MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தொடர் 5 நாட்கள் விடுமுறை.! பள்ளி மாணவர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கு போக்குவரத்து துறை குட் நியூஸ்

தொடர் 5 நாட்கள் விடுமுறை.! பள்ளி மாணவர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கு போக்குவரத்து துறை குட் நியூஸ்

தமிழ் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னை மற்றும் பிற முக்கிய நகரங்களிலிருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்.

2 Min read
Author : Ajmal Khan
| Updated : Apr 09 2025, 07:27 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

School and college Continuous holiday : சொந்த ஊரில் உரிய வேலை கிடைக்காத காரணத்தால் வெளியூர்களுக்கு வேலை தேடி லட்சக்கணக்கானோர் பயணம் செய்து வருகிறார்கள். இந்த நிலையிலை வெளியூரில் வேலை பார்ப்பவர்களுக்கு தொடர் விடுமுறை கிடைத்தால் சொந்த ஊருக்கு பறந்து விடுவார்கள். அந்த வகையில் தமிழ் புத்தாண்டையொட்டி தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறையானது கிடைக்கவுள்ளது.

இதன் படி நாளை வியாழக்கிழமை மஹாவீர் ஜெயந்தி அரசு விடுமுறை, இதனை தொடர்ந்து வெள்ளிக்கிழமை மட்டும் ஒரு நாள் விடுமுறை எடுத்தால், அதனை தொடர்ந்து சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை, திங்கட் கிழமை தமிழ் புத்தாண்டு விடுமுறை என தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை கிடைக்கும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
School holiday special bus

School holiday special bus

சிறப்பு பேருந்து இயக்கம்

எனவே இந்த தொடர் விடுமுறையை பயன்படுத்தி சுற்றுலா மற்றும் வெளியூருக்கு புறப்பட பொதுமக்கள் திட்டமிட்டுள்ளனர். எனவே பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் சிறப்பு பேருந்து தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  

நாளை (10/04/2025 (வியாழக்கிழமை மஹாவீர் ஜெயந்தி) நாளை மறுதினம் (11/04/2025 வெள்ளிக் கிழமை) 12/04/2025 (சனிக்கிழமை), 13/04/2025 (ஞாயிற்றுக் கிழமை) மற்றும் 14/04/2025 அன்று தமிழ் புத்தாண்டு தொடர் விடுமுறையை முன்னிட்டு 09/04/2025, 11/04/2025 மற்றும் 12/04/2025 ஆகிய நாட்களில் சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

36
koyambedu special bus

koyambedu special bus

கோயம்பேட்டில் இருந்து சிறப்பு பேருந்து

இதனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதன் படி, சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 09/04/2025 (புதன் கிழமை) அன்று 50 பேருந்துகளும் 11/04/2025 (வெள்ளிக் கிழமை) அன்று 100 பேருந்துகளும் மற்றும் 12/04/2025 (சனிக்கிழமை) அன்று 95 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

46
kilambakkam bus

kilambakkam bus

கிளாம்பாக்கத்தில் இருந்து சிறப்பு பேருந்து

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி. கும்பகோணம், மதுரை. திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி. தூத்துக்குடி. கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 09/04/2025 (புதன் கிழமை) அன்று 190 பேருந்துகளும், 11/04/2025 (வெள்ளிக் கிழமை) அன்று 525 பேருந்துகளும் மற்றும் 12/04/2025 (சனிக்கிழமை) அன்று 380 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மாதாவரத்திலிருந்து 09/04/2025 அன்று 20 சிறப்பு பேருந்துகளும், 11/04/2025 மற்றும் 12/04/2025 ஆகிய நாட்களுக்கு 20 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது.

56
tamil new year special bus

tamil new year special bus

சொந்த ஊர்களுக்கு திரும்ப சிறப்பு பேருந்து

இது மட்டுமில்லாமல் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 300 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதே போல விடுமுறை முடிந்து சொந்த ஊர் மற்றும் பணி செய்யும் இடங்களுக்கு திரும்பிடும் வகையில்,  14.04.2025 திங்கள் அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

66
Bus ticket reservation

Bus ticket reservation

முன்பதிவு செய்து பயணியுங்கள்

இந்நிலையில், புதன்கிழமை அன்று 10,065 பயணிகளும், வெள்ளிக்கிழமை அன்று 14.898 பயணிகளும். சனிக்கிழமை அன்று 8,278 பயணிகளும் மற்றும் திங்கள் அன்று 12,399 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
விடுமுறை
பள்ளிகள் விடுமுறை
கோடை விடுமுறை சிறப்பு ரயில்
தமிழ்ப் புத்தாண்டு, 2025
தமிழ்நாடு அரசு பேருந்து
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Chennai IT Manager : “அண்ணா” என்று அழைப்பார்களே.. எப்படி வேலையை விட்டு நீக்குவேன்? 12 ஊழியர்களுக்காக கண்கலங்கிய சென்னை ஐடி மேலாளர்!
Recommended image2
Now Playing
மதுரையில் வண்டியூர் தீர்த்தக்காடு மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கினார் அமைச்சர் வன்னி அரசு!
Recommended image3
Tamil Nadu Schools: இனி இந்த கட்டணத்தை வாங்க கூடாது.. முதல்வர் விஜய் ஆட்சியில் மாணவர்களுக்கு நிம்மதி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved