- Home
- Tamil Nadu News
- மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்.! பக்தர்களுக்கு அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட அறநிலையத்துறை
மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்.! பக்தர்களுக்கு அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட அறநிலையத்துறை
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழாவையொட்டி மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண உற்சவத்திற்கு மொய் காணிக்கை செலுத்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் அறநிலையத்துறை இணையதளம் மற்றும் கோயில் இணையதளம் மூலம் மொய் காணிக்கை செலுத்தலாம்.

Madurai Meenakshi Thirukalyanam தமிழகத்தில் பல ஆயிரம் கோயில்கள் உள்ளது. இதில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உலக பிரசித்து பெற்றது. இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் பழமையான கோயில்களில் ஒன்றாகும். இங்கு பிரமாண்டமான கோபுரங்கள், ஆயிரம் தூண்களுடன் கூடிய ஆயிரங்கால் மண்டபம்,
பல மண்டபங்கள், சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள் என பல சிறப்புகளை கொண்டதாகும், தமிழகத்தில் உள்ள 366 மீனாட்சி அம்மன் கோயில்களின் மூலக்கோயில் ஆகும். இந்த கோயிலுக்கு வெளிநாடுகளில் இருந்து வெளி மாநிலங்களில் இருந்தும் பல லட்சம் பேர் தினந்தோறும் வந்து செல்கின்றனர்.
Madurai Meenakshi
திருக்கல்யாணம் மொய் காணிக்கை
இந்த நிலையில் மதுரை மீனாட்சி கோயிலில் சித்திரை திருவிழாவையொட்டி தினந்தோறும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறவுள்ளது. அந்த வகையில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண உற்சவத்திற்கு மொய் காணிக்கை தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் புகழ் பெற்ற சித்திரை பெருவிழா வருகின்ற 28.04.2025-ஆம் தேதி முதல் 10.05.2025-ஆம் தேதி வரை சிறப்பாக நடைபெறவுள்ளது.
meenakshi thirukalyanam 2025
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில்
மேற்படி பெருவிழாவில் முக்கிய உற்சவமான திருக்கல்யாண உற்சவம் 08.05.2025-ஆம் தேதி இத்திருக்கோயிலில் வடக்காடி வீதியில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் காலை 8.35 மணி முதல் 8.59 மணிக்குள் நடைபெறவுள்ளது. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண உற்சவத்திற்கு ரூ.50/- மற்றும் ரூ.100/- மதிப்புக் கொண்ட மொய் காணிக்கை செலுத்த விரும்பும் பக்தர்களுக்காக இந்து சமய அறநிலையத்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
chithirai thiruvizha 2025
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் சித்திரை திருவிழா
இதன் படி அறநிலையத்துறையின் இணையதளமான (https://hrce.tn.gov.in) மற்றும் இத்திருக்கோயிலின் இணையதளத்தில் (dutps://maduraimeenakshi.hrce.tn.gov.in) 08.05.2025 அன்று மொய் காணிக்கை செலுத்திட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் இதனைப் பயன்படுத்தி மொய் காணிக்கை செலுத்தலாம் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கபட்டுள்ளது