MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • இனி அலைச்சல் இல்லை.. வீட்டில் இருந்தே 'கிராம நத்தம்' பட்டா பெறலாம்.. தமிழக அரசின் சூப்பர் அப்டேட்!

இனி அலைச்சல் இல்லை.. வீட்டில் இருந்தே 'கிராம நத்தம்' பட்டா பெறலாம்.. தமிழக அரசின் சூப்பர் அப்டேட்!

Grama Natham Patta: 'கிராம நத்தம்' பட்டா ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்கும் வசதியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar A
Published : Apr 17 2026, 07:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
12
கிராம நத்தம் பட்டா மாறுதல்
Image Credit : AI

கிராம நத்தம் பட்டா மாறுதல்

பொதுவாக நிலங்களை நன்செய், புன்செய் என பிரிப்பார்கள். ஆனால், மக்கள் குடியிருப்பதற்காக ஒதுக்கப்பட்ட நிலங்களே 'கிராம நத்தம்' என அழைக்கப்படுகின்றன. பல ஆண்டுகளாக கிராமப்புறங்களில் மக்கள் இத்தகைய நிலங்களில் வசித்து வந்தாலும், பலரிடம் முறையான 'பட்டா' இருப்பதில்லை. இதனால் கிராம நத்தம் பட்டா மாறுதலுக்கு பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு பலமுறை நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டியிருந்தது.

இப்போது அந்த முறையை எளிமைப்படுத்தி, ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்கும் வசதியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் அருகில் உள்ள அரசு இ-சேவை மையங்கள் மூலமாகவோ அல்லது தங்களின் சொந்த கணினி/மொபைல் மூலமாகவோ பட்டா மாறுதலுக்கு விண்ணப்பம் செய்யலாம்.

இனி அலைச்சல் தேவையில்லை

இவ்வாறு ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன், அந்த விவரம் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலருக்கு டிஜிட்டல் முறையில் செல்லும். இதன்பிறகு அவர் நேரில் வந்து இடத்தை ஆய்வு செய்து ஆன்லைனிலேயே பரிந்துரை செய்வார். இதன் காரணமாக நீங்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் வரிசையில் நிற்க வேண்டியதோ அல்லது இடைத்தரகர்களை அணுக வேண்டிய அவசியமும் இல்லை.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
22
விண்ணப்பிப்பது எப்படி?
Image Credit : Asianet News

விண்ணப்பிப்பது எப்படி?

கிராம நத்தம் பட்டா மாறுதலுக்கு பொதுமக்கள் எப்படி விண்ணப்பிக்க வேன்டும் என நீங்கள் கேட்கலாம்.

* முதலில் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இ-சேவை தளம் அல்லது eservices.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.

* உங்கள் பயனர் விவரங்களைக் கொண்டு லாகின் செய்யுங்கள். ஏற்கெனவே கணக்கு இல்லையேன்றால் புதிய கணக்கை உருவாக்கலாம்.

* பின்பு மெனுவில் பட்டா மாறுதல் விண்ணப்பம் (Apply for Patta Transfer) என்பதை தேர்வு செய்யவும்.

* இதனைத் தொடர்ந்து மாவட்டம், வட்டம், கிராமம் ஆகியவற்றைத் தேர்வு செய்து, புல எண் (Survey Number) மற்றும் உட்பிரிவு எண்ணைக் குறிப்பிட வேண்டும்.

* இதன்பிறகு கேட்கப்படும் பத்திரம், EC போன்ற ஆவணங்களை ஸ்கேன் செய்து PDF வடிவில் பதிவேற்றவும்.

* தொடர்ந்து பட்டா மாறுதலுக்கான அரசு நிர்ணயித்த கட்டணத்தை ஆன்லைனில் (Net Banking/UPI/Card) செலுத்த வேண்டும்.

* இறுதியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டதும் ஒரு விண்ணப்ப எண் உருவாக்கப்படும். அதனை வைத்து உங்கள் விண்ணப்பத்தின் நிலையை அவ்வப்போது சரிபார்த்து கொள்ள முடியும்.

என்னென்ன ஆவணங்கள் வேண்டும்?

கிராம நத்தம் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்க கிரயப் பத்திரம் (Sale Deed) அல்லது தான செட்டில்மென்ட் பத்திரம், வில்லங்கச் சான்றிதழ் (EC - Encumbrance Certificate), ஆதார் அட்டை மற்றும் இதர அடையாளச் சான்றுகள், பழைய வரி ரசீதுகள் ஆகியவை வைத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
தமிழ்நாடு அரசு
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Govt Scheme: விவசாயிகளுக்கு ஜாக்பாட்! 50% மானியத்தில் டிராக்டர், பவர் டில்லர் – தமிழ்நாடு அரசின் அதிரடி திட்டம்!
Recommended image2
TNEB : மின்தடையை இந்த வாட்ஸ்ஆப் எண்ணில் புகார் அளிக்கலாம்! 24 மணி நேரமும் சேவை!
Recommended image3
PMFME Scheme: சொந்தமாக ஊறுகாய், மசாலா பிசினஸ் தொடங்க விருப்பமா? ரூ.10 லட்சம் மானியம் வழங்கும் மத்திய அரசு; விண்ணப்பிக்கும் வழிமுறைகள்!
Related Stories
Recommended image1
86,000 பேருக்கு புறம்போக்கு நிலத்துக்கான பட்டா.! யாருக்கெல்லாம் கிடைக்கும்- வருவாய் துறை புதிய அறிவிப்பு
Recommended image2
பட்டா மாற்றம்: இறந்தவர்களின் பெயர்களை நீக்கி, வாரிசுகள் பெயர் சேர்க்க புதிய வழிமுறை...
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved