ஸ்டாலின், உதயநிதி வீட்டில் விரைவில் ரெய்டு உறுதி.! அடித்து சொல்லும் அதிமுக
திமுகவை வீழ்த்த அதிமுக-பாஜக கூட்டணி அமைத்துள்ளது. விரைவில் ஸ்டாலின், உதயநிதி வீடுகளில் ரெய்டு நடக்கும் என தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

Raids to be carried out soon at Stalin and Udhayanidhi houses : தமிழகத்தில் ஆளுங்கட்சியான திமுகவை வீழ்த்த அதிமுக, பாஜக திட்டம் வகுத்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக பாஜகவுடன் கூட்டணியை முறித்துக்கொண்ட அதிமுக, இனி எப்போதும் பாஜகவுடன் கூட்டணி இல்லையென்ற அறிவிப்பை வெளியிட்டது.
இதன் காரணமாக சிறுபான்மையினர் வாக்குகளை கவர திட்டமிட்டது. ஆனால் எதிர்பார்த்தபடி நாடாளுமன்ற தேர்தலில் சிறுபான்மையின மக்களின் வாக்குகள் அதிமுகவிற்கு செல்லவில்லை.
ADMK BJP alliance
அதிமுகவின் கூட்டணி நிலைப்பாடு
இதனையடுத்து 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு 10 மாத காலமே உள்ள நிலையில், திமுகவிற்கு எதிராக பலம் வாய்ந்த கூட்டணியை உருவாக்க அதிமுக காய் நகர்த்தியது. அதன் படி தவெகவிற்கு முதலில் தூது விட்ட நிலையில், கூட்டணி உடன்பாடு ஏற்படாத காரணத்தால் பாஜக பக்கம் திரும்பியது. இதனையடுத்து இரு தரப்பு பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி ஏற்பட்டுள்ளது.
DMK raid
தமிழகத்தில் 39ஆயிரம் கோடி ஊழல்
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா, தமிழகத்தில் பல ஆயிரம் கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். எனவே எந்த நேரமும் திமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் வீட்டில் ரெய்டு நடத்தப்படலாம் என்ற தகவல் வெளியானது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் அதிமுக மூத்த நிர்வாகியும், மாநிலங்களவை உறுப்பினருமான தம்பிதுரை ரெய்டு தொடர்பான தகவலை தெரிவித்துள்ளார்.
Thambidurai interview
கெஜ்ரிவால் நிலைமை ஸ்டாலினுக்கும் ஏற்படும்
கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு அதிகாரத்தின்படியே புதிய கூட்டணியை எடப்பாடி பழனிசாமி உருவாக்கியுள்ளதாக தெரிவித்தார். இந்த கூட்டணி குறித்த அச்சத்தில் முதல்வர் ஸ்டாலின் ஏதேதோ பேசி வருவதாக விமர்சித்தார். மதுபான ஊழல் வழக்கில் டெல்லியில் முதலமைச்சராக இருந்த கெஜ்ரிவால் சிறைக்கு சென்றாரோ அதே நிலை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் முதல்வர் ஸ்டாலினுக்கும் ஏற்படும் என கூறினார்.
Stalin House Raid
விரைவில் ஸ்டாலின் வீட்டில் ரெய்டு
தற்போது தமிழகத்தில் திமுக அமைச்சர் நேரு இல்லத்திலும், செந்தில் பாலாஜி இல்லத்திலும் தான் ரெய்டு நடக்கிறது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் எங்கே ரெய்டு நடக்கிறது என கேள்வி எழுப்பினார். எனவே விரைவில் முதலமைச்சர் முக.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சபரீசன் ஆகியோரது வீடுகளில் ரெய்டு நடப்பது உறுதி என தம்பித்துரை தெரிவித்தார்