MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • நாட்டில் எங்கானவது குற்றம் நடத்துச்சுனா நான்கு பக்கத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் முதல்வர் எங்கே? அண்ணாமலை!

நாட்டில் எங்கானவது குற்றம் நடத்துச்சுனா நான்கு பக்கத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் முதல்வர் எங்கே? அண்ணாமலை!

சென்னை அயனாவரத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜக தலைவர் அண்ணாமலை, காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

2 Min read
vinoth kumar
Published : Dec 08 2024, 05:50 PM IST| Updated : Dec 08 2024, 05:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Chennai Crime News

Chennai Crime News

சென்னை அயனாவரத்தில் கொஞ்சம் மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் மகளிர் கல்லூரியில் 3ம் ஆண்டு கல்லூரியில் படித்து வருகிறார். தாய் இறந்துவிட்டதால் தந்தை அரவணைப்பில் வளர்ந்து வருகிறார். இந்நிலையில் மகளுக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து அவரிடம் தந்தை கேட்ட போது தன்னுடன் படிக்கும் தோழி ஒருவர் மூலம் பழக்கமான ஆண் நண்பர்கள் அடிக்கடி வெளியே அழைத்து சென்று வந்ததாக கூறினார். இதுகுறித்து அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் 8 பேரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இதற்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

25
Annamalai

Annamalai

இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: சென்னை அயனாவரம் பகுதியில், மனநலம் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியை, ஏழு பேர் கொண்ட கும்பல், கடந்த பல மாதங்களாகப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியுள்ளனர் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இது குறித்து, மாணவியின் தந்தை, சென்னை அயனாவரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தும், குற்றவாளிகளை வெறும் எச்சரிக்கையோடு விடுதலை செய்திருக்கின்றனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

35
,College Students Abused

,College Students Abused

மாணவியின் உறவினர் ஒருவர் முயற்சியால், தற்போது மீண்டும் வழக்குப் பதிவு செய்து, இரண்டு குற்றவாளிகளைக் கைது செய்திருப்பதாகவும், ஐந்து பேர் தலைமறைவு ஆகிவிட்டதாகவும் கூறுகின்றனர். 

45
BJP Leader annamalai

BJP Leader annamalai

பாலியல் வன்முறை குறித்த புகாருக்கு, வெறும் எச்சரிக்கையோடு மட்டும் விடுதலை செய்யும் அதிகாரம், காவல்துறைக்கு யார் கொடுத்தது? தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு ஏற்கனவே அதல பாதாளத்தில் கிடக்கும்போது, பெண்கள், குறிப்பாக மன நலம் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவரைப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியிருப்பதை, எத்தனை எளிதாகக் கடந்து சென்றிருக்கிறார்கள்?

55
MK Stalin

MK Stalin

நாட்டில் பிற மாநிலங்களில் நடக்கும் குற்றச் செயல்களுக்கெல்லாம், முழு விவரம் தெரியும் முன்னரே நான்கு பக்கத்துக்குக் கண்டனம் தெரிவிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏன் இந்த சம்பவம் குறித்து எதுவும் பேசாமல் இருக்கிறார்? தன் பொறுப்பில் இருக்கும் தமிழகக் காவல்துறையை அவர் என்ன ரீதியில் கையாண்டு கொண்டிருக்கிறார் என்ற கேள்வி எழுகிறது. உடனடியாக, முதலமைச்சர் ஸ்டாலின் இது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பிஜேபி
சென்னை
குற்றம்
திமுக
மு. க. ஸ்டாலின்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved