அமர்வு குறிப்பிட்டது.
காவிரி நீர் திறப்பு தொடர்பான CWMA-வின் உத்தரவுகளை அமல்படுத்தக் கோரி தமிழ்நாடு முன்னதாக உச்ச நீதிமன்றத்தை நாடியிருந்தது. போதிய நீர் இல்லாததால் விவசாயம் பாதிக்கப்படும் என்ற கவலையின் மத்தியில், தனக்குரிய காவிரி நீரைப் பெற தமிழ்நாடு போராடி வருகிறது.

