MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • அதிமுகவில் இருந்து நீக்கம்! செந்தில் முருகன் எடுத்த அதிரடி முடிவு! அதிர்ச்சியில் இபிஎஸ்!

அதிமுகவில் இருந்து நீக்கம்! செந்தில் முருகன் எடுத்த அதிரடி முடிவு! அதிர்ச்சியில் இபிஎஸ்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, செந்தில் முருகனை கட்சியிலிருந்து நீக்கினார். வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில், செந்தில் முருகன் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார்.

1 Min read
Author : vinoth kumar
Published : Jan 21 2025, 12:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Erode East constituency

Erode East constituency

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த  ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை அடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதிக்கு பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியானது. இந்த இடைத்தேர்தலை அதிமுக, தேமுதிக, பாஜக புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. இதில், ஆளும் கட்சியாக திமுகவும், நாம் தமிழர் கட்சியும்  போட்டியிடுகின்றனர். 

24
Senthil Murugan

Senthil Murugan

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்த நிலையில் அதிமுக மாநகர மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணை செயலாளர் செந்தில்முருகன் சுயேட்சையாக களமிறங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. இவர் கடந்த 2023ம் ஆண்டு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் சின்னம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையால் அவர் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். பின்னர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.

34
Edappadi Palanisamy

Edappadi Palanisamy

இந்நிலையில் தலைமை உத்தரவை மீறி செயல்பட்ட செந்தில்முருகன் அக்கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பை வெளியிட்டார். வேட்பாளர் இறுதி பட்டியல் நேற்று வெளியான நிலையில் செந்தில்முருகன் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார். 

44
Muthusamy

Muthusamy

இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக ஈரோடு திமுக மாவட்ட செயலாளரும் வீட்டு வசதித்துறை அமைச்சருமான முத்துசாமி, ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் சந்திரகுமார் முன்னிலையில் செந்தில்முருகன் திமுகவில் இணைந்து எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அதிமுக
எடப்பாடி பழனிசாமி
திமுக

Latest Videos
Recommended Stories
Recommended image1
மெட்ரோ ரயில்களில் நாளை இலவசமாக பயணிக்கலாம்.. சூப்பர் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே!
Recommended image2
ரொம்ப பந்தா பண்ணும் இபிஎஸ்.. மற்றொரு புறம் புலம்புகிறார்.. அமைச்சர் கீதா ஜீவன் விளாசல்
Recommended image3
Now Playing
நல்லகண்ணுக்கு பாரத் ரத்னா விருதை வழங்க வேண்டும் - தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved