அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
வடகிழக்கு பருவமழையால் தமிழகம் முழுவதும் கனமழை பெய்துள்ளது. ஃபெஞ்சல் புயலால் பல மாவட்டங்களில் வரலாறு காணாத மழை. பொங்கல் தினத்தில் மழை பெய்யுமா என்பது குறித்து வானிலை மையம் தகவல்.
Tamilnadu Rain
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. குறிப்பாக ஃபெஞ்சல் புயல் காரணமாக வரலாறு விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்தது. இதனால், ஏரி, குளங்கள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. இதனால் மழை என்ற வார்த்தையை கேட்டாலே பொதுமக்கள் பீதி அடைகின்றனர். இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு பிறகு தான் வட கிழக்கு பருவமழை முடியும் என வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில் பொங்கல் தினத்தில் மழை பெய்யுமா? பெய்யாதா? என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
tamilnadu weather update
அதன்படி கிழக்கு இலங்கைக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
Heavy Rain

TN Rain
இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் அதாவது 10 மணிவரை 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
Rain News
மேலும் கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை தெரிவித்துள்ளது.