பொதுமக்கள் எதிர்பார்த்த செய்தி வந்தாச்சு! தீப மை எப்போது கிடைக்கும்? கிரிவலம் செல்ல உகந்த நேரம் என்ன?
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மார்கழி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் என்ன என்பதை கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
Tiruvannamalai Girivalam
நினைத்தாலே முக்தி தரக் கூடிய புண்ணிய தலமாக விளங்கக்கூடியது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில். பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும் விளங்குகிறது. இங்கு சிவனே மலை வடிவாக காட்சி தருவதாக ஐதீகம். இங்குள்ள 14 கிலோ மீட்டர் அளவிலான சுற்றுவட்டப்பாதையில் மாதந்தோறும் வரும் பவுர்ணமி அன்று வெளியூர் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் ஓம் நமச்சிவாய என்று உச்சரித்தப்படியே கிரிவலம் வருகின்றனர்.
Pournami Girivalam
குறிப்பாக ஆந்திரா, தெலங்கானாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை பவுர்ணமி தினத்தில் குவிந்து அருணாச்சலேஸ்வரரை வழிபட்டு அவரின் அருளை பெற்று செல்கின்றனர். மன குறையுடன் வந்து கிரிவலம் செல்பவர்களின் குறையை நிவர்த்தி செய்வதால் திரும்ப திரும்ப அண்ணாமலையாரை தரிசிக்க வருகின்றனர். அன்றைய தினம் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம்.
Annamalaiyar Temple
இந்நிலையில் மார்கழி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, மார்கழி மாத பவுர்ணமி வருகிற 13-ம் தேதி அதிகாலை 5.29 மணிக்கு தொடங்கி, மறுநாள் அதிகாலை 4.46 மணிக்கு நிறைவு பெறுகிறது. அந்த நேரத்தில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Aruthra Darshan Festival
மேலும், ஆருத்ரா தரிசன வழிபாடும் 13-ம் தேதி நடைபெற உள்ளது. அப்போது மகா தீபம் ஏற்றப்பட்ட கொப்பரையில் சேகரிக்கப்பட்ட மகா தீப மை நடராஜருக்கு சாத்தப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறும். அதன்பிறகு பக்தர்களுக்கு வழங்கப்படும் என என்பது குறிப்பிடத்தக்கது.