MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மாணவர்களுக்கு கொண்டாட்டம்.! இந்த வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தேவையில்லை.? வெளியாக போகும் அசத்தல் அறிவிப்பு

மாணவர்களுக்கு கொண்டாட்டம்.! இந்த வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தேவையில்லை.? வெளியாக போகும் அசத்தல் அறிவிப்பு

தமிழகத்தின் புதிய கல்விக் கொள்கை நாளை வெளியிடப்படவுள்ளது. இருமொழிக் கொள்கை, பொதுத்தேர்வுகள் ரத்து உள்ளிட்ட பரிந்துரைகள் ஏற்கப்படுமா? மாணவர்களின் எதிர்காலத்தை எவ்வாறு இந்தக் கொள்கை மாற்றியமைக்கும்?

2 Min read
Author : Ajmal Khan
Published : Aug 07 2025, 01:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தமிழகத்தில் கல்வி திட்டம்
Image Credit : Google

தமிழகத்தில் கல்வி திட்டம்

கல்வி தான் மாணவர்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கு வழி வகுத்து கொடுக்கும் எனவே சிறந்த கல்வியை உருவாக்க பல்வேறு வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது. அந்த வகையில் 2020ஆம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கை வெளியானது. இதற்கு  தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்தது, குறிப்பாக மும்மொழிக் கொள்கை, பொதுதேர்வு, நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகள் போன்ற அம்சங்களுக்கு எதிரான அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவத்தது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
தமிழக கல்வி கொள்கை
Image Credit : Google

தமிழக கல்வி கொள்கை

இதனையடுத்து , தமிழ்நாட்டிற்கென தனித்துவமான மாநில கல்விக் கொள்கையை உருவாக்க தி.மு.க. அரசு 2022 ஜூன் 1-ல் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி த. முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது. 

2024 ஜூலை 1-ல் இந்தக் குழு தனது அறிக்கையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது. அந்த பரிந்துரையில், தமிழ் முதல் மொழியாகவும், ஆரம்பக் கல்வி முதல் பல்கலைக்கழக நிலை வரை பயிற்று மொழியாகவும் இருக்க வேண்டும். மாநிலம் முழுவதும் தமிழ் மற்றும் ஆங்கிலம் இருமொழிக் கொள்கை தொடர வேண்டும். 3, 5, மற்றும் 8-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட வேண்டும். நீட் தேர்வு இருக்கக்கூடாது என பரிந்துரைகள் வழங்கப்பட்டது. 

34
தமிழக கல்வி கொள்கை- பரிந்துரை
Image Credit : x/anbil mahesh

தமிழக கல்வி கொள்கை- பரிந்துரை

மேலும் நீட் உள்ளிட்ட தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் மையங்கள் மற்றும் தனியார் கல்வி நிலையங்கள் விளம்பரப் படுத்துவதை தடை செய்ய வேண்டும். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 6 வயது பூர்த்தியானவர்கள் தான் முதல் வகுப்பில் சேர முடியும் 5 வயது பூர்த்தியாளர்கள் 1-ம் வகுப்பில் சேரலாம் என பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

மேலும் இரு பெற்றோர்களையும் இழந்த மாணவர்களுக்கு உயர் கல்வியில் 1 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும், ஸ்போக்கன் இங்கிலீஷ்” தவிர “ஸ்போக்கன் தமிழ்” மீது முதன்மையாக கவனம் செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் தமிழக அரசுக்கு வழங்கப்பட்டது.

44
தமிழக கல்வி கொள்கையை வெளியிடும் முதலமைச்சர்.?
Image Credit : our own

தமிழக கல்வி கொள்கையை வெளியிடும் முதலமைச்சர்.?

இந்த அறிக்கை மீது தமிழக அரசு பல்வேறு ஆலோசனைகளை நடத்தியது. இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் நாளை தமிழக கல்வி கொள்கையை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  எனவே  இரு மொழிக்கொள்கை, 3, 5, மற்றும் 8-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் ரத்து போன்ற முக்கிய பரிந்துரைகள் அரசு சார்பாக ஏற்கப்படும் என தகவல் கூறப்படுகிறது. மேலும் வேறு என்ன என்ன பரிந்துரைகளை அரசு ஏற்கவுள்ளது என நாளை வெளியாகவுள்ள தமிழக கல்வி கொள்கையில் தெரியவரும்

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
பள்ளிக் கல்வித் துறை
விடுமுறை
பள்ளி மாணவர்
தமிழ்நாடு அரசு
மு. க. ஸ்டாலின்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
மதுரையில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சரமாரி கேள்வி! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
Recommended image2
Now Playing
சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு... பெண்கள் பாதுகாப்பு எங்கே? தவெக அரசை கடுமையாக தாக்கிய எம்பி கனிமொழி!
Recommended image3
Now Playing
சென்னையில் திமுக எம்பி கனிமொழி தலைமையில் பிரம்மாண்ட போராட்டம்! தவெக அரசுக்கு எதிராக முழக்கம்!
Related Stories
Recommended image1
விவசாயிகளுக்கு கொத்து கொத்தாக சலுகை.! 70 % மானியம்- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
Recommended image2
மாதம் ரூ. 8000ஆயிரம் உதவித்தொகை.! மாணவர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- அரசு அசத்தல் அறிவிப்பு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved